இடுகைகள்

ஆட்டிசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு உள்ளது ஆண் மூளை!

படம்
  சைமன் பாரோன் கோகன் simon baron cohen பிரிட்டனின் லண்டனில் பிறந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் படிப்பை படித்தார். யுனிவர்சிட்டி காலேஜில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1995ஆம் ஆண்டு, டிரினிட்டி கல்லூரியில் சோதனை உளவியலைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். தற்போது ஆட்டிசம் தொடர்பான ஆராய்ச்சியை செய்துவருகிறார். ஆட்டிசத்தின் தீர்வு, அதை ஏற்படுத்தும் காரணிகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். 2009-2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச ஆட்டிச ஆராய்ச்சி சங்கத்தில் துணைத்தலைவராக இருந்தார். தற்போது தேசிய ஆட்டிஸ்டிக் சங்கம்(இங்கிலாந்து) அமைப்பில் துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார். அதிபர் விருது, ஸ்பியர்மேன் பதக்கம், பாய்ட் மெக்கேண்ட்லெஸ் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.  1993 ஆட்டிசம் - தி ஃபேக்ட்ஸ்  1995 மைண்ட்பிளைண்ட்னெஸ் 1999 டீச்சிங் சில்ட்ரன் வித் ஆட்டிசம் மைண்ட் ரீட்  2003 தி எசன்ஷியல் டிஃபரன்சஸ்  புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் - இதுதான் ஆட்டிசத்திற்கான தமிழக அரசின் தமிழ்மொழி வழக்குச்சொல். அதன் நீளம் காரணமாக மதி இறுக்கம் என்று சுருக்கமாக கூறலாம். மதி இறுக்கம்  ஒருவருக

ஆட்டிச குழந்தைகளின் கலைத்திறனை அங்கீகரிக்கும் வலைத்தளங்கள்!

படம்
  சுவாமிநாதன் மணிவண்ணன் என்ற ஓவியக்கலைஞர் சென்னையில் உள்ளார். இவர் தனது ஏழு ஒவியங்களை 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் தனது லெட்டர்ஹெட்டை விஸ்வநாதன் ஆனந்த் வடிவமைத்துள்ளார். இத்தனைக்கும் சுவாமிநாதன் மணிவண்ணன், ஆட்டிஸ பாதிப்பு கொண்டவர்.  சுவாமியின் படைப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்காக திறக்கப்படவிருக்கும் அருங்காட்சியகத்தில் இடம்பிடிக்கவிருக்கிறது. 36 வயதான சுவாமியின் படைப்புகள் 2018ஆம் ஆண்டு கொச்சி பினாலே நிகழ்ச்சியில் முதன்முதலாக இடம்பெற்றது.இப்போது ஆன்லைன் தளங்கள் உருவாக்கப்பட்டுவிட்டதால் மாற்றுத்திறனாளிகளின் கலைப்படைப்புகள் எளிதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.  ஆட்டிஸ குழந்தைகள் தகவல் தொடர்பு கொள்வதில் தடுமாறினாலும் சரியான பயிற்சி கொடுத்தால், அவர்கள் கலை சார்ந்த விஷயங்களில் திறமையானவர்களாக வளருவார்கள் என்பதற்கு சுவாமி முக்கியமான உதாரணம்.  சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் சிறப்புக் குழந்தைகளுக்காக கலைகளை சொல்லித்தருவதற்காக திட்டங்கள் உள்ளன. 2016ஆம் ஆண்டு தொடங்கி, இங்கு மாலா சின்னப்பாவும் அவரின் குழுவும் உழைத்து வருகிறார்கள். எ பிரஷ் வித் ஆர்ட் என்பது இவர்

