இடுகைகள்

த சக்திவேல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்திரிகையாளர் த சக்திவேல் - மன அழுத்தம் குறைத்த மனிதர்

 பத்திரிகையாளர் த சக்திவேல் - மன அழுத்தம் குறைத்த மனிதர் சக்திவேல் அவர்களை நான் அடிமாட்டு சம்பளம் வாங்கிக்கொண்டு நாளிதழ் குழுமத்தில் பணியாற்றும்போது சந்தித்தேன். பொதுவாகவே அந்த நிறுவனத்தில் கலாசாரம் என்னவெனில், வெளி ஊடகம் என்றால் வரவேற்பு, விருந்து சாப்பாடு என மரியாதை அமோகமாக இருக்கும். புதிதாக வருபவர்கள் என்றால் ச்சீ, தூ போ அங்கே உட்கார் என்பார்கள். இப்படியான கலாசாரத்திற்கு அங்கு வேலை செய்தவர்களும் முக்கிய காரணம். பலரும் நிறுவன அடிமைகள். அதாவது நாளிதழ் குழுமம் ஆதரித்த கட்சிக்கு விசுவாசமாக இருந்து பயனை அனுபவிக்க துடித்த கூட்டம். பக்க வடிவமைப்பாளர்கள் பலரும் கல்வி அறிவற்றவர்கள். தேநீர், காபி கொடுக்கும் பணியாளர்களாக இருந்து வடிவமைப்பாளர்களாக மாறியவர்கள். தொழில் இப்படி மேம்பட்டாலும் அவர்களின் குணம் என்பது தெருவோரத்தில் நின்று சண்டைபோடும் ஆட்களைப் போலத்தான் இருக்கும். படித்தவர்கள், நாகரிகமானவர்கள் என யாரை அடையாளம் கண்டாலும் தாழ்வுணர்ச்சியில் வெந்துபோவார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மரியாதைக் குறைவாக பேசுவார்கள்.  அவதூறு, வதந்தி பரப்புவார்கள். முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள்...