இடுகைகள்

குளோகல்(Glocal) செய்திகள்! - ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கும்பமேளாவுக்காக திருமண தடை!

படம்
உ.பியில் திருமணத்திற்கு தடை!  உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜில்(அலகாபாத்) கும்பமேளா தொடங்கவிருப்பதால் மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு கூட தடை விதித்து அதிர்ச்சி தந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும் கும்பமேளா விழா உலகளவில் கவனம் பெறும் விழா என்பதால், முதல்வர் யோகி ஆதித்யநாத் இக்காலகட்டத்தில் நடைபெறும் விழாக்களை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அச்சிட்டு கல்யாண மண்டபம் மற்றும் ஹோட்டல்களில் ஒட்டவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூடி கங்கையின் புனிதம் காக்கும் பணியையும் முதல்வர் யோகி தொடங்கியுள்ளார். ஜனவரி 15 தொடங்கும் கும்பமேளாவில் ஆறு முக்கிய தினங்களில் நாடு முழுவதுமிருந்து வரும் பக்தர்கள் குளிப்பதற்காக அரசு ஒதுக்கியுள்ளது.  

கடல்நீரை இனி குடிக்கலாம்!

படம்
இனி கடல்நீரை குடிக்கலாம்! சென்னையைச் சேர்ந்த கடல் தொழில்நுட்ப(NIOT) ஆராய்ச்சியாளர்கள் கடல்நீரை குறைந்த அழுத்தத்தில் நன்னீராக்கும் முறையை(LTTD) கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். கடல்நீரை குறைந்த அழுத்தத்தில் நீராவிக்கு குடிநீராக்கும் இம்முறையில் ஒரு லிட்டரை 60 பைசாவுக்கு சுத்திகரித்து வழங்கமுடியும். லட்சத்தீவுகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் நியோட் அங்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவுள்ளது. அந்த்ரோத், அமினி, கதாமத், கில்டன், கல்பெனி, செட்லட் ஆகிய இடங்களில் அமைக்கப்படவிருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 1.5 லட்சம் லிட்டர் நீரை தினந்தோறும் சுத்திகரித்து வழங்கமுடியும். தினசரி பத்து லட்சம் லிட்டர் நீரை தயாரிக்க தனியார் பங்களிப்பையும் நியோட் எதிர்பார்க்கிறது. மத்திய கிழக்கில் நீரை அதிக வெப்பநிலைக்கு உயர்த்தி, குளிர்வித்து நீரை தூய்மையாக்கும் ஃபிளாஷ் டிஸ்டிலேஷன் பிரபலம். நியோட்டின் முறையில் வெப்பநிலை 80 டிகிரி செல்சியஸாக இருப்பது அவசியம். நடைமுறை சவால்களை சமாளித்து விரைவில் குடிநீர் வழங்க பணிகள் பரபரத்து வருகின்றன.

இரண்டே ஆண்டுகளில் கிழிந்துபோன ரூபாய் நோட்டுகள்!

படம்
கிழிந்த புதிய ரூபாய் நோட்டுகள்! பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு இந்திய அரசு அமுல்படுத்திய புதிய ரூபாய் நோட்டுக்களான ரூ.500, ரூ.2000 தாள்கள் இரண்டே ஆண்டுகளில் கிழிந்து குப்பைகளாகிவிட்டன. தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஐநூறு ரூபாய் நோட்டுக்களில் அச்சுப்பிழைகள்(வரிசை எண், காந்திபடம் இல்லை) இருப்பதாக குறைகள் கூறப்பட்டன. கசப்பு மருந்து என ஏற்றுக்கொண்டு மக்கள் அதனை ஏற்றாலும் ரூபாய் தாள்களின் மட்டமான தரம் இப்போதும் மக்களை வருத்திவருகிறது. கள்ளநோட்டு மற்றும் பாதுகாப்பு விஷயங்களுக்கான ரூபாய்நோட்டுகளை மாற்றுவது வழக்கம்தான். ஆனால் பணப்பரிமாற்றத்தில் ரூபாய் நோட்டு   கிழிந்துவிடாமல் உழைத்தால்தானே மக்களுக்கு உபயோகமாகும். “புதிய ரூபாய் நோட்டுக்களை மக்கள் மடித்து புடவை மற்றும் வேட்டிகளில் வைப்பதால் விரைவில் கிழிந்து ஆயுளை இழந்துள்ளன” என பெயர் வெளியிடாத நிதித்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வை இந்தி நாளிதழான அமர் உஜாலா மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.  

அமெரிக்க நிதியுதவி!