புனைவு ஏற்படுத்திய வலி! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
எ மிராக்கிள் - துருக்கி தொடர் தமிழில்   புனைவு ஏற்படுத்திய வலி!  25.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம் நலமாக இருக்கிறீர்களா? அலுவலகம் விட்டு தங்கியிருக்கும் அறைக்கு வரும்போது மழை பிடித்துக்கொண்டது. இப்போது வரை பெய்துகொண்டே இருக்கிறது. அதன் பின்னணி இசையுடன்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.  இன்றுதான் எ மிராக்கிள் என்ற துருக்கி தொடரின் இறுதி அத்தியாயத்தைப் பார்த்தேன். இந்த தொடர், தென்கொரியாவில் வெளியான குட் டாக்டர் என்ற டிவி தொடரைத் தழுவியது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவக்கல்வி கற்ற இளைஞர், அறுவை சிகிச்சை வல்லுநராக மாற முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.  ஆட்டிசம் பாதிப்பு, இவர்களை எப்படி கையாள்வது, பெற்றோர் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும், இவர்களின் அறிவுத்திறன், பிறருடன் உரையாடும்போது இவர்களை புரிந்துகொள்வது எப்படி என நிறைய விஷயங்களை காட்சிகளுக்கு இடையில் புரிந்துகொள்ளும்படி அமைத்திருக்கிறார்கள். உங்களுக்கு இதுபோன்ற டிவி தொடர்களில் விருப்பமிருக்காது. முழுக்க வெளிவயமானவர். உள்வயமான எனக்கு கொரியத் தொடரை ரீமேக் செய்த துருக்கி தொடர் பிடித்திருந்தது. டாக்டர் அலி வெஃபா என்

ஆட்டிச குறைபாடு கொண்ட மருத்துவர், அறுவைசிகிச்சை நிபுணராகும் கதை! - எ மிராக்கிள் - துருக்கி டிவி தொடர்

படம்
மிராக்கிள் டாக்டர் - துருக்கி தொடர் குட் டாக்டர் - கொரிய மூல தொடர் எ மிராக்கிள்  துருக்கி டிவி தொடர் மூலம் குட் டாக்டர் - தென்கொரிய டிவி தொடர் எம்எக்ஸ் பிளேயர் தென்கொரிய தொடரை ரீமேக் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் பார்க்க நன்றாக இருந்தாலும் எம்எக்ஸ் பிளேயரில் விளம்பரங்கள் இப்போது அதிகம் என்பதால் செலவிடும் நேரம் அதிகமாகலாம்.  அலி வெபா என்ற ஆட்டிச குறைபாடு கொண்டவர் எப்படி துருக்கியின் பெரும் மருத்துவமனையில் தனது கனவான அறுவை சிகிச்சை மருத்துவர் என்ற இடத்தை அடைந்தார் என்பதுதான் மையக்கதை.  இதைச்சுற்றி ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. அவையும் தொடரை 197 எபிசோடுகள் வரை பார்க்க நமக்கு உதவுகின்றன. ஆட்டிச பாதிப்பு கொண்ட மருத்துவர் என்பதால் அவரே முழுக்க புனிதமாகவும் பிறரை குற்றவாளிகளாகவும் காட்டும்  முறையை இயக்குநர் பின்பற்றவில்லை. ஆட்டிச மருத்துவர் என்றாலும் அவரும் உணர்ச்சி வசப்பட்டு சிலதவறுகள் செய்பவர்களாகவும், அவரை மெல்ல ஏற்றுக்கொள்ளும் மருத்துவர்கள் குழுவினர் அவரை சிறந்தவர்களாக்க முயல்வதும் தொடரில் பார்க்க முடிகிறது.  யாரும் முழுக்க நல்லவர்களுமில்லை. முழுக்க கெட்டவர்களுமில்லை என்பதை அலி வெ

