சந்தைக்குப் புதுசு - ஒரே ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் போதும். போனை கழற்றி மாட்டிவிடலாம்!

 













சந்தைக்குப் புதுசு 


ஃபேர் போன்

650 டாலர்கள் விலை கொண்ட ஸ்மார்ட்போன். இந்த போனிலுள்ள பாகங்களை நாமாகவே அவர்கள் கொடுக்கும் ஸ்க்ரூ ட்ரைவர் வைத்து கழற்றி மாட்டிக்கொள்ளலாம். பழுது பார்க்கலாம். கெட்டுப்போன பாகங்களை மாற்றிக்கொள்ளும் விலையும் குறைவுதான். திரை போய்விட்டதா உடனே அதை தூக்கியெறிந்துவிட்டு புதிய போன் வாங்குபவர்கள், இந்த போனை வாங்கலாம். ஐந்து ஆண்டு ஆண்ட்ராய்ட் அப்டேட் உண்டு. அதே ஆண்டுகள் வாரண்டியும் உண்டு. இந்த போன் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கிறது. அமெரிக்காவில் உள்ளவர்கள் ஆர்டர் போட்டுத்தான் வாங்கவேண்டும். 


பிஎம்டபிள்யூ ஐ5


முழுக்க எலக்ட்ரிக் கார். சார்ஜ் போட்டால் முப்பது நிமிடங்களில் எண்பது சதவீதம் சார்ஜ் ஏறுகிறது. ஆனால் இந்த கார் முழுக்க எலக்ட்ரிக் காராக மாற்ற பத்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இந்த காலதாமதம் சற்று ஏமாற்றமளிக்கிறது. விலை 68,800 லிருந்து தொடங்குகிறது. இதில் நிறைய மாடல்கள் உள்ளன. காரில் கேம் விளையாடும்போது உங்கள் ஸ்மார்ட்போனை கண்ட்ரோலராக பயன்படுத்தலாம். 321 கி.மீ. தொலைவு தொடங்கி 361 கி.மீ. வரை செல்ல முடியும். 


மோனோ பிரைஸ் டேபிள் லேம்ப்

இந்த நிறுவனம் ஒருவர் வீட்டிலேயே வேலை செய்வதற்கான அத்தனை பொருட்களையும் தயாரிக்கிறார்கள். அவற்றின் விலையும் குறைவுதான். இந்த மேசை விளக்கு, ஏசியன் பெயின்ட் அடித்த வீடுகளுக்கு பொருத்தமான வெளிச்சத்தை தரும். 31 டாலர் விலையில் போனுக்கு வயர்லஸ் முறையில் சார்ஜ் போட்டுக்கொள்ளலாம். பின்புறத்தில் யுஎஸ்பி சார்ஜரும் கூட போடலாம். இடம்போதாமல் இருக்கிறதா, பயன்படுத்திவிட்டு மடக்கி வைத்துக்கொள்ளலாம். 


போஸ் ஹெட்போன்ஸ் 


இரைச்சல் இல்லாத ஹெட்போன் சந்தையில் ஒருகாலத்தில் டானாக வலம் வந்த பிராண்ட் போஸ். இன்று, அதனோடு போட்டியிட ஆப்பிள், சோனி மற்றும் பிற நிறுவனங்கள் என ஏராளமானவை வந்துவிட்டன. இப்போது திரும்ப போஸ் தன்னுடைய ஹெட்போன்கள் மூலம் திரும்ப  வந்திருக்கிறது. இரைச்சல் கேட்காத அம்சம் உண்டு. பாடல்களை கேட்கும்போது காதில் கேட்பது என்பதைக் கடந்து உங்கள் முன்னால் அதை கலைஞர்கள் வாசிப்பது போன்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது. விலை 429 டாலர்கள். 


ஸ்யூர்லி ப்ரீ ஆம்பிள் சைக்கிள் 


பத்திரிக்கைக்காரர் கி ச திலீபன் போல சைக்கிள் ஓட்டும் வெறி இன்று பலருக்கும் பிறந்திருக்கிறது. எனவே, அவர்களுக்கு இந்த எட்டு கியர் கொண்ட 35 மி.மீ. அளவுடைய சைக்கிள் உதவும். இதனை கடினமான பாதைகளிலும் பயன்படுத்தலாம். நேரான, வளைந்த என இரண்டு வகையான ஹேண்டில்பாருடன் சைக்கிளை வாங்கிக்கொள்ளலாம். விலை 899 டாலர்கள். 





வயர்ட் இதழ் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்