அன்பு செய்ய குடும்பம் தேவை - தி வில்லபிஸ்

The Willoughbys Trailer: This Netlfix Original Animated Comedy ...
showbox


தி வில்லபிஸ்

நெட்பிளிக்ஸ் அனிமேஷன்

இயக்கம்: கிரிஸ் பியர்ன்

எழுத்து: ரிக்கி ஜெர்வைஸ்

மூல நூல்: தி வில்லபிஸ் - லூயிஸ் லோரி

ஒளிப்பதிவு - செபாஸ்டியன் பிராடின்

இசை:  மார்க் மதர்ஸ்பாக்


பெற்றோரின் அன்பு கிடைக்காமல் வாடும் ஐந்து குழந்தைகளின் கதைதான் தி வில்லபிஸ் அனிமேஷன் படம். பெற்றோர் வில்லபி வம்சாவளியைச்சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் அன்பு காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு சாப்பாடு கூட கொடுக்க விரும்பவில்லை.

குழந்தைகளை தனித்தனி அறைகளில் விட்டுவிட்டு தங்களைப் பற்றி மட்டுமே யோசித்து வாழ்கின்றனர். இவர்களை வெளியே அனுப்பி கொன்றுவிட்டால் நிம்மதியாக வாழலாம் என்கிறான் டிம். அதனை தங்கை ஜேனும், இரட்டையர்களான பார்னபியும் அப்படியே ஒப்புக்கொள்கிறார்கள். அதற்கு முன் அவர்களுக்கு பிறந்த தங்கை ரூத்தை நகரத்தின் மூலையிலிருந்த மெலனாஃப் என்ற மிட்டாய் தொழிற்சாலைக்கு கொண்டு போய் விட்டு வந்துவிடுகிறார்கள். தங்கை ஜேனுக்கு அதில் விருப்பமில்லை. ஆனால் அப்படி விட்டுவந்தால்தான் அவர்கள் தங்கள் வீட்டில் வாழ முடியும் சூழ்நிலை. இந்நிலையில் பெற்றோரை மிக அபாயகரமான இடங்களுக்கு டூர் அனுப்பி கொன்றுவிட்டால் நிம்மதியாக நம் வீட்டில் இருக்கலாம் என டிம் பிளான் செய்கிறான். ஆனால் அதில் நிறைய குளறுபடிகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அவர்களைப் பார்க்க சீப் ரேட்டில் தாதி ஒருவர் வந்துவிடுகிறார். அவளை டிம்முக்கு முதலில் இருந்தே பிடிப்பதில்லை. ஆனால் அவள் அவர்கள் அனைவரின் மீதும் பிரியமாக இருக்கிறாள். அவர்களின் பெற்றோர் திரும்ப வீட்டுக்கு திரும்பினார்களா, குழந்தைகளுக்கு பெற்றோரின் அன்பு கிடைத்ததா, தாதியின் அன்பை டிம் புரிந்துகொண்டானா என்பதுதான் மீதிக்கதை.

கதையை பூனை ஒன்றுதான் சொல்லுகிறது. டிம், பார்னபி, ஜேன் என அனைத்து கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்கள். உலகில் உறவுகள் அன்பு என்ற இழை இல்லாவிட்டால் அவை இருந்தாலும் எந்த பிரயோஜனமில்லை என்று நறுக்கென சொல்லியிருக்கிறார்கள். ரத்த தொடர்பு இல்லையானாலும் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ முடியும் என்ற செய்தியை அற்புதமாக காட்சிகளுடன், நெஞ்சம் நிறைந்த பாடல்களுடன் சொல்லுகிறது படம்.

கோடைக்காலத்திற்கான அருமையான படம்.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்