இடுகைகள்

நூல் விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலைவர்களை உருவாக்கும் நிறுவனம்- Hindustan unilever

படம்
நூலாசிரியர் தான் வேலை செய்யும் நிறுவன கொள்கைகளை பற்றி 106 பக்க நூலாக எழுதி இருக்கிறார். இதில் நிறுவனத்தின் நிறை குறை என இரண்டுமே உண்டு. அத்தியாய நிறைவில் கற்க வேண்டிய பாடங்களை சுருக்கமாக கூறியிருக்கிறார். இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் நேர்மை பற்றி இறுதி அத்தியாயத்தில் ஏன் கூறினார் என்று தெரியவில்லை. நூலில் பெரும்பாலான அம்சங்கள் நேர்மறையாகவே உள்ளன. நிர்மாவை எப்படி வென்றோம் என்று கூறும் சம்பவங்கள், கிசான் கெட்ச்அப், ஜாம் விற்பனை அனுபவங்கள், விளம்பரங்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதெல்லாம் சிறப்பாக இருந்தது.

பௌத்த மத வேட்கையால் நேபாளம், இலங்கை, பர்மா சுற்றியலையும் பார்ப்பனரின் இடையறாத அலைச்சல்!

 பௌத்த வேட்கை தர்மானந்த கோசம்பி தமிழில் தி.அ.ஶ்ரீனிவாசன் காலச்சுவடு வெளியீடு தன் வரலாற்று நூல். NIVEDAN by Dharmanand Kosambi First published in English as ‘Nivedan’ by PERMANENT BLACK © 2011 Meera Kosambi பௌத்த வேட்கை என்ற நூல், தர்மானந்த கோசம்பி என்ற சரஸ்வத் பார்ப்பனரின் பௌத்த தேடுதலைப் பற்றிப் பேசுகிறது. கோசம்பி, பௌத்தம் கற்க கோவாவில் இருந்து நேபாளம், இலங்கை, மியான்மர் என பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். இறுதியாக இந்தியாவுக்கு திரும்பி தான் கற்ற பௌத்தத்தை கல்லூரியில் போதித்திருக்கிறார். பிறகு, உயிர்வாழும் ஆசை அற்றுப்போய், வார்தா ஆசிரமத்தில் உண்ணா நோன்பிருந்து உடலை உகுத்திருக்கிறார்.  இந்த நூல் நிவேதன் என்ற பெயரில் மராத்தி மொழியில் வெளியானது. அதை கோசம்பியின் பேத்தி மீரா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியாக ஶ்ரீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்து உதவியிருக்கிறார். நூலில், பௌத்தம் கற்க எத்தகைய சவாலையும் சந்திக்க தயார் என்ற கிளம்பிய மனிதனின் அலைச்சலை எழுத்து வழியாக உணர முடிகிறது. அதை வாசகர்களின் மனதில் பதிவு செய்த வகையில் மொழிபெயர்ப்பாளர் ஶ்ரீனிவாசன் வெ...

தமிழ் முருகன் என்பவன் யார்?

 தமிழ் முருகன் கவிஞர் அறிவுமதி தர்மலிங்கம் அறக்கட்டளை பதிப்பகம் இந்த நூலுக்கான விமர்சனத்தை வெளியிடும்போது அநேகமாக ஒரு வார இதழில் அதன் ஆசிரியர் முருகன் தொடரை சில வாரங்கள் எழுதியிருப்பார் என நினைக்கிறேன். பதிலுக்கு போட்டியாக இன்னொரு வார இதழின் ஆசிரியர் கருப்பண்ணசாமியின் வரலாற்றை எழுதியிருப்பார்.. போட்டி மக்களுக்கு ஏதாவதொரு வகையில் நல்ல விஷயத்தைக் கொண்டு வரக்கூடும். இதெல்லாம் ஒருவித நம்பிக்கை அவ்வளவுதான்.  அறிவுமதி, நூலில் ஓரிடத்தில் தமிழ் முருகன் தொடரில் கூறும் விஷயத்தை தனிப்பட்ட சாதி, மதம் சார்ந்து பயன்படுத்தவேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், அப்படி பயன்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது.  நூலைப் பார்ப்போம். நூலில், முருகன் என்பது முருகன் என்பது மட்டுமே, அவன் போர்வீரன், அரசாண்ட மன்னன் என்று கூறப்படுகிறது. இதற்கான இடைச்செருகலையும் விளக்குகிறது. சிவன், பார்வதியின் பிள்ளை கந்தன் என்ற புனைகதைகளை நூல் ஏற்கவில்லை. முருகன் வேறு, கந்தன் வேறு என்று நூலாசிரியர் தெளிவாக கூறுகிறார். தமிழ் இனத்தின் அடையாளமாக ஒற்றை கடவுளாக முருகனை கூறுவதோடு, அர்த்தமற்ற நெல் தூவுதல் தமிழர் ...

