இடுகைகள்

பகடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊழலால், அநீதியால் இழிந்த நிலைக்கு தள்ளப்படும் மூடநம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் கிராமம்! - தர்பாரி ராகம் - ஶ்ரீலால் சுக்ல

படம்
            மறுவாசிப்பு- தர்பாரி ராகம் ஶ்ரீலால் சுக்ல தமிழ் மொழிபெயர்ப்பு - சரஸ்வதி ராம்னாத் நேஷனல் புக் ட்ரஸ்ட் அரசு மீது அங்கத தன்மையோடு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் இந்தி இலக்கிய நூலை வெளியிட்டதற்காகவே அரசு வெளியீட்டு நிறுவனத்திற்கு நன்றி கூறவேண்டும். புண்பட்ட மனங்கள் அதிகரித்துவிட்ட காலத்தில், இந்த நூலெல்லாம் மறுபதிப்பு கண்டு வெளியானால் அதுவே பெரிய ஆச்சரியம். நூலாசிரியர், ஶ்ரீலால் சுக்ல. இவரது வேறு எந்த நூல்களையும் நான் படித்தது இல்லை. இந்த நூலும் வாசிப்பில் ஆர்வம் கொண்ட பிறரையும் வாசிக்க வைக்கும் நோக்கில் உள்ள சகோதரர் முருகு மூலமாகவே வாங்கினேன். அந்த வகையில் அவருக்கு நன்றி. முந்நூறு பக்கங்களுக்கும் அதிகம் கொண்ட நூலின் அச்சிடப்பட்ட விலை ரூ.28. புத்தக திருவிழா தள்ளுபடியில் ரூ.14க்கு வாங்கினேன். இந்நூலில் உள்ள கருத்துகளை காங்கிரஸ் அனுமதித்து அரசு நிறுவனம் மூலம் வெளியிட்டது.  தற்போதுள்ள வலதுசாரி மதவாத அரசு, இத்தகைய நூலை நிச்சயம் ஏற்காது. புறக்கணிக்கவே செய்யும். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் நூலில் ஏராளம் உள்ளன. சிவபால்கஞ்ச் எனும் கிராமம்...

ரோனி சிந்தனைகள் - பொற்கால ஆட்சியை விரும்பாமல் வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடும் மக்கள்

படம்
  தொடக்கத்தில் கல்லடி பட்ட நாய் போல ஓரிடத்தில் நுழைபவர்கள்தான் பின்னாளில் போடா மயிரே என்று கூறும் அளவுக்கு தந்திரக்காரர்களாக, ஆணவம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். முட்டாள்தனத்தை ஒருமுறை நீங்கள் அடையாளம் கொண்டுவிட்டால் போதும். முட்டாள்கள் அப்படியே இருப்பார்கள், முட்டாள்தனம் மட்டுமே வீரியமாக மாறிக்கொண்டே வரும். ஒரு நாட்டை அழிக்க எதிரிகள், உளவுப்படை, கூலிக்கொலைகாரர்கள் எதுவுமே தேவையில்லை. இவை செய்யும் அனைத்தையும் மதமும், மூடநம்பிக்கைகளுமே செய்துவிடும். ஒருவருக்கு சலுகை கொடுப்பது வேறு. அந்த சலுகையை பயன்படுத்துமாறு அவரின் வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொடுப்பது வேறு. வெட்டப்பட்ட கிராப் தலையை சீவ உயர்தர சீப்பு, விற்றுவிட்ட வாட்சிற்காக அழகிய உயரிய உலோக பட்டை என ஓ ஹென்றியின் கதை மனிதர்கள் போலவேதான் அர்த்தமே இல்லாத அவலங்கள் நம் வாழ்க்கையில் சில சமயங்களில் நடந்து தொலைக்கின்றன. ஆட்டு எலும்பு கடினமோ இல்லையோ, கடித்தே தீருவேன் என்று தின்ற நாய்க்கு கடைவாய் பல் விழுந்துவிட்டது. ஆபீஸ்ல வேலை செய்யறவங்கெல்லாம் எப்படி என்று கேட்டதற்கு, பரவாயில்லைங்க, ஒரு பிகர் தேறும் என்று பதில் சொல்லுவதெல்லாம் விதியல்லாம...

