உளவியலாளருக்கு வழங்கப்பட்ட விருதுக்கு வந்த சர்ச்சைகளும், விமர்சனங்களும்!
ரேமண்ட் காட்டெல், இருபதாம் நூற்றாண்டில் மதிக்கப்படும் உளவியலாளர்களில் ஒருவர். இவர் மனிதர்களின் அறிவுத்திறன், ஊக்கம், ஆளுமை ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளைச் செய்தவர். மனிதர்களின் அறிவுத்திறன் பற்றிய ஆய்வு செய்யலாம் என்ற எண்ணம், சிறுவயதில் பிரிட்டிஷ் ஆய்வாளரான சார்லஸ் ஸ்பியர்மேன் மூலம் உருவானது.
இங்கிலாந்தில் ஸ்டாஃப்போர்ட்ஷையர் என்ற நகரில் பிறந்தார். வேதியியலில் பட்டம் பெற்றவர், பிறகே உளவியலுக்கு மாறி அதில் முனைவர் பட்டம் பெற்றார். லண்டனில் உள்ள கல்வி நிலையங்களில் கல்வி கற்பித்து வந்தார். அங்கேயே லெய்செஸ்டர் என்ற குழந்தைகளுக்கான கிளினிக் ஒன்றை நடத்தினார். பிறகு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கேயே தங்கி 1973ஆம் ஆண்டு வரை கற்பித்தலை தொடர்ந்தார். மூன்று முறை திருமணம் செய்தவர், ஹவாய் பல்கலைக்கழக வேலைக்கு மாறினார். 1997ஆம் ஆண்டு அமெரிக்க உளவியல் சங்கம், வாழ்நாள் சாதனையாளர் விருதளித்து பெருமைப்படுத்தியது. ஆனால் கேட்டல் மீது விருதுக்கு தகுதியானவரா என விவாதம், விமர்சனங்கள், வசைகள் பெருகின. தன்னுடைய ஆய்வுகளுக்கு ஆதரவாக பேசியவர், வழங்கிய விருதை ஏற்க மறுத்துவிட்டார். விமர்சனங்கள் ஏற்படுத்திய மன அழுத்தமோ என்னவோ, இதயம் பழுதாகி விருது வழங்கப்பட்ட ஆண்டுக்கு அடுத்த ஆண்டே காலமாகிவிட்டார்.
முக்கிய படைப்புகள்
1971 abilities
1987 intelligence
cartoonstock - nicholas kim
கருத்துகள்
கருத்துரையிடுக