அனைத்து மக்களையும் திருப்தி செய்வது கஷ்டம் - மகாராஷ்டிர அமைச்சர் சாகன் புஜ்பால்


I will take oath as minister in Shiv sena Government: Chhagan ...


சாகன் புஜ்பால், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர், மகாராஷ்டிரம்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு போதுமான உணவை அரசு வழங்கவில்லை என்கிறீர்களே?

அது உண்மையல்ல. மத்திய அரசு ஆறு லட்சம் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. நாங்கள் மும்பையைச் சேர்ந்த பகுதிகளில் மட்டும் எழுபது சதவீத உணவுப்பொருட்களை விநியோகம் செய்திருக்கிறோம். அதாவது 3.5 லட்சம் டன் உணவுப்பொருட்களை வழங்கியுள்ளோம். ஆண்டு வருமானம் 59ஆயிரம் ரூபாய்க்கு கீழுள்ளவர்களுக்கு அதாவது ஆரஞ்சு நிற ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு உணவு தானியங்களை வழங்கவிருக்கிறோம். ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு சிவபோஜன் தாலி திட்டத்தில் இலவச உணவைத தயாரித்து வழங்கி வருகிறோம்.

மும்பையிலுள்ள ஏழைகள் எழுபது சதவீதம் பேருக்கு உணவுப்பொருட்களை வழங்குகிறீர்கள். அப்போது மற்றவர்களுக்கு?

ஆமாம். பல்லாயிரம் பேர் இதில் விடுபட்டு போய்விட்டார்கள். இத்துறை அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வான் அதற்கான திட்டத்தை வகுத்துள்ளார். அதன்படி, நியாயவிலைக்கடைகளில் அவர்கள் தங்களுக்கான உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

மாநில அரசுகள் மத்திய அரசிடம் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை விடுவிக்கும்படி கோரிக்கைகள் வைத்தனவா?

நாங்கள் மத்திய அரசிடம் ஊரடங்கு உத்தரவை தளர்த்துமாறு கேட்டுள்ளோம். அப்போதுதான் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தம் ஊருக்கு செல்ல முடியும். மக்கள் வீட்டுக்குச் செல்லும் முனைப்புடனும் பதற்றத்துடனும் உள்ளனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வரை அவர்களை பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம்.

தினசரி முகாமிலுள்ள தொழிலாளர்களுக்கு ஒரேவகை உணவை வழங்கி வருவதாக கூறுகிறார்களே?

முகாமில் தங்கியிருக்கும் அனைவருக்கும் உணவு, வசதி அத்தனையும் பிடித்தமானதாக இருக்காது. எங்களது நோக்கம், தொழிலாளர்கள் யாரும் பசியோடு உறங்கச்செல்லக்கூடாது என்பதுதான். அனைவருக்கும் பிடித்தமாதிரியான விஷயங்களை செய்வது கடினம்.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊருக்குச் செல்வதற்காக பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூடியது உளவுத்துறையின் தோல்வி என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

வினஸ்துபே என்ற செய்தியாளர் கொடுத்த தவறான தகவல் அது. ஏற்கெனவே ஊருக்குச் செல்லும் முனைப்பில் இருந்தவர்கள் இத்தகவலை உண்மையென நம்பி அங்கு வந்துவிட்டனர். ஏப்ரல் 14 அன்று ஊடரங்கு தளர்த்தப்படும் என தொழிலாளர்கள் நினைத்துவிட்டனர். அதனால்தான் ரயில் ஊர்களுக்கு இயக்கப்படும் என்று அங்கு கூடினர்.

ஏழை மக்களுக்கு சோப்பு, முகமூடி ஆகியவற்றை மும்பை கார்ப்பரேஷன் வழங்கியுள்ளது. இதில் போதுமான அளவில் செயல்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா?

ஆமாம். அப்படி செயல்படுவது அதன் பொறுப்புதானே!

நன்றி: மும்பை மிரர், யோகேஷ் நாயக்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்