இடுகைகள்

விபத்து. கருவிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உறக்கம் உயிரைப் பறிக்கிறதா? - இங்கிலாந்தில் அடிக்கிறது அலாரம்!

படம்
giphy.com  ஐரோப்பிய நாடுகளில் விரைவில் ஓட்டுநர்களின் உறக்கப் பிரச்னையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் புதிதாக தயாரிக்கப்படும் கார்களில் விபத்தைக் குறைப்பதற்காக முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இவை 2022 இல் அமலுக்கு வரும்.  காரில் உறக்கத்தைக் கண்காணிக்கும் கருவி, கருப்புப்பெட்டி ஆகியவை இடம்பெறவிருக்கின்றன. என்ன காரணம், அதிகரித்து வரும் விபத்துகள்தான். 2017 ஆம் ஆண்டில் மட்டும் ஐரோப்பாவில் 25 ஆயிரத்து 300 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் விபத்துகளால் படுகாயமுற்றுள்ளனர். இந்நாடுகளில் சாலை விபத்துகளில் பலியாகுபவர்களின் எண்ணிக்கையை  2030க்குள் 7 ஆயிரமாக குறைக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஓட்டுநருக்கான மேம்பட்ட உதவி அமைப்புகளை( ADAS) உருவாக்குவதற்கான அறிக்கையை கடந்த ஆண்டு ஏப்ரலில் உருவாக்கியது. இதில் 15 புதிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறவிருக்கின்றன. “நீங்கள் இந்த வசதிகளை காரில் முதன்முறையாக பாதுகாப்பு சீட்பெல்ட் அறிமுகமானது போலத்தான் பார்க்கவேண்டும்” என்கிறார் ஐரோப்பிய யூனியன