டாமினன்ட் ஆட்களை அடையாளம் அறிய சில வழிகள்!
ஆதிக்கவாதி கேரக்டர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். தான் தவறு செய்கிறோம் என்றால் அதை பகிரங்கமாக ஏற்கமாட்டார்கள். அறிமுகமில்லாத ஊருக்கு போகிறீர்கள்.அங்கு குறிப்பிட்ட இடத்திற்கு போக பஸ் தேவை. ஆனால் எந்த பஸ் என தெரியவில்லை. அதற்கு இன்னொருவரின் உதவியை நாடவேண்டும். ஆனால் ஆதிக்கவாதிகள், அதற்கு மலைப்பார்கள். அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருப்பார்கள். ''எனக்கு உங்களோட உதவி தேவை, உதவறீங்களா?’’ என்று கேட்க ஆதிக்கவாதி மனிதர்களின் மனம் ஒப்புக்கொள்ளாது. அதுதான் அவர்களது பலவீனம். எப்போதும் மனதில் பெருமை சூழ இருப்பார்கள்.
தன்னை மிகவும் நேர்த்தியானவர்கள் என்று காட்டிக்கொள்பவர்கள், அவசியமான உதவியைக்கூட பிறரிடம் கேட்கத் தயங்குவார்கள். இதில்தான் ஆதிக்கவாதி ஆட்கள் மாட்டிக்கொள்கிறார்கள். உதவியை கேட்டால், இதுவரை தான் உருவாக்கிய தன்னைப் பற்றிய அனைத்து மாயைகளும் உடைந்துவிடுமே என பயப்படுகிறார்கள்.
ஒருவர் பிறருக்கு அதிகாரமளிப்பது எப்போது நடக்கிறது? உங்கள் நண்பர் உங்களை நம்பி வீட்டுசாவியைக் கையில் கொடுக்கிறாரா? தனக்கு உணவை ஹோட்டலில் ஆர்டர் செய்ய ஓகே சொல்கிறாரா? பள்ளி, கல்லூரிகளில் உங்கள் நண்பர்கள் வாக்களித்து உங்களை குறிப்பிட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்கிறார்களா, அப்படி செய்யும் வேலையில் உங்களால் சரியாக செயல்படமுடிகிறதா, இதுவும் நீங்கள் ஆதிக்கவாதி பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றுதான்.
ஆதிக்கவாதி ஆட்கள், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பார்கள். அதை நோக்கி தீவிரமாக சென்று கொண்டே இருப்பார்கள். எப்போதும எதிலும் யோசனை என்பதால் மூடியிருக்கும் கண்ணாடி கதவில் இடித்து சில்லி மூக்கு உடைந்தால்தான் அது கதவு என புரிந்துகொள்வார்கள். பிறகு கதவைத் திறந்துகொண்டு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தபடி நடப்பார்கள். வாழ்க்கையில் இப்போது நான் என்ன செய்வது என பிறரிடம் கேட்க மாட்டார்கள். அந்தளவு தெளிவாக எப்போது என்ன செய்வது என திட்டமிட்டு பயணிப்பார்கள்.
பிறர் பீதியடையும்படி ஒருவரைப் பற்றிய துல்லியமான உண்மையைக் கூறுவார்கள். அது எல்லோருக்கும் பிடிக்காது. அதைப்பற்றி ஆதிக்கவாதி ஆட்கள் கவலையேபட மாட்டார்கள். ''ஓவர்கம் பண்ணி வா மாப்ளே.. வரட்டுமா'’ என சென்றுகொண்டே இருப்பார்கள். கேட்கும், பார்க்கும், பேசும் அனைத்திலு்ம உண்மைதான் அவர்களுக்கு முக்கியம். அதில் உள்ள உணர்ச்சிகள் கிடையாது. எனவே, பிறருக்கு ஆதிக்கவாதி ஆட்களைப் பார்க்கும்போது மரியாதை இல்லாமல், யாரையும் மதிக்காமல் நடந்துகொள்வது போல தெரியும். எனவே, ஆதிக்கவாதி ஆட்களோடு கூடவே இருப்பது பலருக்கும் மலக்கடுப்பு வந்தது போலவே சங்கடமாக இருக்கும்.
ஆணைகளை கூறுவதாலோ, சாட்டையை எடுத்து வீசுவதாலோ ஒருவர் ஆதிக்கவாதி ஆளாக மாற முடியாது. ஒருவர் சிந்திக்கும் முறை, செயல்படும் பாணி, பிறரை எப்படி புரிந்துகொள்கிறார் என்பதைப் பொறுத்ததே ஆகும்.
பிக்ஸாபே
கருத்துகள்
கருத்துரையிடுக