படம்
பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடையாது!  பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு நிதியாக அளிக்க திட்டமிட்ட 1.66 பில்லியன் டாலர்களை அளிக்க முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். “பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை பேச்சில் மட்டுமே காட்டுகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை அளிக்காததால் அமெரிக்கா, பாக்.கிற்கு அளிக்க ஒதுக்கிய நிதியை ஒதுக்கி வைத்துள்ளது” என்கிறார் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த கலோனல் ராப் மேனிங். 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அடைக்கலமாயிருந்த ஒசாமா பின்லேடனை பாக். அரசுக்கு தகவல் கூறாமலேயே நாட்டில் நுழைந்த அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது. பல்வேறு பயங்கரவாதிகளுக்கு அடைக்கல தேசமாக உள்ள பாகிஸ்தான், இந்தியாவையும் அச்சுறுத்திவருகிறது உலகறிந்த செய்தி.   “பாகிஸ்தானின் உள்நாட்டு அரசுக்கு,   மத அடிப்படைவாத இயக்கங்களால் ஆபத்து வரும்போது தடுக்க துடிப்பவர்கள், லஷ்கர் இ தொய்பா, தாலிபன் தீவிரவாதிகளை ஒடுக்க ஏன் யோசிக்கிறார்கள்?” என்கிறார் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலைச் சேர்ந்த டேவிட் செட்னி. பாக்.அரசு அமைதிக்கு இசைந

மருத்துவ வசதி அளிக்கும் மசூதி!

படம்
மருத்துவ மசூதி!  ஹைதராபாத்தைச் சேர்ந்த மசூதியில் தொடங்கப்பட்டுள்ள மருத்துவ மையம், ஒரு லட்சம் மக்களுக்கு மேல் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது. என்எஸ் குந்தாவில் மஸ்ஜித்-இ-இசாக் என்ற மசூதி, அப்பகுதியிலுள்ள மக்களுக்கு முப்பதிற்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளைப் பற்றிய தகவல்களை வழங்கி வருகிறது. மசூதி கமிட்டி, உதவும் கரங்கள்(HHF) எனும் தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து இம்மாதத்திலிருந்து மருத்துவசேவைகளை செய்துவருகிறது.  “மாநிலத்தில் இயங்கும் 30 மருத்துவமனைகளில் தொடக்க மருத்துவசேவைகளை அணுக எங்களது மையம் மக்களுக்கு உதவுகிறது” என்கிறார் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனரான முஜ்தபா ஹசன் அஸ்காரி. பிசியோதெரபி, தாய்மை பராமரிப்பு, விபத்து முதலுதவி, இலவச சோதனை உள்ளிட்டவற்றை குடிசைவாழ் மக்களுக்கு கிடைக்கச்செய்வதே மசூதியின் இச்சேவை லட்சியம். மசூதியின் மருத்துவமையத்திலுள்ள நூறு தன்னார்வலர்கள் மூலம் குழந்தைகளுக்கு தடுப்பூசி, ஊட்டச்சத்து பாதிப்பைக் குறைக்க பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களையும் இம்மையம் வழங்கிவருகிறது.

நான் அவன் இல்லை!

படம்
நான் அவன் இல்லை! – ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்த நல்லபடி ஜீவன்குமாருக்கு 8 ஆம் எட்டாம்வகுப்புக்கு மேல் ஒருவார்த்தைகூட மூளைக்குள் இறங்கவில்லை. அதனால் என்ன? சிலபஸ் தாண்டி யோசிப்போம் என உற்சாகமாக செய்த அகில இந்திய தில்லுமுல்லு வேலைகளால் சிறையில் அட்மிஷன் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. மேட்டர் சிம்பிள். கல்யாண வரன்களைத் தேடும் இணையதளங்களில் வெவ்வேறு பெயர்களில் இயங்கிய ஜீவன்குமார். நல்ல காசு கொழிக்கும் பெண்களை வளைப்பார். ஆங்கிலமொழி அபாரமாய் கைகொடுக்க, காதல் வசனங்களால் முதலில் பெண்ணின் மனதை கரைத்து பின்னர் அவர்களின் டெபிட்கார்டில் கைவைப்பது ஜீவன் டெக்னிக். அம்மாவுக்கு கேன்சர் என்ற சென்டிமெண்ட் காரணத்தை சொல்லி ஜீவன் ஆட்டையப்போட்டது மட்டும் லம்ப்பாக ரூ.20 லட்சம். பிறகு மெல்ல தொடர்புஎல்லைக்கு வெளியே நழுவிவிடும் ஜீவன்குமாரின் துரோகத்தை போலீசுக்கு பாதிக்கப்பட்ட லேடீஸ் புட்டுவைக்க, 23 வயதில் மாமியார் வீட்டில் வசமாக மாட்டிக்கொண்டார். டெல்லி, ஒடிஷா, தெலங்கானா, கர்நாடகா என ஜீவன் ரோமிங்கில் செய்த காதல் மோசடிகள் லீக்காக தொடங்கியுள்ளன.