நவீன தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன்

  நவீன தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன் கிழக்கு பதிப்பகம் பொதுவாக இப்படியான நூல்களை எழுத்தாளர்கள் எழுதுவது அரிது. எழுதினால் நிறைய வசைகளே வீடு தேடி வரும். பரவாயில்லை என எழுத்தாளர் ஜெயமோகன் துணிந்து எழுதியிருப்பார் போல. நூலை வாசித்தாலே நீங்கள் அதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.  தன்னுடைய ரசனை அடிப்படையில் ஜெயமோகன் வாசித்த பல்வேறு எழுத்தாளர்களை வகைமைபடுத்தி நூல்களை விமர்சித்து எழுதியுள்ளார். பெரும்பாலும் இடதுசாரிகளுக்கு இலக்கியப் பரப்பில் பெரிய இடம் இல்லை. இப்படி அவர்களது படைப்புகள் பற்றி விமர்சனம் செய்வது அவர்களுக்கு கோபத்தை உருவாக்ககூடும். ஆனால், நூலை வாசிக்க வாசிக்க ஜெயமோகன் அவர்களின் பரந்துபட்ட இலக்கிய வாசிப்பு நம்மை முற்றாக ஆட்கொள்கிறது.  நவீன தமிழிலக்கிய அறிமுகம் போன்ற நூல்,இலக்கிய வாசிப்புக்கு வரும் வாசகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த நூலும் அதேபோல இலக்கியத்தை வகைமை பிரித்து எப்படியான நூல்கள் இங்குள்ளன. அதிலுள்ள பல்வேறு இசங்கள் என்னென்ன என விளக்கியுள்ளது. இதை தெரிந்துகொண்டவர்கள் அதற்கேற்ப நூல்களை எழுத்தாளர்களைத் தேடிப்பிடித்து நூல்களை வாசித்துக்கொள்ளலாம். இதனால் தேவ...

தி மெக்டொனால்டைசேஷன் ஆப் சொசைட்டி - இன் டு தி டிஜிட்டல் ஏஜ் = உலக கலாசாரத்தையே மாற்றிப்போட்ட ஒற்றைக்கடை!

 The McDonaldization of society -  into the digital age --  George Ritze தி மெக்டொனால்டைசேஷன் ஆப் சொசைட்டி - இன் டு தி டிஜிட்டல் ஏஜ் ஜார்ஜ் ரிட்ஸ்சர் சேஜ் ப.368 மெக்டொனால்ட் என்பது அமெரிக்காவிலுள்ள துரித உணவகம். இந்த கடை முதன்முதலாக பிரான்சைஸ் என்ற வணிக உத்தியை வெற்றிகரமாக பயன்படுத்தி வணிக வெற்றியைப் பெற்றது. இன்று அமெரிக்காவின் முக்கியமான அடையாளம் மெக்டொனால்ட் உணவகம். இதை தொடங்கியவர்களை விட வாங்கி விரிவுபடுத்தியவரே உலகளவில் புகழ்பெற்றார். அதற்கு அவர் மேற்கொண்ட பல்வேறு நவீன முறைகளே காரணம்.  இந்த நூல் மெக்டொனால்ட் கடை எப்படி உணவு வணிகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்று கூறவில்லை. மெக்டொனால்ட் என்ற ஒற்றைக் கடை அமெரிக்க சமூகத்தில் உறவில், உணவில், தொழிலில், கல்வியில், தனிப்பட்ட பொருளாதாரம் என பல்வேறு வகையில் ஏற்படுத்திய பாதிப்பு, செல்வாக்கு பற்றி நூலாசிரியர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள ஜார்ஜின் நூல், அவர் எடுத்துக்கொண்ட ஆய்வு மையப்பொருள் காரணமாக முக்கியத்துவம் பெறுகிறார்.   மெக்டொனால்ட் உணவுகளை ஒருவர் உட்கார்ந்த...