விலையை குறைக்கவே குறைக்காத புத்தகக் கடை! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். இப்போதுதான் வடபழனி சென்று வந்தேன். ஃபோரம் விஜயா மாலில் உள்ள கிராஸ்வேர்ட் கடைக்கு சென்றேன். அங்கு ஷோபாடே எழுதிய கட்டுரை நூலை வாங்கினேன். 2008இல் வந்த நூலைக் கூட விலை குறைக்காமல் விற்கும் துணிச்சலான நிறுவனம். இன்னும் கொஞ்சநாளில் நூல்களை விட ஃபேன்சி பொருட்களை விற்கத் தொடங்கிவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நூல்களின் எண்ணிக்கைக்கு சமமாக பேக்குகள், பேனாக்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளன.  இந்த வாரம் முழுக்க எந்த நூலையும் ஆர்வமாக படிக்க முடியவில்லை. எ மிராக்கிள் என்ற துருக்கி தொடரை எம்எக்ஸ் பிளேயர் ஆப்பில் பார்த்தேன். இந்த தொடர் தென்கொரிய தொடரான குட் டாக்டரின் ரீமேக்தான். துருக்கியில் அதனைப் பார்ப்பதற்கு முக்கியமான காரணம், அதன் நாயகனாக நடித்து ஆட்டிச பாதிப்பை நமக்கு புரிய வைத்துள்ளார். நிறைய காட்சிகளில் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. புனைவுதான். ஆட்டிச பாதிப்பை கட்டுப்படுத்தி நல்ல அறுவை சிகிச்சை நிபுணராக மாறினார் என்பதே கதை. தரவிறக்கி வைத்துள்ள கட்டுரை நூல்களை படிக்கவேண்டும் என நினைக்கிறேன். விரைவி

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மருத்துவரின் கனவும், அவரை பகடைக்காயாக்கும் மருத்துவமனை சூழ்ச்சிகளும்! - எ மிராக்கிள் - துருக்கி தொடர் - முதல் பாகம்

படம்
              எ மிராக்கிள் துருக்கி தொடர் குட் டாக்டர் எனும் தென்கொரிய தொடரை ரீமேக்கியிருக்கிறார்கள் . ஆனால் காட்சிகளில் நடித்துள்ளவர்கள் நிறைய வேறுபாடுகளை காட்டியுள்ளதோடு காட்சிகளும் மாற்றப்பட்டுள்ளன . ஆட்டிசமும் , சாவன்ட் சிண்ட்ரோம் என்ற குறைபாடும் கொண்ட அலி பாபா , ஹயாத் எனும் பன்னோக்கு மருத்துவமனையில் வேலைக்கு சேர்கிறான் . அவனை அங்கு தலைமை மருத்துவராக உள்ளவர் தனது செல்வாக்கினால் சேர்க்கிறார் . காரணம் , அவனை வளர்த்து கவனித்துக்கொண்டது அவர்தான் . ஆனால் அங்குள்ள மருத்துவமனையில் அவனை வைத்தே தலைமை மருத்துவரை வேலையை விட்டு நீக்கலாம் . என அரசியல் விளையாட்டு நடக்கிறது . இந்த அரசியல் விளையாட்டு அலியை பந்தாடியதா , அவனது அறுவை சிகிச்சை நிபுணராகும் கனவு என்னவானது என்பதைத்த்தான் தொடர் சொல்லுகிறது . தொடரில் மொத்தம் 22 எபிசோடுகள் , ஒரு எபிசோடு என்பது நாற்பது நிமிடங்ங்கள் வருகிறது . ஆட்டிசம் பாதிப்பு பற்றிய எண்ணங்களை இத்தொடர் மாற்றும் என உறுதியாக நம்பலாம் . இயல்பான வாழ்க்கை என்பது ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு சாத்தியமில்லை . ஆட்டிச குறைபாட்டிற்க