ஒரே மெகந்தியா ஒரே ஒரு குரல்! - பன் பட்டர் ஜாம் எக்ஸ்டென்டட்

படம்
1 பிறரது வளர்ச்சியைக் கண்டு மகிழ்வோமே? எனதருமை நாட்டு மக்களே , வணக்கம். என்னை சந்திப்பதில் குரலைக் கேட்பதில் மகிழ்வீர்கள் என நம்புகிறேன். இன்றுவரை நீங்கள் தாக்குப்பிடித்து எனது நாட்டில் உயிரோடு வாழ்கிறீர்கள் என்றால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நம்புங்கள். அப்படியே உங்களை ஆளும் பரமாத்மாவான என்னை எப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்ளுங்கள். கரம் கூப்பித் தொழுங்கள். மாசி மகம் எனும் நன்னாளை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனது ஆட்சியில் ஆறுகளை, ஏரிகளை எனது தொழிலதிபரான நண்பர்களுக்கு குத்தகை விட்டுவிட்டேன் என விமர்சனங்கள் வருகின்றன. அதை யாருக்காக செய்தேன்? எல்லாம் உங்களுக்காகவே. ஆறுகளில் மணல் அள்ளப்பட்டு அவை இல்லாமல் போனதால்தான், மக்களுக்கு பருவகாலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்க அபாயம் குறைந்திருக்கிறது. இந்த தசாப்த சீர்திருத்தங்களுக்கு முன்னர் நீர்நிலைகளோடு கொண்டாடும் பண்டிகைகள் எப்போதும் நமது மெகந்தியாவில் உண்டு. இனிமேல் அவற்றை எனது வலைப்பக்கத்தில் மெய்நிகர் வடிவில் கொண்டாட வசதி செய்துள்ளேன். ஜில்பவாசம் எனும் பழக்கத்தை மக்கள் இன்றும் கடைபிடித்து வருகிறார்கள். அவர்களின் நம்பிக்...

சினிமாவின் திரைக்கதைப்படி, நிஜவாழ்க்கை சம்பவங்கள் நடக்கத் தொடங்கினால்.. எக்ஸ்ட்ரா ஆர்டினரி - வக்கந்தம் வம்சி

படம்
  எக்ஸ்ட்ரா ஆர்டினரி தெலுங்கு நிதின், ஶ்ரீலீலா, ராஜசேகர், சம்பத் சினிமா கதை, ஜூனியர் ஆர்டிஸ்டின் வாழ்க்கையில்  நிஜத்தில் நடக்க ஆரம்பித்தால்.. என்னவாகும்? தெலுங்குப்படங்கள் பார்க்க பிரம்மாண்டவையாக தெரிந்தாலும் அதில் கொண்டாட்ட வஸ்துகளே அதிகம். கதை என்று பார்த்தால் தக்னூண்டு தெரியும். விவேக் ஆத்ரேயா, தருண் பாஸ்கர், கிரிஷ் போன்ற மிகச்சில இயக்குநர்கள்தான் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாயகத்துவத்தை குறைத்து படம் எடுக்கிறார்கள்.  இந்த படத்தின் இயக்குநர் இதற்கு முன்னர் நா பேரு சூர்யா என்ற தேசியவாத படத்தை எடுத்திருந்தார். அதில், குறைந்தபட்சம் காட்சிகள் கோர்வையாக இருக்கும். கதை என்று பார்த்தாலும் மோசமில்லை என்ற ரகத்தில் இருக்கும். ஆனாலும் படம் ஓடவில்லை. அதை விடுங்கள். ஆனால் நிதின் நடித்துள்ள இந்தப்படம் தெலுங்கு படங்களை ஸ்பூஃப் செய்வது போல ஒரு படமோ என்று கூட தோன்றுகிறது. பாதிக்கும் மேல்தான், அப்படியான படம் கூட இல்லை என்று தெரிகிறது. சினிமாவில் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட். அவனது அப்பா சம்பளத்தில்தான் குடும்பமே ஓடுகிறது.வித்தியாசமான பாத்திரங்களை நடிக்கும் ஆசை நாயகனுக்கு. ஆனால் பெரி...