லவ் பார் இம்பர்பெக்ட் திங்க்ஸ் புத்த துறவி ஹாமின் சுனிம் = கடந்த காலத்தை கடந்துவிடுங்கள்!

 love for imperfect things buddhist monk haemin sunim penguin லவ் பார் இம்பர்பெக்ட் திங்க்ஸ் புத்த துறவி ஹாமின் சுனிம் பெங்குவின்  ப.276 துறவி ஒருவர் தன்னுடைய சொந்த அனுபவம், பார்த்த நண்பர்களின் வாழ்க்கை பற்றி பேசி அதற்கான தீர்வுகளை முன் வைக்கிறார். நூலின் அத்தியாயங்கள் சிறியவை. அத்தியாயங்கள் முடிந்தவுடன் மேற்கோள்கள் அறிவுறுத்தல்கள் தனியாக இடம்பெறுகின்றன. நூலை இணையத்தில் பார்த்து எப்படிப்பட்ட நூல் என்று கூட பார்க்கவில்லை. நூலின் தலைப்பைப் பார்த்தவுடனே தரவிறக்கி விட்டேன். அப்புறம் பார்த்தால், நூலின் உள்ளடக்கம் எதிர்பார்க்காதபடி சிறப்பாக இருந்தது.  கொரியாவைச் சேர்ந்த புத்த துறவி ஹாமின் சுனிம். இவர் அமெரிக்காவில் உள்ள யுசி பெர்க்லி, ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுள்ளார். அப்போதுதான் புத்தமதத்தில் ஆர்வம் உருவாகி துறவி ஆகியிருக்கிறார்.தென்கொரியாவில் தன்னார்வ அமைப்பை நடத்தி, மக்களுக்கு குழு தெரபி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவர், ஆன்மிக வழிகாட்டல்களைக் கொண்டு எழுதும் இரண்டாவது நூல் இது. நூலின் சிறப்பு என்னவென்றால், தான் துறவியாகிய வாழ்க்கையில் செய்த தவறுகள், தடுமாற்ற...

அதிக நேரம் வேலை செய்யக்கூடாது என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கி கூறுகிற நூல்!

படம்
  டு நத்திங் - ஹவ் டு பிரேக் அவே ஓவர் வொர்க்கிங் செலஸ்டி ஹெட்லி கட்டுரை நூல் 167 பக்கங்கள் பொதுவாக இந்தியர்கள் விடுமுறை எடுக்காமல் கடுமையாக உழைத்து மேற்கத்திய ஆட்களுக்கு நிறைய சம்பாதித்து கொடுப்பார்கள். ஆகவே அவர்கள் சிறந்த மேனேஜர்களாக இருப்பார்களே ஒழிய கண்டுபிடிப்பாளர்களாக மாறவில்லை. அப்படி அதிக நேரம் உழைப்பதால் என்ன பாதிப்பு தனிமனிதர்களுக்கு, சமூகத்திற்கு, ஏற்படுகிறது என்பதை எழுத்தாளர் செலஸ்டி ஹெட்லி நிதானமாக விவரித்து உள்ளார்.  அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்வது ஆசிய நாடுகளில் பெரிதும் போற்றப்படுகிற பழக்கம். ஆனால், மேலைநாடுகளில் அதை திறமையின்மையாக பார்க்கிறார்கள். அங்கும் ஆசியர்கள் சென்று அதே பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். உண்மையில் அதிக நேரம் வேலை செய்வதன் அர்த்தம் என்ன என்பதை நூலாசிரியர் ஆராய்ந்து, நிறைய நூல்களைப் படித்து விளக்கியிருக்கிறார். அவர் ஆய்வுப்பூர்வமாக சொல்லும் தகவல்கள் எவையும் மிகைப்படுத்தப்பட்டதாக இல்லை.  அடிப்படையில் அலுவலகம் முடிந்தால் வீட்டுக்கு செல்வது, குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவது ஆகியவற்றை தேசப்பற்று, நாட்டை காப்பாற்றுவது, பொருளாதார வலிமை, பணவீ...

மார்க்சியம் எழுத்தாளர்களை, படைப்புகளை எப்படி பார்க்கிறது?

 மார்க்சியமும் இலக்கியமும் ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் கட்டுரைகள் இடதுசாரி அரசியல் தலைவரான ஈஎம்எஸ் நம்பூதிரிபாட், எழுதியுள்ள நூல். இந்த நூலில் அவர் மார்க்சியத்தில் உள்ள எழுத்தாளர்கள், அவர்களின் தத்துவப்பின்புலம், படைப்பு, கலை சமுதாயத்திற்காகவே, சுயமான உணர்வு பிரதிபலிப்புக்காகவா என விரிவாக ஆராய்கிறார்.  மலையாளத்தில் தோழர் ஈஎம்எஸ் புகழ்பெற்ற எழுத்தாளர். மாற்று கருத்தியல் கொண்ட பத்திரிகளாக இருந்தாலும் கூட அவரிடம் கட்டுரைகளை வாங்கி பதிப்பிக்க தவறுவதில்லை என்ற தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் கூறினார். அப்படியான பாங்கு தமிழில் கிடையாது. இங்கு பார்ப்பன ஊடகங்கள் அவர்களுக்கு வசதியான ஆட்களை வைத்து கட்டுரை எழுத வைக்கின்றன. திஜானகிராமனை படித்து தனிப்பட்ட ரீதியில் ஊக்கம் பெற்றவர்களும் திரைப்பட நடிகர்கள் காலையில் இட்லிக்கு என்ன தொட்டுக்கொள்கிறார் என கிசுகிசு எழுதி பிழைக்கும் நிலை... என்ன சொல்வது? மொத்தம் ஐந்து கட்டுரைகளில் எப்படி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை பார்ப்பன அரசியல் சக்திகள் கலைத்து, தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். எழுத்தாளர்களின் படைப்புகள் அரசியலில் பாதிப்பு ஏற்படுத்தாமல் போனது என்று குறிப...

