சைக்கோ வில்லனை கண்டுபிடிக்கும் பாச அண்ணனின் கதை! - அஸ்வத்தாமா
அஸ்வத்தாமா
இசை - ஸ்ரீசரண் பகலா
இளம்பெண்களை கடத்திச்சென்று சுகித்துவிட்டு மருத்துவமனைகளில் சேர்த்துவிட்டு எஸ்கேப்பாகும் மனநோய் பிடித்த மருத்துவரின் கதை.
படத்தில் கதாநாயகன் என்றால் அது, பிணங்களை கூராய்வு செய்யும் வில்லன்தான். குற்றங்களை பிறருக்கு தெரியாமல் செய்யும் நோக்கு தொடங்கி, அனைத்திற்கும் தன் அப்பாவிடம் பேசிக்கொண்டே செயல்களை நறுவிசாக செய்வது வரையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கவர்ச்சி நடிகை சிலுக்கு இறந்தபோது, அவரின் பிணத்தைக் கூட சிலர் செக்சிற்காக பயன்படுத்திக்கொண்டார்கள் என்று சாரு நிவேதிதா எழுதியிருந்தார். அதை மனநலப்பிரச்னை என உளவியலாளர்கள் கூறுகின்றனர். அதே பிரச்னை வில்லனுக்கும் இருக்கிறது. அது ஒரு மகிழ்ச்சி. அவ்வளவுதான்.
படத்தில் நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் நகைச்சுவை இம்மியளவும் இல்லை. கதை நேர்கோட்டில் பயணிக்கிறது. மேலும் வில்லன், நாயகனுக்கு பெரிய சவால்களை எதையும் தருவதில்லை. அவருக்கும் நாயகனுக்கும் இடையிலான சாட்சிகளை கொல்வதை மட்டுமே செய்கிறார். இது படத்தின் சுவாரசியத்திற்கு கிஞ்சித்தும் உதவவில்லை. அறிவியல் சார்ந்த குற்றம் என்றால் அதில் இருக்கும் பரபரப்பு படத்தில் இல்லை. ஆம்புலன்ஸை தேடிப்போகும் இடத்தில் நமக்கு ஏற்படும் பரபரப்பு பின்னர் அப்படியே அமுங்கிப் போகிறது. படத்தின் தீமுக்காக நகைச்சுவை, குத்துப்பாட்டை தியாகம் செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை. அப்படியென்றாலும் அந்த காட்சிகளை வலுவாக வைக்கவேண்டாமா?
கிளைமேக்சில் வரும் ஹரீஷ் உத்தமனின் கதாபாத்திர ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது. ஆனால் அது மட்டுமே வில்லனின் புத்திசாலிதனத்தை சொல்லுவதாக இல்லை.
அஸ்வத்தாமா - ஒரு டீ சொல்லுங்க ப்ரோ!
கருத்துகள்
கருத்துரையிடுக