ஆட்டிச பாதிப்புடன் வாழ்க்கையை பிறருக்கு பகிரும் நூல்! - புத்தகம் புதுசு

படம்
              கைண்ரட் நியாண்டர்தால் லைஃப், லவ், டெத், ஆர்ட் ரெபெக்கா ரெக் சைகஸ் இன்று அனைத்து இடங்களிலும் ஏன் கூகுள் சர்ச்சிலும் கூட நியாண்டர்தால் பற்றிய சர்ச்சைகள்தான் அதிக இடம்பிடித்துள்ளது. பலரும் தேடிப்படித்து வருவதும் இதுதொடர்பான சர்ச்சைகள்தான். இதுபற்றிய தகவல்களை தொல்பொருள் ஆய்வாளர் ரெக் சைகஸ் நமக்கு விளக்குகிறார்.நமது பரிணாம வளர்ச்சி, அவர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், உடல் உறுப்புகள் என ஏராளமான விஷயங்களை நூலில் விளக்கியுள்ளனர். அவுட்சைடர் கைடு டு ஹியூமன்ஸ் வாட் சயின்ஸ் டாஃப்ட் மி அபவுட் வால் வீ டூ அண்ட் ஹூ வீ ஆர் கமிலா பாங் உயிரிவேதியியலாளர் பாங் ஐந்து வயதாக இருக்கும்போது பிற மனிதர்களை அந்நியர்களாக கருத தொடங்கிவிட்டார். சோதித்தபோது அவருக்கு ஆட்டிச பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தன்னுடைய வாழ்க்கையை, அறிவியல் கலந்து பேசியுள்ள நூல் இது. தி டேங்கில்டு வெப் வி வீவ் இன்சைடு தி ஷாடோ சிஸ்டம் தட் ஷேப்ஸ் தி இன்டர்நெட் ஜேம்ஸ் பால். இணையம், இணைய நிறுவனங்கள் எப்படி இணையத்தை நிலைநிறுத்துகிறார்கள். முன்பு கடவுளாக தெரிந்த இணையம் எப்படி வில்லனாக பார்க்கப்படுகிறது என்பதை எழுதியுள்ளார் ஆசிர

ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆர்கனாய்டு மினி ப்ரெய்ன் ஆராய்ச்சி! - ஆட்டிசம், அல்சீமர், டிமென்ஷியா குறைபாடுகளை தீர்க்கலாம்!

படம்
  cc மூளை ஆராய்ச்சி     மினி மூளை ஆராய்ச்சி ஆட்டிசம், அல்சீமர், சிசோபெரெனியா ஆகிய நோய்களை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் மூளை முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. மூளை பற்றிய ஆராய்ச்சி அதிகளவில் நடைபெறுவதில் உள்ள சிக்கல், அதன் அமைப்புதான். இப்போது அத்தடைகளையும் தாண்டி அதனை ஆய்வகத்தில் வளர்க்க முய்ன்று வருகிறார்கள். கேம்பிரிட்ஜிலுள்ள மூலக்கூறு உயிரியல் பிரிவு பேராசிரியர் மேடலின் லான்காஸ்டர் என்ற பெண்மணி, மூளையிலுள்ள ஸ்டெம்செல்களை தனியாக பிரித்து வைத்து அதனை ஆராய்ந்து வருகிறார். வியன்னாவில் முதுகலைபடிப்பிற்கு செய்த ஆராய்ச்சியின் போது விபத்தாக மூளை ஆராய்ச்சியை செய்யும் நோக்கம் தொடங்கியிருக்கிறது. கருப்பையில் மூளை எப்படி வளருகிறது என்பதைப் பற்றித்தான் லான்காஸ்டர் முதலில் ஆராய்ச்சி செய்தார். பின்னர்தான், அது மூளையை தனியாக ஆய்வகத்தில் வளர்க்கும் நோக்கத்தில் வந்து நின்றது. ஆர்கனாய்டுகளை ஆராய்ந்து வந்த லான்காஸ்டர் இப்போது மெல்ல மூளையை ஆய்வகத்தில் வளர்த்து அதன் புதிர்தன்மையை காண முயன்று வருகிறார். பொதுவாக எம்ஆர்ஐ ஸ்கேன்களில் கூட நாம் மூளையின் வளர்ச்சியைத்தான் பார்க்க முடியும். ஆனால் அதில் உள்ளே வர

குளூட்டேன் - ஒவ்வாமைக்கு மூல காரணமா?

