சமூக பொறுப்புணர்வுத் திட்டம் மின்னூல் வெளியீடு - தரவிறக்க முகவரி
இனிய உறவுகளுக்கு,
கொரோனா பாதிப்புக்கு நிறுவனங்கள் தரும் நிதியை மத்திய அரசு பிரதமரின் நிதித்திட்டத்திற்கு அனுப்பக் கோரியுள்ளது. இதன்வாயிலாக, அனுப்பும் நிதியை சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் வரவு வைப்பதாக அரசு கூறியுள்ளது. இதனால் மாநில அரசுக்கான நிதித்திட்டத்திற்கு நிதி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது சிஎஸ்ஆர் எனும் சமூக பொறுப்புணர்வு திட்டம் பற்றி. அத்திட்டத்தை எம்முறையில் செய்யலாம், அதிலுள்ள வகைகள், இத்திட்டத்தின் நோக்கம் என்ன, திட்டத்திற்கு செலவு செய்வதன் மூலமாக நிறுவனங்கள் எப்படி வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளன, கால ஓட்டத்தில் தம்மை எப்படி தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றன என்பதை பற்றிய விவரிக்கிறது சமூக பொறுப்புணர்வுத் திட்டம் எனும் மின்னூல். சமூக பொறுப்புணர்வு திட்டம் பற்றி ஆங்கிலத்தில் ஒரு டஜனுக்கும் மேலான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்த எண்ணிக்கை குறைவு. இந்த மின்னூல் எளிமையான முறையில் சமூக பொறுப்புணர்வு திட்டம் பற்றி விளக்குகிறது. அதனை பயன்படுத்தி வணிகத்தை எப்படி மேம்படுத்துவது என்றும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது.
சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் இரண்டாவது பகுதி, தினமலர் பட்டம் இதழில் வெளியானது. நேரம், கொடுக்கப்பட்ட இடம் கருதி அதனை சுருக்கமாகவே எழுதினோம். இந்த வாய்ப்பை அளித்த தினமலர் பட்டம் ஆசிரியர் ஆர்.வெங்கடேஷ், தனது பக்கத்தில் அதனை பிரசுரித்து ஊக்கப்படுத்திய உதவி ஆசிரியர் பாலபாரதி அவர்களுக்கு நன்றிகள் கோடி.
இந்த நூல் கிரியேட்டிவ் காமன் உரிமையில் வெளியிடப்படுகிறது. எனவே அனைவரும் விலையின்றி தரவிறக்கி வாசிக்க பயன்படுத்துங்கள். நன்றி.
வாசிப்பு சார்ந்த இணையதளங்கள் இந்த நூலை தங்கள் தளத்தில் பதிவிட்டால் அதுபற்றிய தகவல்களை அனுப்பக் கோருகிறோம். நன்றி.
ஆனந்தமாக வாசியுங்கள். கருத்துகளை Arapress@protonmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நன்றி.
சமூக பொறுப்புணர்வுத் திட்டம் பீடிஎஃப் கோப்பைத் தரவிறக்க
சமூக பொறுப்புணர்வுத் திட்டம் இ பப் கோப்பைத் தரவிறக்க
கருத்துகள்
கருத்துரையிடுக