இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனநலனைக் காக்கும் மொபைல் ஆப்ஸ்கள்!

படம்
பிபிசி பெருந்தொற்று காலத்தில் உடல்நலனைப் பாதுகாக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. மனநலன் பாதிப்பு உடனே வெளியே தெரியாவிட்டாலும் நமது இயல்பு, பழகும் முறை என அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. அதனை ஓரளவு சீர் செய்ய உடற்பயிற்சி, யோகா போன்றவை உதவும். இவற்றை தொடர்ச்சியாக செய்வதில்தான் பிரச்னை உள்ளது. அவற்றை நினைவுபடுத்தவும் ஏராளமான ஆப்கள் சந்தையில் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். Calm இந்த ஆப் தினசரி நீங்கள் இனிய இசையோடு தியானம் அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு உதவுகிறது. இதற்கான இசையை நீங்கள் இதில் உள்ள பட்டியலிலிருந்து தேர்வு செய்துகொள்ளலாம். தூங்குவதற்கான நேரத்தையும் இந்த ஆப் கண்காணிக்கிறது. இனிய இசையைத் தேர்ந்தெடுத்து அதனை போஸ் ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டு நீங்கள் தூங்கலாம். காசு கொடுத்து அப்டேட் செய்தால் நிறைய வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும். headspace முன்னாள் புத்த மத துறவியான ஆன்டி புத்திகாம்ப் என்பவர் இந்த ஆப்பின் துணை நிறுவனர் இதுவும் காம் என்ற மேற்சொன்ன ஆப் போலத்தான செயல்படுகிறது. தியானமும், தூக்கமும் இதன் முக்கியமான அம்சங்கள். குறிப்பிட்ட மனநிலை சார்ந்த இச

நிதி வழங்காமல் செலவுகளைக் குறைக்க இந்திய அரசு வற்புறுத்துகிறது - கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்

படம்
தாமஸ் ஐசக், மாத்ருபூமி தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர் பெருந்தொற்று பாதிப்பால் பொருளாதாரம் நலிந்துள்ளது. இதனை சரிசெய்ய எவ்வளவு காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்? நாட்டில் உடனே நிலைமை சீராக வாய்ப்பில்லை. தொழில்துறைகள் இயங்கத் தொடங்கி நிலைமை இயல்புக்கு திரும்ப ஓராண்டு ஆகலாம். எங்கள் கேரள மாநிலத்தில் ஊரங்கு காலத்தில் ஜிஎஸ்டி 50 சதவீதம்தான் வசூலானது. இது மிகவும் குறைவான தொகையாகும். சிறு, குறு தொழில்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடங்கி காணாமல் போகத் தொடங்கின. பெருந்தொற்று காலத்தில் அவை ஆதார வளங்கள் சரிவர கிடைக்காமல் தங்கள் தொழிலகங்களை மூடத்தொடங்கியுள்ளனர். நினைத்துப் பார்க்க முடியாத பொருளாதார சீர்குலைவு காலம்தான் இது. மாநிலங்கள் நிதி ஆதாரத்தை பெறுவதற்கான விதிகளை மாற்றிக்கொள்ள மத்திய அரசு உதவ வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளது பற்றி உங்களது கருத்து? அது சரியானதுதான். மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பை மத்திய அரசு உயர்த்தினால் பெருந்தொற்று காலத்தில் பல்வேறு உதவிகளை எளிதாக மக்களுக்கு வழங்க முடியும். பட்ஜெட்டிற்கு முன்னர் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ம

குடும்பத்தில் ஏற்படும் உறவுச்சிக்கல்களைத் தீர்க்க உதவும் தெரபி முறைகள்!

