இடுகைகள்

நீர் நிலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் பட்டுச்சாலை திட்டம் எதனால் முக்கியத்துவம் பெறுகிறது?

  பட்டுச்சாலை திட்டத்தை அதிபர் ஷி ச்சின் பிங் முன்மொழிந்தார். இந்த திட்டம் நிலம் நீர் என இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சீனா முதலீடு செய்து பல்வேறு துறைகளை மேம்படுத்தும். பரஸ்பர நலன்கள், பயன்கள் சீனாவுக்கும், நட்புறவு நாடுகளுக்கும் ஏற்படும். சீனாவிலுள்ள மேற்குபகுதி மாகாணங்கள், நகரங்கள் பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறுகின்றன.  எதற்கு இந்த திட்டம் என பலரும் சீன வெறுப்போடு பேசி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள தேசிய ஆங்கில தினசரிகள் நடுப்பக்கத்தில் ஏராளமாக கட்டுரைகளை எழுதி குவிக்கின்றன. அவற்றில் வெறுப்பை தவிர எள்ளளவுக்கும் உண்மை கிடையாது.  கிழக்கில் உற்பத்தி செய்து மேற்கில் பயன்படுத்துதல் என்ற வகையில் பொருள் உற்பத்தியும் விற்பனையும் நடைபெற்று வருகிறது ஆனால், உண்மையில் அமெரிக்கா ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் நுகர்வு குறைந்து வருகிறது. எனவே பட்டுச்சாலை திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் பொருட்களை தயாரித்து அவற்றை ஏற்றுமதி செய்யலாம். புதிய சந்தைகளை கண்டுபிடித்தால் நாடுகளின் பொருளாதாரமும் வளரும். சீனா தொடக்கத்தில் பெருமளவு உற...