படம்
gluten குளூட்டேன் இன்று குளூட்டன் இல்லாத உணவுப்பொருட்களை மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர். குளூட்டேன் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதன்விளைவாக குளூட்டேன் இல்லாத பிரெட், பாஸ்தா உள்ளிட்டவற்றையும் பிற பொருட்களை மக்கள் தேடி வருகின்றனர். மரபணுரீதியாக ஏற்படும் பிரச்னைகளால் ஒவ்வாமை இன்று பெருமளவு தலைதூக்கி வருகிறது. குளூட்டேன் என்பது கோதுமையில் காணப்படும் சங்கிலி அமைப்பிலான ஓர் புரதம். வெறும் கோதுமையை வாயிலிட்டு மென்றால் சூயிங்கம் போல திரண்டு வரும். இந்த தன்மைக்கு குளூட்டேன்தான் காரணம்.  பிரெட் தயாரிப்பில், குளூட்டேன் முக்கியமான பகுதிப்பொருள். அதன் நெகிழ்வான தன்மைக்கு குளூட்டேன் உதவுகிறது. கோதுமை மாவில் நீரைச் சேர்த்து குளூட்டேனை நீக்க முடியும். நேரடியாக கோதுமையிலிருந்து குளூட்டேனை நீக்குவது சாத்தியம் அல்ல. குளூட்டேன் இல்லாத உணவு காய்கறிகள், பழங்கள், இறைச்சி ஆகியவற்றில் குளூட்டேன் இல்லை. இன்று குளூட்டேன் நீக்கப்பட்ட நிறைய உணவுப்பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் விலை பிற பொருட்களை விட விலை சற்று கூடுதலாக இருக்கும். ஒவ்வாமை ஏற்படுவதன் முக்கியக் காரண

ஆட்டிச பாதிப்பைக் குறைக்கும் புதிய மருந்து!

படம்
ஆட்டிச பாதிப்பை குறைக்கும் மருந்து சோதனை முறையில் செயல்படுத்தி வெற்றி கொண்டுள்ளது உலக ஆராய்ச்சியாளர்கள் குழு. ஆட்டிசம் என்பதை தன்முனைப்பு குறைபாடு என தமிழில் கூறலாம். இதில் பிற குழந்தைகள் இயல்பாக செய்வதை குறிப்பாக பட்டன் போடுவது, உடை விலகுவதை நாமாக உணர்ந்து சரி செய்வது போன்ற விஷயங்களை இவர்களால் செய்ய முடியாது. ஒருங்கிணைந்த செயல்பாடுகளாக இவர்களின் செயல்பாடுகள் இருக்காது. இப்படி பல்வேறு விஷயங்களில் கூட்டுச் செயல்பாடாக ஆட்டிசம் உள்ளதால், இதற்கு மருந்து அளித்து முன்னேற்றம் காண்பது கடினமாக உள்ளது. ஆனாலும் இதற்கான சரியான தெரபிகளை அளித்தால், உலகில் பிறருடன் கலந்து வாழ்வதற்கான திறன்களை ஆட்டிசக் குழந்தைகள் பெற்றுவிட முடியும்.  மூளையிலுள்ள முக்கியமான நரம்பு தகவல் தொடர்பு மையம் ஜிஏபிஏ. இதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் ஆட்டிசம் ஸ்பெக்டரம் டிஸ்ஆர்டராக மாறுகிறது.. சோதனையில் பயன்படுத்திய பூமெட்டனைடு எனும் மருந்து குழந்தைகளுக்கு சிறப்பான செயல்பாட்டால் முன்நிற்கிறது. ஏறத்தாழ ஆட்டிசத்திற்கு கடந்த 50 ஆண்டுகளில் சிறப்பான பலன்களைக் கொடுத்த மருந்து என இதனைக் குறிப்பிடுகிறார்கள்.  இம்மருந்த

ஆட்டிசத்தைப் புரிந்துகொள்ள.....