படம்
pixabay இஎம்டிஆர் எந்த பணிகளையும் செய்வதற்கு நாம் வேறு சூழல்களால் தாக்கப்படாமல் இருக்கவேண்டும். பொதுவாக நாம் ஏதாவது பணியில் இருக்கும்போது நம்மை அதை செய்யவிடாமல் தடுப்பது, நமது கண்களும் காதுகளும். இந்த தெரபி முழுக்க கண்களுக்கானது. தெரபி வல்லுநர் தன் சுட்டு விரலைக் காட்டி குறிப்பிட நிகழ்ச்சியை நினைக்கச் சொல்லுவார். பொதுவாக நமக்கு மகிழ்ச்சியான நினைவுகளை விட துயரமான வேதனையான நிகழ்வுகள்தான் நினைவுக்கு வரும். அவற்றிலிருந்து ஒருவரின் மனதை திருப்பி அவர்களின் எண்ணங்களை நேர்மறையாக மாற்றுவதுதான் இஎம்டிஆர் தெரபி நோக்கம். ஆர்ட் தெரபி அனைவராலும் தன்னுடைய உணர்வுகளை பேசுவதன் மூலமாக வெளிப்படுத்திவிட முடியாது. அதற்காகவே ஒருவரின் மனதிலுள்ள எண்ணங்களை அவர்களது கலை வெளிப்பாட்டு வழியாக அறியும் தெரபி. ஓவியங்களை நாம் வெளிப்படையாக பிறருக்கு பார்வையிட அனுமதிப்பதன் மூலம் சுய விழிப்புணர்வும், விமர்சனங்களை ஏற்கும் மனநிலையும் ஏற்படுகிறது. ஓவியம் மட்டுமல்ல, இசை, எழுத்து ஆகியவையும் ஒருவருக்கு உதவலாம். இசை கேட்பது மட்டுமல்ல அதனை உருவாக்குவதும் மூளையிலுள்ள டோபமைன் சுரப்பில் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. அனிமல்

அன்பு செய்ய குடும்பம் தேவை - தி வில்லபிஸ்

படம்
showbox தி வில்லபிஸ் நெட்பிளிக்ஸ் அனிமேஷன் இயக்கம்: கிரிஸ் பியர்ன் எழுத்து: ரிக்கி ஜெர்வைஸ் மூல நூல்: தி வில்லபிஸ் - லூயிஸ் லோரி ஒளிப்பதிவு - செபாஸ்டியன் பிராடின் இசை:  மார்க் மதர்ஸ்பாக் பெற்றோரின் அன்பு கிடைக்காமல் வாடும் ஐந்து குழந்தைகளின் கதைதான் தி வில்லபிஸ் அனிமேஷன் படம். பெற்றோர் வில்லபி வம்சாவளியைச்சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் அன்பு காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு சாப்பாடு கூட கொடுக்க விரும்பவில்லை. குழந்தைகளை தனித்தனி அறைகளில் விட்டுவிட்டு தங்களைப் பற்றி மட்டுமே யோசித்து வாழ்கின்றனர். இவர்களை வெளியே அனுப்பி கொன்றுவிட்டால் நிம்மதியாக வாழலாம் என்கிறான் டிம். அதனை தங்கை ஜேனும், இரட்டையர்களான பார்னபியும் அப்படியே ஒப்புக்கொள்கிறார்கள். அதற்கு முன் அவர்களுக்கு பிறந்த தங்கை ரூத்தை நகரத்தின் மூலையிலிருந்த மெலனாஃப் என்ற மிட்டாய் தொழிற்சாலைக்கு கொண்டு போய் விட்டு வந்துவிடுகிறார்கள். தங்கை ஜேனுக்கு அதில் விருப்பமில்லை. ஆனால் அப்படி விட்டுவந்தால்தான் அவர்கள் தங்கள் வீட்டில் வாழ முடியும் சூழ்நிலை. இந்நிலையில் பெற்றோரை மிக அபாயகரமான இடங்களுக்கு டூர் அனுப்பி கொன்றுவிட்டால் நிம்மதியாக நம் வீட

சைக்கோ கொலைகாரனை விரட்டி வேட்டையாடும் போலீஸ்காரரும், மாஃபியா தலைவரும்! - தி கேங்ஸ்டர், தி காப், தி டெவில்

படம்
ஃபிளிக்கரிங் மித் தி கேங்ஸ்டர், தி காப், தி டெவில் கொரியா 2019 இயக்குநர் : லீ வோன் டே ஒளிப்பதிவு: பார்க் சியூ சியூங் இசை: ஜோ யாங் வூக் கொரியாவில் முன்னால் செல்லும் காரை இடித்து ஒருவரை கீழிறங்கச் செய்து அவரை கொலை செய்கிறான் கொலைகாரன் ஒருவன். காவல்துறை இந்த வழக்கை தனித்தனியாக வழக்குகளாக கருதுகிறது. ஆனால் ஒரு போலீஸ்காரர் மட்டும் இந்த வழக்குகளை தொடர் கொலைகள் என்று கூறுகிறார். அதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார். ஆனால் அவரின் மேலதிகாரி அதனை ஏற்க மறுக்கிறார். தனித்தனி கொலைகள் என்கிறார். இதனால் அவருக்கும் மேலதிகாரிக்கும் முட்டல் மோதலாகிறது. மேலதிகாரி, கடத்தல் வழக்கு ஒன்று உள்ளது. முதலில் அதைப்பார். இந்த வழக்கை வேறு ஒருவரிடம் ஒப்படைக்கிறேன் என்கிறார். அப்போது சைக்கோ கொலைகாரன் அடுத்து கேங்ஸ்டரை கொல்ல முயல்கிறான். ஆனால் கேங்ஸ்டர் திருப்பி தாக்கியதால் கைகளில் மார்பிலும் காயமுற்று கொலைமுயற்சி தோற்றுப்போக அங்கிருந்து தப்பி ஓடிவிடுகிறான். யார் தன்னை தாக்கியது என அறிய கேங்ஸ்டர் விரும்புகிறான். எதிரிகளா அல்லது வேறு யாருமா என்று அறிய நினைத்து தன் குழுவை நகரம் முழுக்க அனுப்புகிறான். கூடுதலாக காவல்துறையில

