நேர்மறையான செயல்பாடுகளை உருவாக்கும் பெர்மா மாடல்!

Psychology, Psyche, Mask, Wire Rack, Face
pixabay

ஆக்ட் தெரபி

ஒருவர் நான் நேர்மறையாக எதையும் செய்யமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருப்பார். இத்தெரபி எனக்கு நேர்மறையாக எதுவும் செய்யவராது என்ற எண்ணம் தோன்றுகிறது என்று எண்ண வைக்கும். இதன்படி அவர்களுக்கு நேர்மறையாக சிந்திக்கவும், வாழவும் ஆலோசனைகளை உளவியலாளர்கள் வழங்குகின்றனர்.

ஆக்ட் மற்றும் டிபிடி தெரபி, நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகள் தம்மைத்தாமே காயப்படுத்திக்கொள்வது, தவறான எண்ணங்களின் பாதிப்பால் மது, போதைப்பொருட்களை பயன்படுத்தும் எண்ணம் கைவிடப்படுகிறது.

நோயாளி தனக்கு ஏற்படும் எண்ணம் பற்றி அவர் ஒப்புக்கொள்வது சிகிச்சையை எளிதாக்கும். இதன் பின்னர் அவர் கடைபிடிக்கவேண்டிய பழக்கங்களை உளவியலாளர் அட்டவணைப்படுத்தி தருவார். அதனை அவர்கள் முழுமையாக கடைப்பிடிப்பது அவசியம். சுயமாக தனக்கு என்ன தேவை, என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் முழுமையாக உணர்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

டிபிடி தெரபியில் முக்கியமான அம்சங்கள் இவைதான்.

இதில் ஒருவர் சொல்லுவதற்கு பதில் சொல்வதைவிட புரிந்துகொள்வது முக்கியம். எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சிகளால் எல்லைமீறி நடந்துகொள்ளக்கூடாது. பிறர் பேசுவதை முழுகவனத்துடன் உட்கிரகிக்க முயல வேண்டும். எதிர்மறையான உணர்ச்சிகளை சிலர் வெளிப்படுத்தினாலும் நேர்மறையான நடவடிக்கைகளை செயல்படுத்த முயலவேண்டும்.

காக்னிட்டிவ் புரோசஸிங் தெரபி

தான் செய்யும் செயல்பாடுகள் தோற்றாலும் கூட அடுத்தவர்களையே தோல்விக்கு காரணமாக கைகாட்டுவார்கள். திடீரென தோன்றும் கழிவிரக்கத்தால் கடுமையான குற்ற உணர்ச்சிகளுக்கு உள்ளாகுவார்கள். அவர்களுக்கு இந்த தெரபி வழங்கப்படுகிறது.

 

நோயாளிக்கு ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள், யாரும் ஆதரவற்ற நிலை போன்றவற்றை தவிர்க்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட எதிர்மறை எண்ணங்களை பேச வைத்து அவர்களை பாதுகாப்பாக விழிப்புணர்வு நிலையில் வைத்திருக்க உளவியலாளர்கள் முயல்கின்றனர். நடைமுறை வாழ்க்கைக்கான திறன்களை பழக அறிவுறுத்துவது, தகவல்தொடர்பை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை ஏற்படுத்துவது என உளவியலாளர்கள் செயல்படுகின்றனர்.

ரேஷனல் எமோட்டிவ் தெரபி

குறிப்பிட்ட ஏதாவது நிகழ்ச்சி நடந்தால் உடனே அதனால் தூண்டப்பட்டு நான் இதற்கு தகுதியில்லை, ரிஜெக்டட் பீஸ் என பேச தொடங்கிவிடுவார்கள். இவர்களின் பதற்றம், கூச்சம், தயக்கம் சார்ந்த குறைபாடுகளை சரி செய்ய இந்த தெரபி பயன்படுகிறது.

ஸ்டிரெஸ் இனோகுலேஷன் தெரபி

ஒருவரின் மனதிலுள்ள பதற்றம், பேரச்சம் என்பதை சில நிகழ்ச்சிகள் தூண்டிவிடும்போது காணலாம். இவை ஒருவரின் தனி வாழ்க்கைக்கும், அலுவலக வாழ்க்கைகும் பிரச்னையாக உருவாகும். அதற்கான தீர்வுகளை தரவே ஸ்டிரேஎஆஃ இனோகுலேஷன் தெரபி பயன்படுகிறது. சிலந்தியைப் பார்த்து ஒருவருக்கு பேரச்சம் ஏற்படுகிறது என்றால் தெரபியில் அந்த சிலந்திகள் அவரை எதுவும் செய்யாது என்பதை புரிய வைக்க முயல்வார்கள். இதன்வழியாக அவர் பேரச்ச பாதிப்பை கடந்து வர முடியும்.

முழுகவனம் தேவை

ஒருவர் சொல்லுவதை முழுமையாக கவனிப்பது சாதாரண விஷயமல்ல. இதன்மூலம் ஒருவரின் கருத்தை அறிவதோடு, நாம் தெளிவாக முடிவெடுக்க முடியும். இதற்கு யோகா, டாய் சி, தியானம் ஆகிய பயிற்சிகள் உதவுகின்றன. இம்முறை நேர்மறை உளவியல் என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு சமூக அளவிலும் தனிப்பட்ட அளவிலும் நன்மைகள் தரக்கூடிய செயல்பாடுகளை இதில் வலியுறுத்துகின்றனர்.

பெர்மா மாடல்

அதனை உளவியலாளர் மார்ட்டின் செலிக்மன் உருவாக்கினார். நேர்மறையான செயல்பாடுகள், உணர்ச்சிகள், மதிப்பு கொடுக்கவேண்டியவை, செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த தெரபி. இதன்மூலம் ஒருவரின் நடப்பு வாழ்க்கையிலும், எதிர்கால வாழ்க்கையிலும் மகிழ்ச்சிகரமான விளைவுகள் ஏற்படும்.

ஹியூமனிஸ்டிக் தெரபி

ஒருவரின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் யார் காரணம் என்று யோசித்திருக்கிறீர்களா? அவர்களின் எண்ணங்களும், செயல்பாடுகளும்தான். இந்த உண்மையை அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு புரிந்துணர்வு கிடைக்கும். இதன்வழியாகத்தான் தனது குறைபாடுகளை அவர் புரிந்துகொண்டு மீள முடியும். அதைத்தான் ஹியூமனிஸ்டிக் தெரபி கூறுகிறது. ஒருவர் தனது எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் உணரவேண்டும். அதன்வழியாக அவர்களின் தவறுகளும் குறையும். இதற்கு உளவியலாளர் வழிகாட்டி உதவுவார்.

நோயாளி பேச்சு வழியாக தன்னை உணர்வது முக்கியம். தனது லட்சியங்களையும், நோக்கங்களையும் நேர்மையாக வெளிப்படுத்தி பேசுவது முக்கியம். இதன்மூலம் நோயாளியின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், அவரின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும்.

 

கருத்துகள்