கனவுகளை துரத்த ஒழுக்கம் முக்கியமான தேவை! - மயங்க் அகர்வால்
first post |
மயங்க் அகர்வால், கிரிக்கெட் வீரர்
கிரிக்கெட்டில் பரபரப்பான வீரராக இருந்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுப்பது எப்படியிருக்கிறது?
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் நான் இல்லாமல் அணி இழப்பைச் சந்திக்கப்போகிறது என்றெல்லாம் நினைக்கவில்லை. வீட்டிற்கு நாம் விளையாட்டு கடந்து செய்யவேண்டிய விஷயங்கள் உள்ளன. அதேசமயம் இக்காலகட்டத்தில் நம்மை நாம் மேம்படுத்திக்கொள்வதும் முக்கியம்.
நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது இதுவே முதல்முறை அல்லவா?
உண்மைதான். கிரிக்கெட் பயிற்சிக்கு கூட போகாமல் இருப்பது எனக்கு இதுதான் முதல்முறை. எப்போதும் கிரிக்கெட் போட்டிகள், பயிற்சிகள் என்றே இருப்போம். சின்ன இடைவெளி கிடைத்திருப்பது நல்லதுதான். இந்த நிலை மாறி திரும்ப எப்போது கிரிக்கெட் விளையாடப்போகிறோம், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப போகிறோம் என்று தோன்றுகிறது. ஆனால் வேறுவழியில்லை. அரசின் விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம்.
நிச்சயமில்லாத எதிர்காலம் உங்களை பயமுறுத்துகிறதா?
இப்போதுள்ள நிலையை எங்களது கிரிக்கெட் துறை கடந்து பார்க்கவேண்டியது அவசியம். விளையாட்டு கடந்து நாம் கவலைப்படவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அந்த விஷயங்களில் நாம் கவனம் செலுத்தி பிறருக்கு உதவுவதிலும், பொறுப்புகளை ஏற்கவும் முயல வேண்டும்.
தற்போது உங்கள் ஆர்வம் என்னவாக இருக்கிறது. ஏதேனும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டீர்களா?
நான் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்வதிலும் பணிகளைச் செய்வதிலும்தான் முழுமையானவனாக உணர்கிறேன். என் தாய்க்கும், மனைவிக்கும் சமையலில் உதவுகிறேன். காய்கறிகளை வெட்ட உதவுவதே பெரிய பங்களிப்புதான். பல்வேறு நூல்களைப் படித்துவருகிறேன். நண்பர்களை விர்ச்சுவல் முறையில் சந்தித்து பேசி வருகிறேன்.
இளம் வீரர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரைகளை சொல்ல விரும்புகிறீர்கள்?
நான் சிறுவனாக இருக்கும்போது இந்திய அணிக்கு விளையாடுவது எனக்கு கனவாக இருந்தது. உன்னால என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய். அதுவே உன்னுடைய இடத்தை அடையாளம் காட்டும் என்று சொல்லிக் கொள்வேன். இன்றுள்ள சூழ்நிலை எப்படியிருந்தாலும் நம்முடைய ஒழுக்கத்தை நாம் கைவிட்டுவிடக்கூடாது. அனைவரும் வெற்றிபெற்று விட முடியாது. ஆனால் கனவுகளை துரத்துவதில் சுணக்கமே இருக்கக்கூடாது. தினசரி ஒருவேளை உணவு கிடைக்கவே பலர் தடுமாறி வருகின்றனர். இச்சூழ்நிலையில் உங்களுக்கு கிடைத்த விஷயங்களுக்காக நீங்கள் பெருமைப்படவேண்டும்.
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா, ஏப்ரல் 28, 2020
ஆங்கிலத்தில்: மனுஜா வீரப்பா.
கருத்துகள்
கருத்துரையிடுக