ஆளுமைக் குறைபாடுகளை போக்கும் மனநல தெரபி முறைகள்!

படம்
pixabay மையப்படுத்திய தெரபி இதில் உளவியலாளர் நோயாளியை சுதந்திரமாக பேச வைக்கிறார். இதன் காரணமாக அவர் தனது மனதிலுள்ள அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்துகிறார். இவற்றில் உளவியலாளர் பங்கு நோயாளி சொல்வதை முழுமையாக கவனித்து உள்வாங்குவது மட்டுமே. இதனால் தான் செய்தது சரி, தவறு என வாதிடுவதை மெல்ல நோயாளி கைவிடும் வாய்ப்பு ஏற்படுகிறது. தன் செயல்சார்ந்து வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றை இந்த தெரபி ஒருவருக்கு வழங்குகிறது. தெரபி அளிப்பவர் நோயாளி மீதான கரிசனம், நேர்மறையான எண்ணதுடன் அவரை அணுகுகிறார். அவரின் கண்களின் வழியாக உலகைப் பார்ப்பதால் உளவியலாளருக்கும், நோயாளிக்கும் நம்பிக்கையான உறவு ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை சிறப்பாக பயனளிக்கும்   வாய்ப்பு பெருகிறது. ரியாலிட்டி தெரபி நோயாளிக்கு உறவுகளை பராமரிக்க பாதுகாக்க வளர்க்க தெரியாத சிக்கல் இருக்கும். இதனால் குறை, புகார், வசை பாடாமல் எப்படி உறவை வளர்ப்பது என இந்த தெரபி வழியாக உளவியலாளர் கற்றுத் தருகிறார். தன் வாழ்க்கையை நடத்துவதற்கான சுதந்திரம், பணி சார்ந்த அங்கீகாரம், குடும்பம், உறவுகள், நட்பு, உணவு உடை பாதுகாப்பு ஆகியவற்றை இந்த தெரபி உறுதி செய்க

ஓராண்டுக்குள் தடுப்பூசியைக் கண்டுபிடித்தால் அது சாதனைதான்! சௌமியா சுவாமிநாதன், WHO

படம்
TIE மொழிபெயர்ப்பு நேர்காணல் சௌம்யா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த அறிவியலாளர் அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை தடை செய்திருக்கிறதே? அமெரிக்கா உல்க சுகாதார நிறுவனத்திற்கு நிதி மட்டுமன்றி பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் முன்னர் அளித்து வந்த நாடு. எதிர்காலத்தில் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து செயல்படும் என நம்புகிறோம்.   கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்கெனவே இங்கு உள்ளது. புதிதாக நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கவில்லை என்கிறார்கள். இது அறிவியல்ரீதியான கருத்துதானா?   இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நோய்த்தொற்று பரவல் எப்படி குறைவாக இருக்கிறது என பல்வேறு அறிவியலுக்கு மிஞ்சிய கருத்துகள் உலவி வருகின்றன. இவற்றுக்கு சரியான பதில்கள் கிடையாது என்பதே உண்மை. மேற்சொன்ன நாடுகளில் ஊரடங்கு உத்தரவும், சமூக தனிமைப்படுத்தலும் அமலில் இருக்கலாம். இதன் காரணமாக வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதை ஏன் இப்படி கூறுகிறேன் என்றால் இந்த வைரஸ் தொற்றை இயல்பை நம்மால் முழுமையாக கணிக்க முடியவில்லை என்பதால்தான். ஊரடங்கு காலம் தளர்த்தப்ப