வேலை சார்ந்த மூடநம்பிக்கைகளை ஒழித்துக்கட்டி வெற்றி பெறுவது எப்படி?

படம்
  ரீவொர்க் 37 சிக்னல்ஸ் நிறுவனர்கள் சுயமுன்னேற்ற நூல் ஒரு தொழிலை எப்படி நடத்துவது, அதற்கான தகுதிகள், விளம்பரம் செய்வது, வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது என ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் சுவாரசியமாக கூறியிருக்கிற நூல்தான் ரீவொர்க்.  நூலில் நிறைய மூடநம்பிக்கைகளை உடைத்து எறிந்திருக்கிறார்கள். பொதுவாக நம்பும் பழக்க வழக்கங்கள்தான் அவை. குறிப்பாக, நிறுவனத்தை பெரிய நிறுவனமாக்கவேண்டும் என்ற கருத்து. அப்படி செய்யும்போது என்னென்ன பிரச்னைகளை வருகிறது என சுருக்கமாக விவரித்த பாங்கு அருமை. அடுத்து, திட்டமிடுதல். அப்படி திட்டமிடுதல் கடந்த காலத்தில்தான் இருக்கும். நடைமுறைக்கு எதிர்காலத்தில் வரும் பிரச்னைகளை தீர்க்க உதவாது என அழகாக சுருக்கமாக விளக்கியிருக்கிறார்கள்.  மென்பொருளை உருவாக்கும்போது உணர்ந்த அனுபவங்களையே நூலாக எழுதியிருக்கிறார்கள். நூல்களை எழுத வேண்டுமென எழுதவில்லை என்பது இன்னும் ஆச்சரியம் தருகிறது. இதுபற்றி அவர்களே தனி அத்தியாயம் ஒன்றை எழுதி விளக்கியுள்ளனர். வாய்ப்பு கிடைப்போர் படியுங்கள். சுவாரசியமாக இருக்கும்.  பொதுவாக தொழில் சார்ந்த அறிவுரைகளை படித்தவர்கள், இந்த நூலை ...

பின்லாந்து கல்விமுறையில் என்ன சிறப்பு உள்ளது?

படம்
  டீச் லைக் ஃபின்லாந்து டிமோத்தி டி வாக்கர் கல்வி கட்டுரை நூல் அமெரிக்க ஆசிரியரான வாக்கர், பின்லாந்துக்கு பணிமாறி செல்கிறார். அங்கு ஹெல்சின்கி என்ற நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரைப் பொறுத்தவரை வேலை என்பதில் ஓய்வே கிடையாது. மனிதனா, எந்திரமா என்று கேட்கும்படி உழைக்கவேண்டும் என பாடுபடுகிறார். இறுதியாகத்தான் தெரிகிறது. அப்படி பாடுபட்டு உழைக்கவேண்டியதில்லை. மாணவர்கள் உயருவதற்கு, கவனிப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்தால் போதும் என புரிந்துகொள்கிறார். அதற்காக ஏராளமான நூல்களைப் படித்து பல்வேறு சோதனை முறைகளை செய்து பார்க்கிறார். அதைப்பற்றிய அனுபவங்களை பகிரும் நூல்தான் இது.  பின்லாந்தில் உள்ள கல்விமுறை, கல்வி ஆராய்ச்சி பற்றி வாக்கர் முதலில் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அமெரிக்க முறையில் கல்வியை போதிக்கிறார். தன்னை சற்று நெகிழ்த்திக்கொள்வதில்லை இறுக்கமாகவே இருக்கிறார். அவர் மனம் எப்படி மெல்ல மாறுகிறது என்பதே நூல் விளக்குகிறது. நூலில் அதிகமுறை வரும் வார்த்தை, அமெரிக்காவில், அமெரிக்க கல்விமுறையில் என்பதுதான். பின்லாந்து எப்படிப்பட்ட நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டின...

வாழ்வில் பொருட்களின் நுகர்வைக் குறைத்து முழுமையாக வாழ்வதை கற்றுத்தரும் நூல்!

