இடுகைகள்

இருண்டகாலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவை பிரிட்டிஷார் சுரண்டிய வரலாறு! - இந்தியாவின் இருண்டகாலம் - சசி தரூர்

படம்
  இந்தியாவின் இருண்டகாலம் சசிதரூர் தமிழில் ஜே கே ராஜசேகரன் கிழக்கு பதிப்பகம் நூலை தொடங்கும்போது, சசிதரூர் தான் இங்கிலாந்து அரசுக்கு வைத்த கோரிக்கை ஒன்றை முன்வைத்து தொடங்குகிறார். 200 ஆண்டுகளாக காலனி நாடாக இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர். இந்த ஆட்சியில் இந்தியாவை சுரண்டியதற்கு அடையாளமாக நஷ்ட ஈடு தரவேண்டும். குறைந்த பட்சம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பேசுகிறார். பின்னாளில் இப்பேச்சுக்கு ஆதரவாக எதிர்ப்பாக நிறைய கருத்துகள் எழுகின்றன.  இவற்றை முன்வைத்து நூல் மெல்ல பல்வேறு தகவல்களை பேசத் தொடங்குகிறது. அட்டையில் பிரிட்டிஷார் இந்தியாவை கொள்ளையடித்த கதை என்று சொல்லிவிட்டார்கள். அதைத்தான் நூலில் சொல்லுகிறார். வித்தியாசம் என்னவென்றால், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நிறைய வசதிகளைக் கொடுத்ததாக பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி எதுவும் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்தது என்பதற்கு இந்தியா நிறைய விலை கொடுத்திருக்கிறது என்பதை சசிதரூர் பல்வேறு ஆதாரங்கள் வழியாக விளக்குகிறார்.  ரயில்வே, சட்டம், நிர்வாக முறைகள் ஆகியவற்றை பிரிட்டிஷாரின் கொடை என்பார்க்ள். இன்று நூலை நன்கொடை என பெரிய விலை போட்டு விற்கிறார்க