படம்
ஆட்டிசம் சில புரிதல்கள் யெஸ்.பாலபாரதி பாரதி புத்தகாலயம் ரூ.50 ஆட்டிசம் என்றால் என்ன, அதனை எப்படி அணுகுவது, இக்குறைபாடு கொண்ட குழந்தைகளை எப்படி பயிற்சி அளிப்பது, சமூகத்தில் கலந்து உறவாட வைப்பது, ஆட்டிசக் குழந்தைகளின் உணவுப்பழக்கம் என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் விரிவாக விளக்கியிருக்கிறார். ஆட்டிசத்தை முதலில் கண்டறிந்து கூறிய லியோ கானர் என்ற மருத்துவர் தொடங்கி, பெற்றோருக்கான குறிப்புகள், பயிற்சிகள், இக்குறைபாட்டுடன் சாதித்த ஆல்பிரட் ஐன்ஸ்டீன் வரை விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. இது வெறும் ஆட்டிசம் பற்றிய நூலாக இல்லாமல் அனுபவ நூலாக இருப்பதன் காரணம், ஆசிரியரின் மகனும் ஆட்டிசக் குறைபாடு பாதிப்பு உள்ளவன் என்பதால்தான். சாதாரண பள்ளிகளில் ஆட்டிசக் குழந்தைகளை படிக்க வைப்பது சிரமம். எனினும் அதனை ஆசிரியர் முக்கியம் என்கிறார். சிறப்பு பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஆட்டிச குறைபாடு உள்ள மாணவர்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பாலபாரதி. சாதாரணமானவர்கள் சூழலைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள் என்றால், ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு அனைத்தையும் சொல்லித் தருவது கட்டாயம்.  ஆட்டிச

ஆட்டிசக்குழந்தைகளுக்கான வழிகாட்டல்! - எழுதாப் பயணம்

படம்
புத்தக விமர்சனம்! எழுதாப்பயணம் லஷ்மி பாலகிருஷ்ணன் கனி புக்ஸ்  ரூ.100 இந்த நூல் அனைவரும் படிக்கவேண்டிய நூல். காரணம் பேசியுள்ள பொருள் ஆட்டிசம் தொடர்பானது என்பதால்தான்.  சாதாரணமாக ஆட்டிசம் என்பதை பொதுப்படையாக ஒருவர் பேசுவதையும், அதற்கான தீர்வுகளை முன்வைப்பதும் எளிது. காரணம், இந்த விஷயத்தை அவர் மூன்றாவது நபராகத்தான் பார்க்கிறார். ஆனால் அதே பிரச்னையை அவர் தினசரி சந்திப்பவராக இருந்தால் எப்படியிருக்கும்? இடதுசாரி சிந்தனையாளரான குழந்தை இலக்கிய எழுத்தாளரான பாலபாரதி (பாலகிருஷ்ணன்) தினசரி சந்தித்துக்கொண்டிருப்பது இத்தகைய சூழ்நிலையைத்தான். அவரின் பிள்ளை கனிவமுதன் ஆட்டிசக்குழந்தை.  பாலகிருஷ்ணனின் மனைவி லஷ்மி இந்த நூலை, ஒரு தாயாக இருந்து எழுதியுள்ளது இதன் சிறப்பம்சம். ஆட்டிசம் என்பதை என்னவென்றே தெரியாமல் உள்ளவர்கள் அநேகம்பேர். இதற்கான பள்ளிகள் இன்று மெல்ல உருவாகி வளர்ந்து வருகின்றன. இக்குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பதை ஏராளமான டிகிரிகளை தங்கள் பெயரின் பின்னால் கொண்டவர்கள் கூட அறிந்திருப்பதில்லை.  அதைத்தான் இந்த நூலில் லஷ்மி மிக அழுத்தமாக கோடிட்டு கா