படம்
  Goodbye, Things Fumio Sasaki குட்பை திங்க்ஸ் ஆன் மினிமலிஸ்ட் லிவ்விங் ஃபிமியோ சசாகி கட்டுரை நூல் பெங்குவின்  சசாகி, நலிந்து வரும் பதிப்புத்துறையில் வேலை செய்கிறார். அதற்காக கற்றது தமிழ் நாயகன் போல இரண்டாயிரம், நான்காயிரம் என சம்பளம் வாங்கவில்லை. வீட்டில் பெரிய டிவி, இசைக்கருவிகள், நூற்றுக்கணக்கான நூல்கள், இசை கேட்கும் கருவிகள் வைத்து இருக்கிறார். ஏராளமான பொருட்களையும் வாங்கிக்கொண்டே இருக்கிறார்.  பொருட்களை எவ்வளவு வாங்கினாலும் அதில் சந்தோஷம் குறைவதை மெல்ல உணர்கிறார். அதன்பொருட்டு, பொருள் சார்ந்து வாழ்க்கை இருப்பதை அறிந்துகொள்கிறார். மெல்ல வீட்டிலுள்ள பொருட்களை குறைக்கத் தொடங்குகிறார். குறைந்த பொருட்களில் நிறைவு என்பதே நூலின் அடிப்படை மையப்பொருள்.  வாழ்க்கையை பயணங்கள், நண்பர்கள், புதிய அனுபவங்களை தேடுவது என அமைத்துக்கொள்கிறார். மினிமலிசம் என்பதை பலரும் புரிந்துகொள்ள கஷ்டப்படக்கூடும். ஆப்பிள் போன் பார்த்திருக்கிறீர்கள். வட்டவடிவில் ஒரே ஒரு பட்டன்தான் இருக்கும். அந்த போன் வந்த காலத்தில் பலரும் ஏகப்பட்ட பட்டன்களை போனில் வைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் அத...

போபால் விஷக்கசிவு சம்பவத்தில் அரசியலை மட்டுமே அதிகம் கூறும் நூல்!

படம்
 போபால் அழிவின் அரசியல் மருதன் கிழக்குப் பதிப்பகம் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலை இயங்கி வந்தது. இங்கு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நடந்த விஷவாயு கசிவில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த விஷ வாயு பாதிப்பு நிலம், நீர், காற்று என்ற பரவி இன்றுவரை மக்களை வதைத்து வருகிறது.  நூலில் அக்காலகட்ட காங்கிரஸ் கட்சி அரசியல், அதிலுள்ள தலைவர்களின் நிலைப்பாடு, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் வரையில் கறைபடிந்தவர்கள் என நிறுவ முயல்கிறார் நூலாசிரியர்.   ராகுல் என்ற பாத்திரம், இந்திராகாந்தியின் மரணத்திற்கு பழிவாங்கவேண்டும் என்று கூறுகிறது. யார் இந்த ராகுல்  என புரியவில்லை. நூலை வாசிக்கும்போது நிறைய இடங்களில் இது புனைவா, கட்டுரையா என்று குழப்பம் வந்துகொண்டே இருக்கிறது.  நூலாசிரியர், கட்டுரைகளை எழுதுவதில் திறமையானவர். ஆனால், புனைவில் எப்படியோ தெரியவில்லை. இந்த நூலில் புனைவை முயன்றிருக்கிறார். அது எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையவில்லை.  பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரத்ன நடார், அவரது பிள்ளை பத்மினி வழியாக கதை சொல்லப்படுகிறது. இரண்ட...

சோவியத் யூனியனை கட்டமைத்த லெனினின் வாழ்க்கை வரலாறு!

படம்
  லெனின் மருதன்  கிழக்கு பதிப்பகம் ஸ்டாலின் நூலுக்குப் பிறகு லெனின் நூலுக்கு வந்திருக்கிறோம். இந்த நூல் லெனின், எப்படி ரஷ்யா ஜார் அரசை புரிந்துகொள்கிறார் என்பதில் இருந்து தொடங்குகிறது. பள்ளியில் படிக்கும் அவருக்கு ஆசிரியர் வழியாக செய்தி வருகிறது. அவரது அண்ணன் அரசர் ஜாரைக் கொல்ல முயன்று பிடிபட்டுவிட்டான். கொல்லப்போகிறார்கள் என. அந்த நாள் தொடங்கி அவரும் சகோதரி ஆன்னா, தாயார் ஆகியோர் படாதபாடுபடுகிறார்கள். லெனின், தனது அண்ணன் வழியாக கற்ற வி்ஷயங்களை அசைபோட்டுப் பார்க்கிறார். இந்த வகையில் நூல் சுவாரசியமாகவே உள்ளது.  நூலில், லெனினின் நூல் வாசிப்பு ஆர்வம், பிரசாரம், நாளிதழ் வெளியீடு - இஸ்க்ரா, பிராவ்தா, போராட்டம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி தெளிவாக கூறப்படுகிறது. சில இடங்களில் ஸ்டாலின் நூலில் வந்துள்ள பகுதிகளை அப்படியே எடுத்து வைத்துள்ளார்களோ என்று கூட தோன்றுகிறது. சம்பவங்கள் ஒன்றாக இருந்தாலும் அதுபற்றிய தோற்றத்தை கோணத்தை சற்றே வேறுபடுத்தி எழுதியிருக்கலாம்.  லெனின் சட்டப்படிப்பு படித்தவர். தன் வாழ்க்கை முழுவதும் அரசின் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டவர். ஸ்வ...

