சூதாடவும், திருடவும் தூண்டும் மனம்! - காரணம் என்ன?
இம்பல்ஸ் கன்ட்ரோல் அண்ட் அடிக்ஷன்!
சிலரைப் பார்த்திருப்பீர்கள். எதிரில் இருப்பவர் என்ன வார்த்தை சொன்னாலும் அதில் தொனிக்கும் உணர்ச்சிக்கு ஏற்ப உடனுக்குடன் ஆவேசப்பட்டு பேசுவார்கள். இதன்காரணமாக அந்த இடம் எதுவாக இருந்தாலும் குருஷேத்திரமாகி விடும். உடற்பயிற்சி செய்வது, ஷாப்பிங், விளையாட்டு ஆகியவற்றை செய்து பழகி தினந்தோறும் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் உருவாகிவிடுவது அடிமைத்தனம் ஆகும்.
சூதாட்டம் இந்த வகையில் சேரும். பெரிதாக ஜெயிப்பேன் என்று சொல்லிக்கொண்டே விளையாடுவார்கள். வெல்வது பற்றிய கனவு விரிந்துகொண்டே போகும். வெல்லும் எண்ணிக்கையும், வாய்ப்பும் குறைவுதான். இதனால் பண நஷ்டம், குடும்ப பிரச்னை, உறவுகளிடையே பிரிவு ஆகியவை ஏற்படும்.
எளிதாக பணம் சம்பாதிக்கும் பேராசை, விளையாடும்போது மூளையில் சுரக்கும் டோபமைன் சுரப்பு, வெற்றி பெற்றால் கிடைக்கும் பணம் ஆகியவை விளையாடுபவர்களை வெளியேறாமல் உள்ளேயே இருக்க வைக்கிறது.
மன அழுத்தம், பதற்றம், உறக்க குறைபாடு, சூதாட்டம் காரணமாக கடன் தொல்லை, வேலையில் கவனக்குறைவு, சமூக அழுத்தம் காரணமாக தற்கொலை எண்ணம், விட்டுவிட முடியாத தவிப்பு ஆகிய பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
உளவியல் மருத்துவர்கள், சூதாட்டத்தின் காரணமாக ஒருவரின் குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை காட்டுகின்றனர். தெரபி வகுப்புகளையும் நடத்துகின்றனர்.
கிளெப்டோமேனியா
சிறப்பங்காடிகளுக்குச் செல்லும்போது, திருவிழாக்களுக்கு செல்லும்போது இத்தகையோரைப் பார்க்கலாம். பொருட்களை நைசாக திருடி எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். கிளெப்டோமேனியா பாதிப்புக்கு உட்பட்டவர்களுக்கு நோக்கம், திருடுவதுதான். அப்பொருட்களை பயன்படுத்துவதல்ல. எனவே பெரும்பாலும் திருடிய பொருட்களை தூக்கியெறிந்துவிடுவார்கள்.
மன அழுத்தம், பதற்றம், போதைப்பொருட்களை பயன்படுத்துவது, ஆளுமை பிறழ்வு, அதீத செரடோனின் சுரப்பு ஆகிய பிரச்னைகள் கிளெப்டோமேனியாவை ஊக்குவிக்கின்றன. இதற்கு மருந்து ஏதும் கிடையாது. திருடும் பழக்கத்தை கைவிட மருத்துவகள் உதவுகின்றனர்.
பொதுவாக திருடும் பொருட்களின் மதிப்பு பற்றி கவலைப்பட மாட்டார்கள். திருடும் எண்ணம் மனதில் தீவிரமாகிறது. எனவே திருடுகிறார்கள். அவ்வளவுதான் அவற்றை பெரும்பாலும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது குறைவே.
கருத்துகள்
கருத்துரையிடுக