இடுகைகள்

அம்பானி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிஎஸ்என்எல் 5ஜி - கொடி பறக்குது!

படம்
            வினோதரச மஞ்சரி பிஎஸ்என்எல் 5ஜி - கொடி பறக்குது! சில வாரங்களாகவே தனியார் செல்போன் நிறுவனங்களின் தடாலடி விலையேற்றம் பற்றி செய்தி ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்தது. தனியார் நிறுவனங்களின் விலையேற்றத்தில் சிறுபான்மை ஒன்றிய அரசு தலையிட முடியாது என கைவிரித்தது. இது  அகண்ட பாரதத்தில் புதிய காட்சியல்ல. நாட்டின் ஆட்சித் தலைவருக்கு நெருக்கமான நண்பர்தான் விலையேற்றிய செல்போன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வாங்கிய நிதிக்கான விசுவாசம் இருப்பதில் தவறில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர், அம்பானியின் செல்போன் நிறுவனத்திற்கு இலவசமாக டேட்டா கொடுக்கிறார்கள் என்று மாறிய பெருங்கூட்டம், இப்போது விலையேற்றத்தால் புலம்பி புகார்களை வாசித்தபடி பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், மகிழ்ச்சியுடன் கூறிய தகவல்படி வாடிக்கையாளர் எண்ணிக்கை இருபத்தெட்டு லட்சம் என கொள்வோம். இத்தனை பேர்களுக்கு பிஎஸ்என்எல் என்ன வசதிகளை செய்துதரும்? இப்போது உள்ள பெரும்பகுதி செல்போன் டவர்களை, அம்பானி நிறுவனத்திற்கு கட்டாய வாடகைக்கு தரவ...

உலக பணக்கார நாடுகளின் சொத்து மதிப்பில் முதலிடம்!

படம்
  பொதுவாக பணக்காரர்கள் பட்டியலை அடிக்கடி யாராவது அமைப்பு, பத்திரிகைகள் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த செய்தியை படிப்பவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கும் என தெரியாது. தொழிலதிபர்கள் சம்பாதிப்பதை விட அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள, பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதைக் கூட அறியலாம். இந்த செய்தியில் பாசிட்டிவ்வான விஷயம் என இதைத்தான் சொல்லமுடியும்.  அமெரிக்கா - முதல் இடம் 735 பில்லியனர்கள் சீனா - இரண்டாவது இடம் 607 பில்லியனர்கள் இந்தியா - மூன்றாவது இடம் 166 பில்லியனர்கள் ஜெர்மனி - நான்காவது இடம்  134 பில்லியனர்கள் ரஷ்யா -  ஐந்தாவது இடம் 83 பில்லியனர்கள் பணக்காரர்களின் போட்டியில் பெண்களுக்கும் இடமுண்டு. 2022ஆம் ஆண்டு, 327 பெண் பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். இதில் உலகம் முழுக்க 101 பெண்கள் சுயமான பெண் தொழில்முனைவோர்களாக உள்ளனர்.  டாப் 3 பெண் பில்லியனர்கள் 1 ஃபிராங்கைஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 74.8 பில்லியன் 2 அலைஸ் வால்டன் 65.3 பில்லியன் 3 ஜூலியா கோச்  60 பில்லியன்  இந்திய பணக்காரர்களின் வரிசை உலகளவில் முகேஷ் அம்பானி - பத்தாவது இடம் 90.7 பில...