நோயைப் பற்றிய கவலை, போர் பற்றிய நினைவுகள் - மனநிலையைக் குலைத்துப் போடும்!
இல்னஸ் ஆன்சைட்டி டிஸ்ஆர்டர்
இதனை ஹைப்போகாண்ட்ரியா என்பார்கள்.
பிகு படத்தில், அமிதாப் பச்சன், மலம் கழிக்கும் பிரச்னையை பெரிதுபடுத்திக்கொண்டே இருப்பார் அல்லவா? அதேதான். தனக்கிருக்கும் சிறிய
பிரச்னையை ஷங்கர் லெவலுக்கு பிரமாண்டமாக நினைத்து பயப்படுவார்கள்.
சுட்டுவிரலில் அடிபட்டிருக்கும்.
அதன் மூலம் உடலெங்கும் தொட்டுப்பார்த்து அனைத்து இடங்களிலும் வலிக்கிறது என்பார்கள்.
இதயம், நரம்புமண்டலம், குடல் ஆகிய இடங்களில் பிரச்னையாக இருக்கிறது என புகார் கொடுப்பார்கள்.
நியூபெர்க் போன்ற சோதனை மையங்களில் ஆயிரக்கணக்கான முறை சோதனை செய்துகொண்டே இருப்பார்கள்.
அவர்கள் நோய் அறிகுறிகள் இல்லை என்றாலும், நல்லா பார்த்திருக்க மாட்டீங்கள் இன்னொருமுறை
பாருங்களேன் என தொந்தரவு செய்வார்கள்.
உண்மையில் வலி என்பதே இருக்காது.
அப்படி உடல் உபாதைகள் இருந்தாலும் அது இவர்கள் மருத்துவர்களிடம் நண்பர்களிடம் சொல்லும்
அளவு இருக்காது.
மருத்துவர்களின் பல்வேறு
தெரபி வகுப்புகள், மருந்துகள் மூலம் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
பிடிஎஸ்டி – போஸ்ட் டிரமாடிக் ஸ்டிரெஸ் டிஸ்ஆர்டர்
நாட்டில் நடக்கும் போர்,
பொருளாதார சீரழிவு, அன்பு கொண்டிருந்த நண்பர் அல்லது உறவினரின் மறைவு ஆகியவற்றை பிடிஎஸ்டி
பாதிப்பை ஒருவருக்கு ஏற்படுத்தும். இதன்விளைவாக இப்பாதிப்புக்கு உட்பட்டவர்கள் அதிகம்
கோபம் கொள்வார்கள். இரவில் தூக்கம் வராது, பேனிக் தாக்குதல் அறிகுறிகளான இதயத்துடிப்பு
அதிகரிப்பு, வியர்வை சுரப்பது, காது மந்தமானது போன்ற தன்மையை அடைவார்கள். செய்யும்
விஷயங்களில் கவனம் இருக்காது. அடிக்கடி கனவு கண்டு அலறுவார்கள். முகத்தில் விரக்தி
படிந்திருக்கும்.
பெரும்பாலும் போரில் பங்கேற்ற
ராணுவ வீரர்களுக்கு இந்த மனநல பிரச்னை உருவாகும். எனவே மருத்துவர்களின் ஆலோசனைகளைப்
பெற்று தெரபி வகுப்புகளில் கலந்துகொள்வது, நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பது முக்கியமாகும்.
குழுவாக தெரபி எடுப்பது இதில் நல்ல பயன்களை ஏற்படுத்துகிறது.
பதற்றம் கொடுக்கும் எண்ணங்கள்
உடலில் ஆபத்தான சூழலில் சுரக்கும் அட்ரினலினை சுரக்க வைக்கிறது. இதன் விளைவாக உடல்
தேவையின்றி எச்சரிக்கை அடைகிறது. இதில் மூளையிலுள்ள ஹைப்போதாலமஸ் முக்கியமான பங்கை
வகிக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக