இனிக்க இனிக்க காதல், நகைச்சுவை என நகரும் பொறியியல் மாணவர்களின் வாழ்க்கை!
மேட்
தெலுங்கு
இசை பீம்ஸ் சிசிரிலோ
ஹைதராபாத்தில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆப் எஞ்சினியரிங் கல்லூரி வளாகத்திற்கு ஒரு மாணவன், இரவுநேரத்தில் வேகமாக வருகிறான். அங்கு கட்டப்பட்டுள்ள கயிற்றில் தட்டிவிட்டு கீழே விழுகிறான். எதிரே பார்த்தால் நிறைய மாணவர்கள் நிற்கிறார்கள். கீழே விழுந்த மாணவன், அந்த கல்லூரியில் சேர்ந்துவிட்டு பிறகு என்னமோ பீதியடைந்து அங்கிருந்து தப்பியோட முயல்கிறான். ஆனால் சீனியர் மாணவர்கள் அவனை பிடித்து கட்டி வைத்து தலைவர் சீனியர் வரும்வரை காத்திருக்கிறார்கள். அவர் பெயர் லட்டு. அவர், தானும் இப்படித்தான் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தப்பியோட முயன்றதாக சொல்லி தனது கதையைக் கூறுகிறார். படம் தொடங்குகிறது.
மனோஜ்,அசோக், தாமோதர் என மூன்று நண்பர்களின் பெயர்தான் படத்தின் தலைப்பு. இந்த பாத்திரங்களில் நடித்தவர்கள் எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக தாமோதர் பாத்திரத்தில் நடித்த நடிகர். இவரது காமெடி சென்ஸில் தியேட்டரே அதிர்கிறது. அதிலும் படத்தின் கடைசி ட்விஸ்ட் இருக்கிறதே? ஏமாந்துவிட்ட சோகம், வருத்தம் அதை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்துவார். அதேசமயம் நண்பர்கள் சிரிக்க, எதுக்குடா சிரிக்கிறீங்க என்று கேட்பார். பிரமாதமான காட்சி.
படம் உற்சாகமாக புதிய காலகட்ட இளைஞர்களுக்கானது. காமெடி, காட்சிகள் அனைத்தும் இப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, நெகிழ்ச்சியான காட்சிகள் ஏதும் கிடையாது. அப்படி ஒன்று உருவாகி வரும் சூழலிலும் அதையும் காமெடி ஆக்கிவிடுகிறார்கள். அதை குறை என்று சொல்ல ஏதுமில்லை. ஆனால் இந்த படத்தை நம்பி சென்றால் ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம். அந்தளவு நம்பிக்கையை வசனங்கள், காட்சிகளில் வைத்திருக்கிறார்கள். இப்படியான நகைச்சுவையை நாம் அண்மை ஆண்டுகளில் தவறவிட்டு விட்டோம். ஆனால் இப்போது அடையாளம் கண்டுவிட்டோம்.
நகைச்சுவை படத்தில் பாடல்களை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் இசையமைப்பாளர் பீம்ஸ், பின்னணி இசை, பாடல்கள் இரண்டிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். பாடல்களைக் கேட்கும்போது கொண்டாட்ட மனநிலை உருவாகிறது. குறிப்பாக பேச்சிலர் பாடல், நுவ்வு நவ்வுக்குண்டு வெல்லிப்போமாக்கே பாடல்... இவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். எஞ்சினியரிங் படிப்பை பற்றி துளியும் கவலைப்படாமல் கொட்டம் அடித்திருக்கிறார்கள். சோகமோ, சந்தோஷமோ பீர் அடித்துக்கொண்டே நண்பர்களிடம் பகிருங்கள். அவ்வளவுதான் லைஃப் என கலகலப்பாக செய்தி சொல்லுகிற படம். இயக்குநர் வசந்தபாலன் ரசிகர்கள், இதுபோன்ற படங்களைப் பார்ப்பதை தவிருங்கள். மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரும்.
கோமாளிமேடை டீம்
Sai Soujanya
கருத்துகள்
கருத்துரையிடுக