கடிதங்களை மேடையில் வாசிக்கும் பெருமை மிக்க நிகழ்ச்சி!

 







கடிதங்களைப் படிப்போம் வாங்க!


இங்கிலாந்தில் கடிதங்களைப் படிப்பதை பிரபலமான திரைப்பட, நாடக கலைஞர்கள் செய்கிறார்கள். இதை லெட்டர்ஸ் லைவ் என்ற நிகழ்ச்சியாக நடத்துகிறார்கள். இதில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் அதிகம். கடிதங்களை நீங்கள் எப்படி தயாரிப்பீர்கள்? உங்களுக்கு நீங்களே எழுதுவதாக அல்லது பிறருக்கு எழுதியதை வைத்திருந்தால் கூட படிக்கலாம். யாரோ ஒருவருக்கு எழுத விரும்பியதைக் கூட எழுதி வந்து மேடையில் படிக்கலாம். 


இப்படி படிப்பதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. இங்கு வந்து கடிதங்களைப் படிக்க பெரிய முன்னேற்பாடுகள் எதையும் ஒருவர் செய்யவேண்டியதில்லை. கடிதங்களை எழுதிக்கொண்டு வந்து சத்தமாக படிக்க தெரிந்தால் போதும். ஆனால் இதற்கே பலரும் பதற்றப்படுகிறார்கள். ஏனெனில் திரைப்பட கலைஞர்களுக்கு இங்கு எப்படி முகத்தை உடலை வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறுவதில்லை. எனவே, கடிதங்களை படிக்கும்போது ஏற்படு்ம் உணர்வுகளை ஒருவர் எளிதாக பிறருக்கு கடத்த முடியும். சுற்றியிருக்கும் பார்வையாளர்களும் கடிதத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளை கவனித்துக் கேட்கிறார்கள். 


நீங்கள் கடிதங்களை படிக்கும்போது, இன்னொரு மனிதரின் தனிப்பட்ட குரலைக் கேட்கிறீர்கள். நீங்கள் சத்தமாக கடிதங்களை படிக்கும்போது, இன்னொருவரின் குரலில்தான் அதை செய்கிறீர்கள். பார்வையாளர்களுக்காக அதை செய்யும்போது, அது அவர்களுக்கான படைப்பாக மாறுகிறது. ஒரே நேரத்தில் பொது மற்றும் தனிப்பட்ட மனிதர்களுடைய பொருளாக கடிதங்கள் மாறுகிறது. எனவே, இவை நீங்கள் நினைப்பது போல எளிமையானது அல்ல என்று நடிகர் சஞ்சீவ் பாஸ்கர் கூறினார். 


லெட்டர்ஸ் லிவ் நிகழ்ச்சி, நடைபெறத் தொடங்கி பத்தாண்டுகள் ஆகிறது. கடிதம் என்பது பொதுவெளிக்கு வருவதற்கு முன்னர் வரை அது தனிப்பட்டவர்களின் தகவல்களை கொண்டுள்ளது. இவற்றை ஒருவர் சரியான பின்னணி இசையுடன் கேட்டால் அவருக்கு நிகழ்ச்சி பற்றிய உண்மைகள் தெரிய வரும். 


எழுத்துகளை சரியானபடி செம்மை செய்து கடிதங்களை எழுதுவது எளிதானது அல்ல. இதைக்கூறும்போது, கவிஞர் மார்க் ட்வைன் ஒருமுறை தனது நண்பருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதன் கீழே குறிப்பாக, நீளமான கடிதம் எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும். சிறியதாக எழுத நேரமில்லை என்று கூறியிருந்தார். இங்கு நீளமான கடிதத்தை சுருக்கி சிறியதாக எழுத செம்மை செய்யவேண்டும். அதற்கான நேரமில்லை என்று கூறுவதாக கொள்ளவேண்டியதுதான். கடிதம் எழுதுவது என்பது தனிப்பட்ட உணர்வுகளை பதிவு செய்வதுதான். காலத்தை அதில் உறையச் செய்ய முடியும். 



மிராண்டா சாயர்

கார்டியன் வீக்லி


கருத்துகள்