உலகமே வேண்டும் என அத்தனைக்கும் ஆசைப்படும் அஞ்சல் ஊழியரின் வாழ்க்கைப்பாடு! - அஞ்சல் நிலையம்

படம்
  அஞ்சல் நிலையம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி தமிழில் பாலகுமார் எதிர் வெளியீடு   சார்லஸ் புக்கோவ்ஸ்கி நன்றி- காமன்ஃபோக்ஸ்  ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த அமெரிக்க கவிஞரான சார்லஸ் எழுதியுள்ள நாவல்தான் அஞ்சல் நிலையம். இந்த நூல் அவரின் சுயசரிதை என கூறப்படுகிறது. நாவலின் இறுதிப்பகுதியை நீங்கள் படித்தால் அதை உணர்வீர்கள்.   நாவல் முழுக்க அஞ்சல் வேலை, அதிலுள்ள பிரச்னைகள், அதை எதிர்கொண்டு வேலை செய்யும் ஹென்றி சின்னஸ்கி என்ற ஊழியரின் செயல்பாடு, அவரின் மேலதிகாரிகள், சின்னஸ்கியின் பிற ஆர்வங்களான குதிரைப்பந்தயம், பெண்களை இஷ்டப்படி புணருவது என விவரிக்கப்பட்டுள்ளது. நூலை நீங்கள் சிரித்துக்கொண்டுதான் படிப்பீர்கள். அந்தளவு செய்யும் வேலையை , சந்திக்கிற மனிதர்களை   பகடி செய்கிறார் சார்லஸ். குறிப்பாக பணத்திற்காக வேலை செய்து அந்த வேலையே அவர்களது மனதை, உடலை   எப்படி உருக்குலைக்கிறது என்பதை வேடிக்கையான மொழியில் சொல்கிறார். நாவலின் அங்கத மொழி இல்லாதபோது நூல் சாதாரணமாகவே தோன்றும். அதிலும் அஞ்சலக வேலை, இடங்களை நினைவு வைத்துக்கொள்வதற்கான திட்டங்களை கடுமையாக அங்கதம் ...

வாழ்வின் அவலத்தை, துயரத்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கதைகள் - பஷீர் - 40 கதைகள் - சுகுமாரன் - காலச்சுவடு

            பஷீர் - தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது சிறுகதைகள் தொகுப்பு - சுகுமாரன் காலச்சுவடு பதிப்பகம் மின்னூல் கேரளத்தின் புகழ்பெற்ற இலக்கியவாதியான பஷீர் எழுதிய கதைகளில் நாற்பது கதைகள் இந்த நூல் தொகுப்பில் உள்ளன. பஷீர் எழுதிய முக்கியமான படைப்புகளை நான்கு வெவ்வேறு படைப்புகளாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பஷீரின் தரமான நூல்களை வாங்க நினைத்தால் வாசகர்கள் காலச்சுவட்டை அணுகலாம். பஷீரின் கதைகள் அனைத்துமே வாழ்க்கையின் பல்வேறு காலகட்ட அனுபவங்களைக் கொண்டவைதான். மகிழ்ச்சி, துயரம், லட்சியவாதம் துன்பங்கள், காதல், எழுத்தாளனின் எழுத்து அனுபவங்கள், அரசு பயங்கரவாதம், இந்து, முஸ்லீம் மத வேறுபாடுகள் என பலவற்றையும் நாற்பது கதைகளில் வாசகர்கள் படித்து உணர முடியும். திரு. இரா. முருகானந்தம் ஒருமுறை பேசும்போது சொன்னார். வாழ்க்கையில் எந்தளவு மோசமான நிலை வந்தாலும் கூட அதை எதிர்கொள்ளும் தைரியத்தை பஷீரின் எழுத்துகள் தருகின்றன என்றார். அதை வாசிக்கும்போது வாசகர்கள் எளிதாக உணரலாம். முதல் இரண்டு கதைகள் சற்று துன்பியல் நிகழ்வுகளைக் கொண்டவை. அதாவது ஜென்ம தினம், டைகர். தொகுப்பில் உள்...

