ஆட்டிச பாதிப்பைக் குறைக்கும் புதிய மருந்து!
ஆட்டிச பாதிப்பை குறைக்கும் மருந்து சோதனை முறையில் செயல்படுத்தி வெற்றி கொண்டுள்ளது உலக ஆராய்ச்சியாளர்கள் குழு. ஆட்டிசம் என்பதை தன்முனைப்பு குறைபாடு என தமிழில் கூறலாம். இதில் பிற குழந்தைகள் இயல்பாக செய்வதை குறிப்பாக பட்டன் போடுவது, உடை விலகுவதை நாமாக உணர்ந்து சரி செய்வது போன்ற விஷயங்களை இவர்களால் செய்ய முடியாது. ஒருங்கிணைந்த செயல்பாடுகளாக இவர்களின் செயல்பாடுகள் இருக்காது. இப்படி பல்வேறு விஷயங்களில் கூட்டுச் செயல்பாடாக ஆட்டிசம் உள்ளதால், இதற்கு மருந்து அளித்து முன்னேற்றம் காண்பது கடினமாக உள்ளது.
ஆனாலும் இதற்கான சரியான தெரபிகளை அளித்தால், உலகில் பிறருடன் கலந்து வாழ்வதற்கான திறன்களை ஆட்டிசக் குழந்தைகள் பெற்றுவிட முடியும். மூளையிலுள்ள முக்கியமான நரம்பு தகவல் தொடர்பு மையம் ஜிஏபிஏ. இதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் ஆட்டிசம் ஸ்பெக்டரம் டிஸ்ஆர்டராக மாறுகிறது..
சோதனையில் பயன்படுத்திய பூமெட்டனைடு எனும் மருந்து குழந்தைகளுக்கு சிறப்பான செயல்பாட்டால் முன்நிற்கிறது. ஏறத்தாழ ஆட்டிசத்திற்கு கடந்த 50 ஆண்டுகளில் சிறப்பான பலன்களைக் கொடுத்த மருந்து என இதனைக் குறிப்பிடுகிறார்கள். இம்மருந்து மூளையிலுள்ள ஜிஏபிஏ எனும் நரம்பியல் தகவல் தொடர்பு மையத்தை மேம்படுத்துகிறது என்று கூறுகின்றனர்.இச்சோதனையில் 83 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் தோராய வயது மூன்று முதல் ஆறு வயது வரை. குழந்தைகளுக்கான ஆட்டிசம் ரேட்டிங் ஸ்கேல் எனும் முறையில் 30 புள்ளிகள் பெறுபவர்களை ஏஎஸ்டி என்று குறிக்கின்றனர்.
நன்றி - நியூ அட்லஸ்