நாடக கலைஞர் அவ்வை சண்முகம் அவர்களின் நாடக வாழ்க்கை போராட்டங்கள்!

படம்
    அவ்வை சண்முகம் படைப்புகள் ப.830 மின்னூல் அதிக பக்கங்களைக் கொண்ட நூல், பொதுவாக மின்னூலை இவ்வளவு பெரியநூலாக வைத்து படிப்பது அயர்ச்சியை உருவாக்கும். அதையெல்லாம் தாண்டி அவ்வை சண்முகத்தின் கட்டுரைகள், நாடக அனுபவங்கள் நம்மை ஈர்க்கின்றன. இந்த நூல் நாடக கலைஞர் அவ்வை சண்முகத்தின் தனிப்பட்ட வாழ்க்கை, நாடக வாழ்க்கை என இரண்டையும் பேசுகிறது கூடுதலாக, நாடக அனுபவங்கள் பற்றி பல்கலைக்கழகங்களில் ஆற்றிய உரையும் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் அதையும் வாசித்து நாடகம் பற்றிய விஷயங்களை அறிந்துகொள்ளலாம். அவ்வை சண்முகம், அவ்வையார் நாடகம் வழியாக புகழ்பெற்றவர். இடதுசாரிகள், திராவிடர் கழகம், திமுக, தமிழரசு கட்சி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். இவரை சங்கரதாஸ் சுவாமிகள் என்பவர் நான்கு ஆண்டுகள் பயிற்சி கொடுத்து உருவாக்கினார். நூலின் இறுதிப்பகுதியில் சங்கரதாஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அவ்வை சண்முகம் தனது குருவுக்கான காணிக்கை போல அப்பகுதியை உருவாக்கியுள்ளார் போல. அவ்வை சண்முகம் படைப்புகள் நூலில் தொடக்கத்தில் அவர் ஆற்றிய உரைகள் இடம்பிடித்துள்ளன. இந்த உரைகள், அனைத்தும் மாணவர்கள...

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள உதவ வழிகாட்டும் அறிவுரைகளின் தொகுப்பு! - ராஜதந்திரம் - நிக்காலோ மாக்கியவெல்லி

    ராஜதந்திரம் நிக்கோலோ மாக்கியவெல்லி தமிழில் துளசி தினமணி நாளிதழ் வெளியீடு தமிழில் வெளிவந்துள்ள ராஜதந்திர நூல். இந்த நூலை எழுதியுள்ள நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலியைச் சேர்ந்தவர். முடியரசில் இயங்கியவர். பின்னாளில் அரசு பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வறுமையில் உழன்று இறந்துபோனார். அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல் இதுதான். எழுத்தாளரின் வறுமை, மகிழ்ச்சி, வலி, வேதனை பற்றி தெரிந்துகொள்வது அவர் எழுதிய நூலின் அடிப்படையை புரிந்துகொள்ள கொஞ்சமேனும் உதவும். நூற்றி எழுபது பக்கங்களைக் கொண்டுள்ள இந்த நூல், இத்தாலி நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. மாக்கியவெல்லி அரசு நிர்வாகம், ராணுவம் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அதன் அடிப்படையில், இத்தாலி நாடு எப்படி இருந்தால் பிழைக்கும் என்பதை ஊகித்து பல்வேறு நீதிகளை எழுதினார். பிரின்ஸ் என்று பெயரிட்டுள்ள இந்த நூல் கூட முடியாட்சியில் இருந்த அரசர் ஒருவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். அரசநீதி, ஆராய்ச்சி நூல்கள், கவிதைகள், நாடகங்கள் என பல துறை நூல்களை எழுதியிருக்கிறார். அரசியல் தொடர்பான நூல்களுக்கே மா...

