இடுகைகள்

அனஸ்வரா ராஜன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆணாக மாறினால் சுதந்திரம் கிடைத்துவிடும் என நினைத்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயலும் இளம்பெண் - மைக் - மலையாளம்

படம்
  மைக் மலையாளம் இயக்கம்: விஷ்ணு சிவபிரசாத். இசை – ஹெசம் அப்துல் வகாப் தயாரிப்பு – நடிகர் ஜான் ஆபிரகாம் இருவிதமான கடந்த காலங்களைக் கொண்ட ஆண், பெண் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை. மைக் என்ற படம், எல்ஜிபிடியினருக்கான படம்போலவே உருவாகியிருக்கிறது. ஆனால் கதை, திரைக்கதை எழுதிய ஆசிப் அலி அக்பர் இடையில் தடுமாறியதில் சாதாரண காதல் கதையாக மாறிவிட்டது. சாரா தாமஸ் என்ற பாத்திரத்தின் கதைதான் படம். இந்த டீனேஜ் பெண்ணுக்கு தான் ஆணாக இருந்தால் நிறைய நெருக்கடிகளை சமாளிக்கலாம் என்று எண்ணம். அவள் வீட்டில் அம்மாவும், தனக்கு ஆண் பிள்ளை பிறக்காமல் பெண் பிள்ளையாக பிறந்து இருக்கிறாளே என வருத்தம். அம்மா வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறாள். அப்பா, சுயதொழில் செய்து வந்து நஷ்டமாகிறது. இதனால் குடும்பத்தில் அவரை அம்மா ஊதாசீனப்படுத்துகிறார்.   பணம் இல்லாதவரை மனைவி வேண்டாவெறுப்பாக நடத்த அவர் குடும்பத்தை விட்டு விலகிப் போகிறார். சாரா தாமஸின் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு தேக்வாண்டோ சொல்லித் தரும் பயிற்சியாளர் ஒருவர் வருகிறார். அவர், மெல்ல சாரா தாமஸின் வளர்ப்