புதிய இந்தியாவில் மாணவர்கள் கற்க வேண்டிய வாழ்க்கைத் திறன்கள்!

படம்
  புதிய இந்தியாவில் வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் திறன்கள் என்னென்ன? வாழ்க்கைத் திறன்கள் என்பது வாழ்க்கையை எளிதாக நடத்திச்செல்ல உதவுபவை. இவற்றை கற்றால் நிறைய இடர்பாடுகளை எளிதாக கடந்துசெல்ல முடியும். சவால்களை சந்திக்கலாம். எவரெஸ்டில் ஏறலாம். செங்கடலில் குதித்து நீந்தலாம். பாராகிளைடிங் செய்யலாம். இத்தனையும் சாத்தியம். புதிய தலைமுறை குழந்தைகளுக்கு இப்படி இந்தியாவில் என்னென்ன திறன்களைக் கற்றுக்கொடுக்கலாம் என்ற பரிந்துரை பயிற்சிகள் இதோ... பொய் சொல்லும் கலை - ஆர்ட் ஆஃப் லையிங்  5 வயதுக்கும் மேற்பட்டவர்கள் நிஜத்தை தீர்மானமாக மறைத்து நினைத்தே பார்க்க முடியாத ஆனால் சற்றேறக் குறைய நம்பும்படியான பொய்களை சொல்லவேண்டும். சொல்லும் பொய்யை யாரேனும் கண்டுபிடித்தால் கூட அதற்கு காரணம் என பயிற்சி மாணவர்கள் ஒருவரை குறை சொல்லிவிடலாம். இதை எந்த குற்ற உணர்ச்சியுமின்றி மாணவர்கள் பயில பொய் சொல்லித்தரும் ஆசிரியர் நியமிக்கப்படுவார். இவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தினசரி உண்டு. கூடுதலாக களப்பணி செய்தால்தானே பொய் சொல்லும் கலை சிறக்கும். வேலை இல்லாத, ஊட்டச்சத்து பாதிப்புகொண்ட பதினைந்து லட்ச ரூபா...

திருடர்களுடன் கைகோத்து நாட்டை வல்லரசாக்குவோம் மக்களே! - பன் பட்டர் ஜாம்

படம்
                  அன்புள்ள மெகந்தியா மக்களே! அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நோய்த்தொற்று பரவிய சூழலிலும் வரி கட்டி வந்தீர்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போதுதானே, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும். அரசு ஊதியம் ஆண்டுதோறும் உயர்ந்து வந்தது கடந்த காலம். இனிமேல் ஆண்டுதோறும் அவர்களின் சம்பளம் குறைக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு மக்கள் சேவகர்கள் என்ற இயல்பு பழக்கமாகும். அரசு இயந்திரங்கள் ஊழல் செய்வதில் முன்னிலை வகிப்பதாக உலக அமைப்புகள் தனியாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன. எனவே இப்படி சம்பாதிக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகம் கூட்டிக் கொடுப்பது எந்த நலனையும் ஏற்படுத்தாது. எனவே, அவர்கள் தங்கள் சாமர்த்தியத்தை மக்களிடம் காட்டி பணத்தைப் பெறட்டும். இதனை அரசு மனப்பூர்வமாக ஏற்கிறது. ஆனால் அவர்கள் ஒரு லட்சம் சம்பாதித்தால் இரண்டாயிரம் ரூபாயை உறுதியாக வரியாக கட்டவேண்டும். அப்போதுதான் அரசு அவர்களைப் பாதுகாக்கும். அரசு சேவைகள் அனைத்தும் மக்களுக்கானவை. ஆனால் அனைத்தும் கட்டண சேவை என்பதை இனி உணர்ந்துகொள்வத...

