காலப்போக்கில் காலாவதியாகும் முக்கிய சம்பவங்களின் நினைவுகள்!

 









பெற்றோர் அடித்து உதைப்பது, சகோதரன் குளிக்கும்போது காலை நீருக்குள் இழுத்து மூச்சு திணறச் செய்வது, ஆருயிர் நண்பன் என நினைப்பவன் காசு கையில் வந்ததும், பஸ் செலவுக்கு பணம் கொடுப்பது, நினைத்து பார்க்காத நேரத்தில் கிடைத்த காதலியின் முத்தம் என நிறைய விஷயங்கள் ஒருவரின் மனதில் இருக்கலாம். அதாவது தினசரி வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விஷயங்களும் மூளையில் சேகரமாகாது. அப்படி குறிப்பாக சேகரமாகும் விஷயங்களும் மெல்ல அழிந்துகொண்டே வரும். அப்படி அழிக்கப்பட்டால்தான் புதிய விஷயங்களை சேமிக்க முடியும். 


முக்கியம் என மனதில் நினைத்த விஷயங்கள் திடீரென அழிந்துபோகும்போது, நினைவுக்கு வராமல் போகும்போது சற்று வருத்தமாகவே இருக்கும். நினைவுகள் அழிவது மட்டும் பிரச்னை அல்ல. அவற்றை நீங்கள் சேமித்த வைக்கும் இடங்கள் கூட பிரச்னையானவைதான். இதை உளவியலாளர் டேனியல் ஸ்ஹாக்டர் ஏழு பாவங்கள் என்று கூறுகிறார். நினைவுகளின் தேய்மானம், நினைவுகூர தவறுவது, தடுப்பது, தவறான அங்கீகாரம், தேர்வு, பாகுபாடு, உறுதி ஆகியவற்றைக் கூறலாம். 


உங்கள் வாழ்க்கையின் பின்னே நடந்த விஷயங்களை திரும்ப நினைவுபடுத்துவது காலப்போக்கில், சற்று கடினமாகவே மாறும். புதிதாக நடந்த அண்மைய விஷயங்களை மீள எடுத்துப் பார்ப்பது எளிது.ஆனால் பழைய விஷயங்களை நினைவிலிருந்து எடுத்து பார்ப்பது சற்று கடினம். நிறையபகுதிகள் மறந்து இருப்பது கூட சகஜம். இதை நினைவுகளின் தேய்மானம் எனலாம். 


ஒரு செயலுக்கு போதிய கவனத்தை கொடுக்கமாட்டோம். அது முக்கியமானதாக இருந்தாலும் இப்படி சில சமயங்களில் நடக்கும். வீட்டைபூட்டுவது, ஹெல்மெட் எடுக்க மறப்பது, சந்திப்புகளை மறப்பது ஆகியவற்றைக் கூறலாம். இதை மூளை சேமித்து வைக்காது. அழித்துவிடும். வேறு நினைவுகளை சேமித்து வைக்கலாம் அல்லவா?  ஒன்றை நினைவில் வைத்திருப்போம், ஆனால் அதை சட்டென யோசித்து மீள எடுத்து பேச முடியாது. இதை டிப் ஆஃப் தி டங் குறைபாடு என்று கூறுகிறார்கள். அதாவது நாக்கு வரையில் வந்திருச்சு. ஆனா சொல்ல முடியலியே என பலர் நினைவுகளை ரீகால் செய்து பேசுவதற்கு தடுமாறுவார்கள். 


சில நாளிதழ்களில் அனைத்து செய்திகளையும் மேலைநாட்டு இதழ்களில் இருந்து எடுத்து எழுதுவார்கள். ஆனால் அதற்கு நன்றி கூட கூற மாட்டார்கள். அதை மிஸ்அட்ரிபியூஷன்  என்று கூறலாம். அதாவது செய்திகளை கூறுவார்கள். அதை எங்கிருந்து எடுத்தோம் என்று ஆதாரங்களை வெளிப்படையாக கூறமாட்டார்கள். அது நினைவில் வராது. ஒரு நினைவை சேமிப்பதில் தனிப்பட்ட உணர்வுநிலை முக்கியமானது. 


டேனியல் ஸ்காக்டர் 


அமெரிக்காவில் நியூயார்க் நகரில் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போது உளவியல் படிப்பு மீது ஆர்வம் பிறந்துவிட்டது. வடகரோலினாவில் உள்ள பல்கலையில் உளவியல் படிப்பை படித்தார்.  அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் நினைவு, கோணம் பற்றிய பற்றிய ஆய்வுகளை செய்தார். கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் எண்டெல் துல்விங் வழிகாட்டலில் நினைவுகள் பற்றிய முனைவர் ஆய்வை முடித்தார். 1981ஆம் ஆண்டு துல்விங், மோரிஸ் ஆகியோருடன் இணைந்து மனநல குறைபாடுகளுக்கான மையம் ஒன்றை தொடங்கி நடத்தினார். பத்தாண்டுகளுக்குப் பிறகு ஹார்வர்ட் பல்கலையில் உளவியல் பேராசிரியராக சேர்ந்தார். அங்கு ஸ்ஹாக்டர் நினைவு ஆய்வகத்தை தொடங்கினார். 


முக்கிய படைப்புகள் 


1982 ஸ்ட்ரேஞ்சர் பிஹைண்ட் தி என்கிராம்

1996 சர்ச்சிங் ஃபார் மெமரி

2001 தி செவன்த் சின்ஸ் ஆஃப் மெமரி


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்