விபத்துகளை தவிர்க்க சுவர்! - ரயில்வே புதிய திட்டம்!

படம்
விபத்துகளை தடுக்க சுவர்  குறைந்த கட்டணத்தில் அதிக தொலைவுக்கு இயக்கப்படும் ரயில்களைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே, இருப்புபாதைகளில் ஏற்படும் விபத்து மரணங்களை தடுக்க   ஏராளமான திட்டங்களை உருவாக்கி வருகிறது. அண்மையில் ரயில் நிலையங்களில் 3 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு பாதுகாப்பு சுவர் கட்டலாமா? என   யோசித்துவருகிறது. அண்மையில் பஞ்சாபின் தசரா திருவிழாவில் ஏற்பட்ட இருப்புபாதை விபத்துகளையொட்டி, ரூ.2 ஆயிரத்து ஐநூறு கோடியில் இருப்புபாதையொட்டி சுவரைக் கட்ட ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் இந்திய ரயில்வே வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி நகரம் மற்றும் புறநகர் ரயில்நிலையங்களில் 2.7 மீட்டர் உயரத்திற்கு சுவர் எழுப்பப்படவிருக்கிறது. “இத்திட்டம் மூலம் ரயில்களின் வேகத்தின் 160 கி.மீ மற்றும் அதற்கு மேலாக உயர்த்தவும், கால்நடைகள், மனிதர்கள் இருப்புபாதைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும் முடியும்’ என்கிறார் ரயில்வே போர்டு உறுப்பினரான விஸ்வேஷ் சௌபே. சுவர் கட்டுவதற்கான திட்டம் முடிவானதும் ராஷ்டிரிய ரயில் சங்ரக்‌ஷ்ன கோஷ் என்ற நிறுவனம் மூலம் ரூ.650 கோடி வழங்கப்படவிருக்கிறது. மேலும் தே

கப் பஞ்சாயத்து குற்றப்பட்டியலில் இடம்பிடித்தது!

படம்
கப் பஞ்சாயத்து குற்றங்கள்! ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில கிராமங்களில் நடைபெறும் கப் பஞ்சாயத்து குற்றங்களை முதல்முறையாக தேசிய குற்றப்பதிவு ஆணையம்(NCRB) பதிவு செய்து விரைவில் வெளியிடவுள்ளது. வட இந்தியாவின் கிராமப்புறங்களில் நடைபெறும் ஜாதி மேலாதிக்க கப் பஞ்சாயத்துக்களால் வல்லுறவு, ஆணவக்கொலை ஆகியவற்றுக்கு அபராதம், விருந்து, கசையடி, சமூக புறக்கணிப்பு போன்ற தண்டனைகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு விதிக்கப்பட்டு வருகிறது. 2014- 2016 காலகட்டத்தில் 14-251 என ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்ட உள்துறை அமைச்சகம், என்சிஆர்பி மூலம் இதனை 2017 ஆம் ஆண்டு அறிக்கையில் ஆவணப்படுத்த தொடங்கியது. “கப் பஞ்சாயத்துகளை குற்றவாளிகளாக்க அரசு முயற்சிக்கிறது. நாட்டின் கலாசாரம், மதிப்புகளை அடிப்படையாக கொண்டு செயல்படுவது கப் பஞ்சாயத்துகள்தான்” என அரசுக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார் ஹரியானா சர்வ் கப் ஜாட் பஞ்சாயத்தைச் சேரந்த சுபேசிங் சமைன்.

போன் செய்தால் லைசென்ஸ் ரத்து!

படம்
போன் பேசினால் லைசென்ஸ் ரத்து! – வண்டி ஓட்டும்போது போனில் பேசினால் ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவெடுத்துள்ளது. விபத்துகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் போனில் பேசுவது உள்ளிட்ட ஆறுவகை தவறுகளுக்கு மூன்று மாத லைசென்ஸ் ரத்து தண்டனையை புனே-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலையில் போக்குவரத்துதுறை அமுல்படுத்தியுள்ளது. விரைவில் நாட்டின் பிற சாலைகளுக்கும் அமுல்படுத்த அரசு யோசித்து வருகிறது. கடந்தாண்டு மகாராஷ்டிராவில் மட்டும் 35,800 விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 12,200 விபத்துகள் தீவிரமான படுகாயங்களை ஏற்படுத்தியவை. உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைத்த கமிட்டி மூலம் இந்திய மாநிலங்களில் ஏற்படும் சாலை விபத்துகளின் அளவை 10% குறைக்க வலியுறுத்தியுள்ளது. இதன் விளைவாக மது அருந்தி வாகனம் ஓட்டுவது, வரம்பு மீறிய வேகம், சிக்னல்களை புறக்கணிப்பது, அதிகளவு பயணிகளை வண்டிகளில் ஏற்றுவது உள்ளிட்ட தவறுகளுக்கு ஓட்டுநர் உரிமம் தடைசெய்யப்படவிருக்கிறது.