சட்டம் படித்தாலும் எழுத்து மீதான ஆர்வத்தால் சாதனை படைத்த எழுத்தாளர் - விக்டர் ஹியூகோ

படம்
  விக்டர் ஹியூகோ விக்டர் ஹியூகோ இவரின் எழுத்துக்களில் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் மக்கள் உணர்ந்தனர். பிரான்சின் மதிக்கப்படும் எழுத்தாளர் இவர். மனிதர்களின் அனுபவம், உண்மை ஆகியவற்றை எழுத்து வடிவமாக சிறப்பாக கொண்டு வந்தவர் இவர்தான்.  இலக்கியப் பங்களிப்பில் பகடி, கவிதை, த த்துவரீதியான எழுத்துகள், வரலாறு, விமர்சன கட்டுரைகள், அரசியல் பேச்சுகள் என ஏகத்துக்கும் எழுதி தள்ளியுள்ளார்.  ஹியூகோ பிரான்சின் பாரிஸ் நகரில் 1802ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று பிறந்தார். இந்த ஆண்டோடு இவர் பிறந்து 220 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த ஆண்டு இன்னொரு ஆண்டு கூடும் என்பது நீங்கள் அறிய வேண்டிய அரிய தகவல்.  நெப்போலியன் ராணுவப்படையில் இருந்த ஜோசப் லியோபோல்ட் சிகிஸ்பெர்ட் யாரென்று தெரியுமா? அவர்தான் ஹியூகோவின் அப்பா.  பாரிஸ் நகரில் சட்டத்தில் பட்டம் பெற்றார். சட்டத்தை கொஞ்ச நாள் பயிற்சி செய்தார்.  பிறகுதான் ஆர்வம் எழுதுவதில் தொடங்கியது. முதலில் கருத்தை எளிதாக சொல்லுவதற்கான வடிவமான கவிதையை எழுத தொடங்கினார். பிறகு, சம்பவங்கள், நாடகங்கள், கட்டுரைகள் என எழுத தொடங்கினார். ஹியூகோவின் முதல் நாவல், ஹான் ட...

கலையை முழுக்க அரசியலாக மாற்றுவது அனைத்து மக்களுக்கும் பிடித்தமானதாக இருக்காது! - ஆர்ஜித் சென், ஓவிக்கலைஞர்

படம்
              நான் உருவாக்குவதற்கு நான்தான் பொறுப்பு ! ஓவியர் ஆர்ஜித் சென் கோவாவைச் சேர்ந்த கலைஞர் ஆர்ஜித் சென் . இவர்தான் இந்தியாவில் முதல் கிராபிக் நாவலை 1994 இல் ரிவர் ஆப் ஸ்டோரிஸ் என்ற பெயரில் எழுதினார் . அரசின் சட்டங்கள் , கொள்கைகள் பற்றி கார்டூன்களை வரைவது இவருக்கு பிடித்தமானது . அடிக்கடி வைரலாகும் கார்ட்டூ்ன்களில் இப்போது காமிக்ஸ் சென்ஸ் என்ற பெயரில் பத்திரிகை ஒன்றைத் தொடங்கியுள்ளார் . சென்னும் அவரது மனைவியும் பீப்பிள் ட்ரீ என்ற வடிவமைப்பு மையம் ஒன்றைத் தொடங்கி செயல்பட்டு வருகின்றனர் . சென் , இந்தியாவில் நடைபெறும் அனைத்து கலை விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார் . இதுபற்றி அவரிடம் பேசினோம் .      காமிக்ஸிற்கான இதழ் தொடங்கவேண்டுமென எப்படி தோன்றியது ? எனது எட்டு வயதிலிருந்து இப்படி காமிக்ஸ் இதழ் தொடங்கவேண்டுமென்று நினைத்து வருகிறேன் . இப்போது தொடங்கியுள்ள காமிக்ஸ் சென்ஸ் இதழ் , பதிமூன்று முதல் பதினெட்ட வயது வரையிலானவர்களுக்கு . இந்த வயதிலுள்ளவர்கள் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் . ...

