இடுகைகள்

கொலோசியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அழகிய ரோம் நகரமே....

படம்
  ரோம் அமைந்துள்ள இடம் இத்தாலி கலாசார இடம் பிக்பாக்கெட்டுகள் ஜாக்கிரதை   இத்தாலியின் தலைநகரம். இங்கு நீங்கள் சென்றாலே கடந்தகாலத்திற்கு உங்கள் நினைவு சென்றுவிடும். 753 -476 காலகட்ட கட்டுமானங்கள் இங்கு உள்ளன. இதனை ரோமுலஸ், ரெமுஸ் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். 1980ஆம் ஆண்டு இதனை கலாசார தொன்மை கொண்ட இடமாக அறிவித்தனர். ரோமை சுற்றிப் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் முதலில் கொலோசியத்திலிருந்து பயணத்தை தொடங்கவேண்டும். வெஸ்பியன் மன்னர் கால ரோம் நகரில் 80 ஆயிரம் பேர் உட்காரும் ஆம்பிதியேட்டர் உருவாக்கப்பட்டது. இது பிரம்மாண்டமானது. மன்னர் வெஸ்பியன் உருவாக்கி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இது பயன்பாட்டிற்கு வந்தது.கிளாடியேட்டர்கள் இதில் சண்டை போடுவார்கள். சில காலம் இதில் நீர் நிரப்பி கடல் சண்டைகளுக்கான மாதிரி பயிற்சிகளும் செய்யப்பட்டன. இதற்கு அருகில் ரோமன் ஃபாரம் உண்டு. இதில் அரசு அலுவலகங்கள், கோவில், சதுக்கங்கள் உள்ளன. மிகவும் தொன்மையான இடம். இங்கு கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு வயது 2000. ரோமின் மையமான இடம் என வாட்டிகன் நகரைக் கூறலாம். கிறிஸ்துவர்களுக்கு முக்கியமான இடம்.. கத்தோலிக்க கிறிஸ்தவம் பல்வ

கட்டுமானக்கலையில் சாதனை படைத்த ரோமானியர்கள்!

படம்
இன்று அனைத்து அரசியல் , கலை தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கும் ரோம்தான் மையமாக உள்ளது . அங்கு கட்டப்பட்ட கட்டுமானங்கள் , போர் , அரசியல் சார்ந்த நூல்கள் , அறிவியல் என முன்னரே நிறைய சாதித்த நாடு அது . கொலோசியம் கட்டுமானம் பற்றி அறிவோம் . சாம்பல் கலந்த சிமெண்ட் கொலோசியத்தை கட்ட பயன்பட்டது . கொலோசியம் என்ற வார்த்தை கொலோசஸ் என்ற வார்த்தையிலிருந்து உருவானது . இது நீரோ மன்னர் கட்டிய ஏராளமான சிலைகள் கொண்ட நகரத்தை குறிக்க பயன்பட்டது . 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அமர்ந்து பார்க்கமுடியும் அரங்கம்தான் கொலோசியம் . சூரிய வெப்பம் மக்களைத் தாக்காமல் இருக்க வெலேரியம் எனும் அமைப்பு பயன்பட்டது . இங்கு கொலைவெறியாட்டத்தை பார்க்க வரு்ம் பார்வையாளர்களுக்கு எண்களை அச்சிட்ட டோக்கன்களை டிக்கெட்டாக கொடுத்தார்கள் . அவர்களை ஒழுங்குமுறைப்படுத்த மரத்தடுப்புகளும் இருந்தன . மைதானம் அதற்கு கீழே கைதிகளை அடைத்து வைப்பதற்கான இடம் , அவர்களை மைதானத்தில் வெளியே விடுவதற்கான பற்பல வாயில்கள் என கட்டுமானக் கலைஞர்ளள் இதனை உருவாக்கியிருந்தன . போர்   நிலமோ நீரோ அனைத்திலும் ரோமானியர்க