இடுகைகள்

பயன்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக பொறுப்புக்குழு எப்படி அமைக்கப்படுகிறது? - சிஎஸ்ஆர் 6

படம்
அத்தியாயம் 6 பெருநிறுவன சமூக பொறுப்பு  குழுவின் வடிவமும், செயல்பாடும்  1987 ஆம் ஆண்டு சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள் பற்றி வேர்ல்டு கமிஷன் அமைப்பு, சில வரையறைகளை உருவாக்கி வெளியிட்டது. அதில் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் என்பது எதிர்கால தலைமுறையினருக்கான தேவைகளை சமரசமின்றி தீர்ப்பதற்கான திட்டங்களையும் தீர்வுகளையும் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியது.  இதுதொடர்பாக இந்திய அரசு, 2011 ஆம் ஆண்டு கம்பெனி சட்டத்தின் கீழ் ஒன்பது விதிகளை உருவாக்கியது. இவை வணிக நிறுவனங்களுக்கும், அவை செய்யும் சமூக பொறுப்பு சார்ந்த திட்டங்களுக்கும் பொருந்துபவை. மேலும் ஐ.நா அமைப்பு இது பற்றிய பத்து கொள்கைகளை வெளியிட்டுள்ளது.  சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கூட இன்று சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களுக்குள் வந்துவிட்டன. இவை இதனைச் செலவாகப்பார்க்காமல் முதலீடாகப் பார்ப்பது அவசியம். தொழில்நிறுவனங்கள் சரியான முறையில் இயங்கி லாபம் பார்க்க, அரசு உரிமம மட்டும் போதாது. அப்பகுதியில் வாழும் மக்களின் ஒத்துழைப்பும் தேவை. இதற்கு சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் உதவும். நிறுவனத்தின் மீதான நம்பிக்கை அதி