கண்டமேனிக்கு கலாய்க்கும் சமூக வலைத்தள ஆட்கள்! - ட்விட்டர், இன்ஸ்டா பரோடி கணக்குகளில் சிரிப்பு விளையாட்டு

படம்
              கண்டமேனிக்கு கலாய்ப்போம் சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பிறரை கிண்டல் செய்வது , பகடிக்கு உள்ளாக்குவது என்பது வேற லெவலுக்கு மாறிவிட்டது . சீரியசான அனைத்து விஷயங்களையும் மக்கள் சின்னாபின்னாக்கி சிரிக்கவிட்டு சிதறவிடுகிறார்கள் . இப்படியெல்லாம் யோசிக்கமுடியுமா என அசரடிக்கிறார்கள் . இப்படி கிண்டல் செய்து கலாய்ப்பதற்கென்றே தனியாக சேனல் ஒன்றை பல்வேறு சமூக வலைத்தளங்களில் தொடங்கி சென்சார் பிரச்னையின்றி கிண்டல் செய்து தள்ளுகிறார்கள் . தொடர்புடையவர்களுக்கு பச்சை மிளகாயை நறுக்கென கடித்தபடி இருக்குமாறு காமெடி செய்கிறார்கள் அவர்களைப் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம் . தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கலைஞர் ஹாப்மெயர் . இவருக்கு 41 வயது . இவர் பார்சி பொம்மைகளை கிண்டல் செய்து பல்வேறு படங்களை பதிவிடுகிறார் . பார்பி பொம்பை எப்படியிருக்கும் என்று உங்களுக்கு தெரியும ? கச்சிதமான மார்பகங்கள் , உடுக்கு இடை , நீளமான கால்கள் என அமைக்கப்பட்டிருக்கும் . இதற்கு எதிர்மாறாக ஹாப்மெயர் தனது பார்பியை வடிவமைக்கிறார் . படங்கள் பார்த்தாலே இயல்ப...

பகடிக்கலைஞர்- கேரள கார்ட்டூனிஸ்ட் சுதீர் நாத்

படம்
கேரளத்திலுள்ள திரிக்காகரா எனும் கிராமத்தில் பிறந்த சிறுவனுக்கு  வரைவது என்றால் அவ்வளவு இஷ்டம். ஆனால் அதற்கான தூண்டுதல் வேண்டுமே? 1986 ஆம் ஆண்டு புகழ்பெற்ற மலையாள கேலிச்சித்திரக் கலைஞர் நாதம் உரையாற்றியதைக் கேட்டதும் சிறுவன் மனதில் இத்துறைதான் தனது எதிர்காலம் என்பது முடிவாகத் தோன்றியது. நாதன்,  முதல்வர் கே.கருணாகரன் வரைந்த கேலிச்சித்திரத்தை எடுத்துச்சென்று அவரிடம் காட்டி கையெழுத்து வாங்கினார். அதனை தன் வகுப்பில் காட்டி பெருமை கொண்டார். ஆனால் வகுப்பில் அச்சிறுவனே அதனை வரைந்ததாக நினைத்துக்கொண்டு பாராட்டினர். சரியோ தவறோ அந்த பாராட்டு அவரை நிறைய வரைய வைத்தது. இன்று சுதீர் நாத், நிறைய கேலிச்சித்திரங்களை வரைவதோடு அதனைப் பற்றி பிறருக்கு வகுப்புகள் எடுக்கிறார். அடுத்து வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டுகிறார். சுதீர் நாத் என்று பெயரும் புகழும் பெற்றவருக்கு பதினைந்து வயதானபோது, அவரின் அம்மா, அவரை கார்ட்டூனிஸ்டான யேசுதாசனிடம் அழைத்துச்சென்றார். அவர்தான் சுதீருக்கு அனைத்து அடிப்படை விஷயங்களையும் கற்பித்தார். 1987 ஆம் ஆண்டு சுதீர் வரைந்த அரசுக்கு எதிரான கார்ட்டூன்கள் ம...