இடுகைகள்

இந்தியா-பசுமைப்போராளிகள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் பசுமைப்போராளிகள்!

படம்
இந்தியாவின் பசுமை போராளிகள் ! நகரமயமாதலின் விளைவாக தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்பட்டு நிலங்கள் அரசு அல்லது தனியாரால் ஆக்கிரமிக்கப்படுவது ஊடகங்களில் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது . தொழில்வளர்ச்சி நாட்டிற்கும் மனிதர்களுக்கும் தரும் வளத்தை யாரும் அலட்சியப்படுத்த முடியாது . அதேசமயம் நிலம் , நீர் , காற்று என நாம் வாழ்வதற்கான அனைத்து ஆதாரங்களும் மாசுபட்டால் , நாம் நிலத்தில் கால்பதிக்காமல் பிராணவாயு சிலிண்டர்களோடு விண்வெளியில்தான் வசிக்கவேண்டியிருக்கும் . பசுமையை பாதுகாக்க போராடும் தன்னார்வ மனிதர்களில் சிலர் பூமிக்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர் . அபிஷேக்ராய் உத்தர்காண்ட் மாநிலத்தில் சிதாபனி என்ற காட்டினை உருவாக்கியுள்ள அபிஷேக்ராய் , பாலிவுட் இசையமைப்பாளரும்கூட . 350 க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழிடமாக இக்காட்டினை தன் சொந்த சேமிப்பை கரைத்து உருவாக்கியுள்ளார் அபிஷேக் . " கார்பெட் தேசியப்பூங்காவில் விவசாயத்திற்காக வனப்பரப்பு அழிந்துவருவதும் , புலிகளின் எண்ணிக்கை இதனால் குறைந்ததும் என்னை காடு வளர்ப்புக்கு தூண்டிய முக்கிய காரண