ஊரடங்கு நீக்கப்படுவது எப்போது? - ஊரடங்கும் அதன் விளைவுகளும்

ஊரடங்கு நீங்குமா?


விளக்கேற்றுவதும், கைதட்டுவதும் கொரோனா பாதிப்பை நீக்குமா என்று தெரியவில்லை. இந்தியர்கள் உலகளவில் வேறுபட்டு சிந்திப்பவர்கள் என்பதால் இதனை தன் தலைவனின் சொல்வழி மாறாமல் செய்கிறார்கள். பலருக்கும் மனதில் இப்போது இருக்கும் கேள்வி, எப்போது இந்த நிலை மாறும் என்பது. இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்புவது கடினமாகவே இருக்கும். சீனாவின் வூகான் நகர் 76 நாட்களுக்கு அடைக்கப்பட்டு நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இக்காலகட்டத்தில் நோய் அதிகரிப்பு குறையவேண்டும். ஆனால் மாறாக அதிகரித்தால் ஊரடங்கு காலம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.


பலரும் சீக்கிரம் ஊரடங்கு உத்தரவிலிருந்து வெளியே வரவேண்டும். உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாம் நிறைய சவால்களை சந்திக்கவேண்டியிருக்கிறது என்பது பொதுவான கருத்தாக உருவாகி வருகிறது.


மருந்து தயாரிக்கப்படுவதற்கான நாம் நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது. அதேசமயம் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தால் பட்டுமே ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்படும். நாம் இழந்த சுதந்திரம் மீண்டும் கிடைக்கும்.


ஊரடங்கு உத்தரவை தளர்த்தி பணிகளை தொடங்குவதற்கு இன்னொரு அபாயமும் இருக்கிறது. முதல் முறை கொரோனா வைரஸ் தாக்குவது வேகமாக இருந்தது. இரண்டாவது முறையும் அதே வைரஸ் மக்களை தாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த தாக்குதல் முதலில் தாக்கியது போல இருக்கிறது. வேகம் குறைவாக இருக்கும். எப்படி சொல்கிறீர்கள் என்றால் ஜிகா வைரஸ் தாக்குதலை சுட்டிக்காட்டுகிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.


மூன்று வழிமுறைகளைக் கையாண்டு ஊரடங்கு காலத்தை வெற்றிகரமாக நீக்க முடியும்.


ஊரடங்கு காலத்திலேயே நோய் தொற்றும் சதவீத அளவை பெருமளவு அரசு குறைக்கவேண்டும். கறிக்கடை, மீன் கடை என மக்கள் பொருட்களை வாங்கச்செல்வதை தடுத்து அவர்கள் சமூக விலகல் முறையில் முடிந்தளவு தனித்திருக்க செய்யவேண்டும். குடும்பத்தில் ஒருவர் மட்டும் வெளியே சென்று பொருட்களை வாங்கி வரச் செய்வது நோய்த்தொற்று பாதிப்பைக் குறைக்கும். வெளியே செல்பவர் கவனமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்வது அவசியம். இல்லையெனில் அவரது முழு குடும்பமே மருத்துவர்களின் கண்காணிப்பில் தனித்திருக்க நேரிடும்.


இரண்டாவது, நோய் தொற்றும் அபாயமுள்ளவர்கள் பாதுகாப்பாக வைத்திருத்தல். நோய் எதிர்க்கும் சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைதாதல் நோய் பாதிப்பைக் குறைக்கலாம். அடுத்து, சிகிச்சைகள். சிகிச்சை அளிப்பதற்கான இடங்களை தயாரிக்க வேண்டும். ரயில்வேயில் பல்வேறு பெட்டிகளை நோயாளிகளுக்கான படுக்கை வசதிகொண்டதாக மாற்றியுள்ளனர். இதன்மூலம் மருத்துவ வசதி இல்லாத கிராமங்கள் கூட இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும். நோயை சோதிப்பதற்கான கருவிகளை வாங்கி இரண்டாவது முறை கோவிட் -19 பாதிப்பு உள்ளவர்களை சோதித்து அறிவது அவசியம். இல்லையெனில் நோய்த்தொற்றின் பாதிப்பை நம்மால் அறிய முடியாமலே போயிருக்கும்.


சீனா, ஜனவரி 23 அன்று ஊரடங்கை அறிவித்து நிலையை க் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. கடந்த ஏப்ரல் எட்டு அன்று ஊரடங்கை விலக்கிக்கொண்டுள்ளது சீன அரசு. தற்போது அங்கு புதிய நோயாளிகள் யாரும் இல்லை என்று கூறியுள்ளது. அனைத்து நாடுகளும் சீனாவின் வழியைப் பின்பற்ற முடியாது. ஊரடங்கை அறிவித்தால் வேலை இல்லாத தொழிலாளர்களுக்கான நிதியுதவியை அரசுதான் வழங்கவேண்டும். இது அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடைய சமாச்சாரமல்ல. நாட்டிலுள்ள பாதிப்பை பொறுத்து முடிவெடுக்க வேண்டி இருக்கும்.


நன்றி - நியூ சயின்டிஸ்ட் - கிரகாம் லாட்டன்





கருத்துகள்