சாமுவேல் ஹானிமன் எழுதிய ஆர்கனான் ஆஃப் மெடிசின் தமிழில்... நூல் விமர்சனம்

படம்
    ஆர்கனான் சாமுவேல் ஹானிமன் தமிழில் வி ஆர் மூர்த்தி, எஸ்என்கே மூர்த்தி கும்பகோணம் ஓமியோபதி இன்ஸ்டிடியூட் விலை ரூ.3 தமிழ்நாடு அரசின் மின்னூலகத்தில் கிடைத்த ஓமியோபதி நூல். நூலை தரவிறக்குவதில் பிரச்னை இல்லை. ஆனால், கோப்பின் அளவுதான் அதிகமாக உள்ளது. அதை நிர்வாகம் சற்று குறைத்தால், அல்லது வேறு கோப்பு வடிவில் நூல்களை வழங்கினால் நன்றாக இருக்கும். டேட்டா செலவு சற்று குறையும். நூலைப் பார்ப்போம். இந்த நூல், ஜெர்மனியைச்சேர்ந்த ஓமியோபதியின் தந்தையாகிய சாமுவேல் ஹானிமன் எழுதியது. அவர் ஜெர்மன் மொழியில் எழுதியதற்கு ஆறு திருத்தப்பட்ட பதிப்புகள் வந்துவிட்டன. அதாவது, அவரது ஆயுள்காலத்திலேயே.. அந்த நூலை ஆங்கிலத்தில் எழுதி, அதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். நூலின் மொழி, எழுதப்பட்ட காலத்தில் உள்ள வடமொழி, தமிழ் சங்கமமாக உள்ளது சிலசமயங்களில் உறுத்தலாக உள்ளது. மறுக்க முடியாது. ஆனால், நூலின் அடிப்படை விஷயத்தை மருத்துவர் ஹானிமன் கூற விரும்பியதை அறிந்துகொள்வது அந்தளவு கடினமாக இல்லை. நூலில், ஓமியோபதி மருத்துவத்தின் அடிப்படை என்ன, அது எப்படி செயல்படுகிறது., நோயைத் தீர்க்கிறது, அதற்கான மருந்துகளை எப்...

புத்தமதம் பற்றிய அடிப்படைக் கருத்துகளை உரை வடிவில் முன்வைக்கும் நூல்!

படம்
    ஃபண்டமென்டல் ஆஃப் புத்திசம் பீட்டர் சான்டினா இ நூல் இணையத்தில் புத்தமதம் தொடர்பான கோடிக்கணக்கான நூல்கள் இலவசமாக படிக்க கிடைக்கின்றன. அப்படி கிடைத்த நூல்களில் ஒன்று, இந்நூல். நூலில் மொத்தம் பதிமூன்று உரைகள் உள்ளன. அத்தனையும் புத்தமதம் சார்ந்து பீட்டர் சான்டினா ஆற்றியவை. இதில் புத்த மதம், அதன் அடிப்படை கோட்பாடுகள், கருத்துகள் பலவும் பேசப்படுகிறது. எழுத்து வழியாக நிறைய கருத்துகளை விளக்க முயலவில்லை. ஏனெனில் இக்கருத்துகள் அனைத்தும் பேசப்பட்டவை. எனவே, புரிந்துகொள்வதற்கு ஏற்ற உதாரணங்களுடன் சற்று எளிமையாக உள்ளது என்றே கூறவேண்டும். இந்த நூலை படித்தாலே புத்த மதத்தைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியுமா என்றால் ஓரளவுக்கு என்றே பதில் கூறவேண்டும். எளிமையாக பேச்சு வழக்கில் மதம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகளை கூறுகிறது. அந்த வகையில் இந்நூலை தொடக்க வாசிப்பிற்கான ஒன்றாக கருதலாம். 136 பக்கங்களைக் கொண்ட எளிய நூல், வேகமாக வாசித்துவிட எண்ணுவீர்கள். ஆனால் மத நூல் என்பதால், அந்தளவு வேகமாக வாசித்து கடக்கமுடியாது. அந்தளவுக்கு முக்கியமான யோசித்து கடக்கவேண்டிய நிறைய சொற்கள் உள்ளன. துன்பம், மகிழ்ச...

சீனாவின் பசுமை அரசியல் செயல்பாடுகள் செல்லும் திசை!

