சமூகத்தோடு இணைந்து மக்களோடு கூடி இருந்தால் மகிழ்ச்சி பெருகும்!

 









மூன்று வகையான மகிழ்ச்சியான வாழ்க்கை முறைகள் உள்ளன. 


சிறந்த வாழ்கை


இதில் தனிப்பட்ட வாழ்க்கை வளர்ச்சி இருக்கும். குறிப்பிட்ட திட்டமிட்ட போக்கில் வாழ்க்கை செல்லும். 


அர்த்தமுள்ள வாழ்க்கை 


உங்களின் வாழ்க்கை, வளர்ச்சியை விட சேவைகளை செய்வதே முக்கியமானதாக இருக்கும். 


மகிழ்ச்சியான வாழ்க்கை 


சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து அதன் வழியாக மகிழ்ச்சியை அடைவது...


இதில் முதல் இரண்டு விஷயங்கள் இருந்தாலே ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் ஒருவர் சமூக உறவுகளை உருவாக்கிக்கொள்வது முக்கியம். இதில் ஒருவர் மகிழ்ச்சியை அதிகளவு பெறுவதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால், இந்த அம்சம் இல்லாமலும் மகி்ழ்ச்சி சாத்தியம் இல்லை. 


இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், பதற்றம் காரணமாக ஒருவருக்கு ஏற்படும துயரமான மனநிலை பற்றிய ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன. உளவியலாளர் மார்ட்டின் செலிக்மன் என்பவர், 'லேர்ன்ட் ஹெல்ப்லெஸ்னெஸ்' எனும் கோட்பாட்டை உருவாக்கினார். இதில், மன அழுத்தம் மூலம் ஒருவருக்கு ஏறபடும் எதிர்மறை நிலைகளை அடையாளம் கண்டார். 


ஒருவரின் வாழ்வில் உள்ள பலத்தை அடையாளம் காண்பது முக்கியம். அதைவிட பலவீனமாக உள்ள, துயரமான பிரச்னைகளை சரி செய்தாலே வாழ்க்கை சீராகும் என்பது செலிக்மனின் கருத்து. இதற்காக அரிஸ்டாட்டிலின் மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற கருத்தை எடுத்து விளக்கினார். 


உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருக எதையும் விலக்கவோ, நீக்கவோ தேவையில்லை. சில விஷயங்களை ஊக்கப்படுத்தினாலே போதும் என்று செலிக்மன் கூறினார். அதாவது சமூக ரீதியான உறவுகள், நிகழ்ச்சிகளே மகிழ்ச்சிக்கு அவசியம் முக்கியம் என்றார். குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகம் உள்ள விளையாட்டு நிகழ்ச்சி, மத நிகழ்ச்சி, பிறந்தநாள் கொண்டாட்டம் என எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இடங்களில் ஒருவருக்கு அறிவுரீதியாக உணர்வு ரீதியாக எந்த நிறைவும் கிடைக்காது. இப்பற்றாக்குறைகள் கடந்த இந்த இடங்களில் மனிதர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருப்பார்கள். தனிப்பட்ட வாழ்க்கை, பிறருக்கான சேவை என வாழ்பவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி, தற்காலிகமானது. நிலையான மகிழ்ச்சி என்பதை அவர்கள் பெற, அனுபவிக்க சமூக ரீதியாக மக்கள் குழுக்களுடன் இணையவேண்டும் என்பதை உளவியலாளர் செலிக்மன் வலியுறுத்தினார். 


அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அல்பேனியில் பிறந்தவர். 1964ஆம் ஆண்டு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்து பட்டம் பெற்றார். பிறகு தன் கவனத்தை உளவியல் மீது செலுத்தினார். 1967ஆம் ஆண்டு அதில் முனைவர் பட்டம் வாங்கினார். பிறகு மூன்று ஆண்டுகள் கார்னல் பல்கலையில் பேராசிரியராக வேலை செய்தார். பின்னாளில், பென்சில்வேனியா திரும்பி வந்து அங்குள்ள பல்கலைக்கழகத்தில் வேலை செய்யத் தொடங்கினார். 


உளவியலில் நேர்மறையான உளவியல் எனும் கருத்தை உருவாக்கியவர். இவரது மகள் மூலமாகவே இந்த ஆராய்ச்சிக்கு திருப்புமுனை கிடைத்தது. பென்சில்வேனியா பல்கலையில் நேர்மறை உளவியலுகான மையத்தை தொடங்கியுள்ளார். 


முக்கிய படைப்புகள் 1975 - ஹெல்ப்லெஸ்னெஸ், 1991 - லேர்ன்ட் ஆப்டிசம், 2002- ஆத்தென்டிக் ஹேப்பினஸ். 


படங்கள் - பின்டிரெஸ்ட்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்