படம்
    சீனாவின் பசுமை அரசியல் செயல்பாடுகள் செல்லும் திசை! green politics in china joy y zhang,michal barr, pluto press சீனாவின் சோலார் பேனல்கள், பேட்டரி உலகின் மூலை முடுக்கெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சீனா, கொடுத்த சூழல் மாசுபாட்டின் விலை என்ன என்பதைப் பற்றி க்ரீன் பாலிட்டிக்ஸ் இன் சீனா நூல் பேசுகிறது. முக்கியமாக பொதுவாக எழுதப்படும் ஆங்கில நூல்கள் போல, இந்த நூல் சீனாவின் கம்யூனிச கருத்தியல் முரண்பாடுகளை விமர்சனத்திற்குள்ளாக்கவில்லை. அரசின் செயல்பாடுகள், அந்தளவு இயற்கையை பாதுகாக்கும் விதமாக இல்லை என்பதை மட்டுமே கூறுகிறது. நூலில், சீனாவைச் சேர்ந்த சூழலியல் எழுத்தாளர்களின் நூல்கள், சூழலியல் விவாதங்களுக்கு தேவையான வகையில் பல்வேறு தகவல்களை எடுத்துப் பேச பயன்பட்டுள்ளன. இதில், அரசுக்கு ஆதரவான வகையில் எழுதப்பட்டுள்ள தேசியவாத நூல்களும் உள்ளடங்குகிறது. இணையத்திலுள்ள நாட்டின் மீது சூழலின் மீது அக்கறை கொண்டவர்கள், சீனமொழி நூல்களின் கட்டுரைகளை, கருத்துகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் சமூக வலைத்தளங்கள் வழியாக வெளியிடுவதையும் நூலின் எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தன்னார்வ ...

மாவோவின் இளமைக் காலத்தை விளக்குகிற நூல்!

படம்
  மாவோ - ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் எட்ஹர் ஸ்னோ சவுத் விஷன் புக்ஸ் தமிழில் எஸ் இந்திரன் ப.127 இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1937ஆம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகே வெளியுலகிற்கு சீனா, அதன் கம்யூனிச தலைவரான மாவோ பற்றிய முழுமையான அறிவு கிடைத்தது. மாவோவின் நூற்றாண்டான 1993ஆம் ஆண்டு மூல நூலின் மொழிபெயர்ப்பு சுருக்கமாக தமிழில் மொழிபெயர்ப்பாளர் இந்திரனால் எழுதி வெளியிடப்பட்டது. மாவோவின் இளமைப்பருவம் நூலில் சிறப்பாக வாசகர்களின் மனதில் பதியும்படி எழுதப்பட்டுள்ளது. மூல நூலின் சுருக்கம் என்பதால் மற்ற பகுதிகள் எல்லாம் வேகமாக கடந்துசெல்கிறது. அவை எவற்றிலும் மனதில் பதியும் எந்த சம்பவமும் இல்லை. அடிப்படையாக நூல் வழியாக தெரிந்துகொள்வது என்னவென்றால், நூலிலுள்ள சம்பவங்களை எட்ஹரிடம் ஐந்து மணிநேரத்தில் மாவோ கூறியிருக்கிறார். அவற்றை அவர் பதிவு செய்து அல்லது குறிப்பெடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். நூலில் ஆச்சரியமூட்டும் விஷயம், அவரோடு வேலை செய்த தோழர்களுக்கு என்ன ஆனது, இப்போது என்ன செய்கிறார்கள் என்பதையும் கூட அக்கறையோடு பிராக்கெட் போட்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த தகவல் வாசகர்களுக்கு எந்த...

திராவிட தேசியம் - அண்ணாவின் மூன்று உரைகள்

படம்
    திராவிட தேசியம் - மாநில சுயாட்சி சிஎன் அண்ணாதுரை திராவிடர் கழக வெளியீடு விலை ரூ.ஆறு இந்த நூல் மொத்தம் மூன்று உரைகளை உள்ளடக்கியது. 1961, 1967, 1969 என மூன்று ஆண்டுகளி்ல் அண்ணா, பொது மேடையில் பேசிய உரைகளை நூலாக தொகுத்திருக்கிறார்கள். தொடக்க காலகட்ட உரையில் திமுக மாநில சுயாட்சியோடு, திராவிட நாடு கோரிக்கையை முன்வைக்கிறது. அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுகவை பிரிவினைவாத கட்சி என கூறி விமர்சித்தது. திராவிட நாடு கோரிக்கையை ஏன் அண்ணா எழுப்பினார் என்பதற்கான எளிமையான விடைகளை அவரது உரையில் படித்துப் புரிந்துகொள்ளமுடியும், மையத்தில் அதிகார குவிப்பு, வரிவருவாய் பாகுபாடு, மாகாணங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்த அதிகாரம், அனைத்திற்கும் ஒன்றிய அரசின் கைகளை எதிர்பார்த்து நிற்கும் அவலம், இந்திமொழி திணிப்பு ஆகியவற்றை அண்ணா உரையில் சுட்டிக்காட்டுகிறார். ஆட்சிக்கு வந்தபிறகு பிரவினைவாத சட்டத்தில் திமுகவின் ஆட்சியை கலைத்துவிடவாய்ப்புள்ளது என்பதால், திராவிட நாடு கோரிக்கை மட்டும் கைவிடப்பட்டது. ஆனால் அதைக் கேட்பதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன என அண்ணா தைரியமாக கூறியிருக்க...