நாயை கற்பழித்த கூட்டம்!

படம்
நாயை கடத்திய கூட்டம்!  மும்பையின் மால்வானி பகுதியைச் சேர்ந்த சுதா ஃபெர்னாண்டஸ், விலங்குநேயத்துடன் தெரு நாய்களுக்கு உணவு படைப்பது தினசரி வழக்கம். ஒருநாள் வழக்கம்போல உணவுதர நாய் அருகே போக அது பயந்துவிலக நொந்துபோனார். அப்போதுதான் நாயின் பாலுறுப்பில் ரத்தம் வடிவதைக் கண்டு அதிர்ந்தார். “நாயின்’பாலுறுப்பு கடுமையாக சேதப்பட்டிருந்தது. வலியில் துடித்த நாயினால் சரியாக உட்கார கூட முடியவில்லை” என்கிறார் சுதா பெர்னாண்டஸ். கால்நடை மருத்துவரிடம் நாயை கொண்டுபோய் சோதித்தபோது, நாயை அடையாளம் தெரியாத சிலர் வல்லுறவுக்கு உட்படுத்திய அவலம் தெரிய வந்துள்ளது. அப்போது அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுநர், நள்ளிரவில் போதைப்பொருட்களுக்கு அடிமையான நான்கு பேர் நாயை கயிற்றால் கட்டி வல்லுறவில் ஈடுபட்டு அதன் பாலுறுப்பை சிதைத்திருப்பது குறித்த அதிர்ச்சி தகவலை தந்துள்ளார்.   

ரயில்வே நிலையத்தில் தேசியக்கொடி- அரசின் சாதனை திட்டம்!

படம்
ரயில்வே ஸ்டேஷனில் தேசியக்கொடி!  இந்திய ரயில்வே, இந்தியாவிலுள்ள 75 பிசியான ரயில்நிலையங்களில் நூறு அடியில் தேசியக்கொடி கம்பங்களை எமர்ஜென்சி வேகத்தில் அமைக்கவுள்ளனர். எதற்கு? என்பதுதான் மக்களின் கேள்வியும் கூட. தற்போது மும்பையில் 7 நிலையங்களில் தேசியக்கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டு விட்டன. இதற்கான நிதி ரயில்வே மேம்பாடு திட்டத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. “முதல்தர ரயில் நிலையங்களில் நூறு அடி கொடிக்கம்பங்கள் டிசம்பர் மாதத்தில் அமைக்கப்படும்” என உறுதியாக பேசுகிறார் ரயில்வே போர்டு இயக்குநரான விவேக் சக்சேனா. “தேசியக்கொடியை ரயில்நிலையத்தில் அமைப்பது எப்படி பயணிகளுக்கு உதவும்?” என நமக்கு தோன்றிய அதே லாஜிக் கேள்வியை கேட்கிறார் மேற்கு ரயில்வே பயணிகள் கமிட்டி உறுப்பினரான ரத்தன் போடர். ஏழைத்தாயிடம் மகனிடம் கேட்கவேண்டிய கேள்வி இது!

காவிரிக்கு சிலை - அடுத்த சிலை ரெடி!

படம்
காவிரி தாய்க்கு சிலை!  இந்திய அரசு குஜராத்தில் சர்தார் படேலுக்கு வைத்த சிலை நாடெங்கும் சிலைகளை கட்டும் கான்செப்ட்டை வைரலாக உருவாக்கியுள்ளது. கர்நாடகா அரசு, மத்திய அரசைப் பின்பற்றி விரைவில் காவிரித்தாய்க்கு சிலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்திய நகரங்களுக்கு இந்துப்பெயர் மாற்றம் என்பதோடு, விண்ணுயர சிலைகளை வைப்பது இந்த ஆண்டின் ஸ்பெஷல் கலாசாரம். அண்மையில் கர்நாடக அரசு 350 அடி உயர காவிரித்தாயை மண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகரில் உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான கட்டுமானச்செலவு அரசின் பொறுப்பல்ல என அமைச்சர் சிவராஜ்குமார் ஊடகங்களுக்கு பேட்டி தட்டியுள்ளார். காவிரியின் சிலையுடன் பொழுதுபோக்கு பூங்காவும், ஹம்பி, பெலூர் ஆகிய இடங்களிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களையும் இந்த இடத்தில் உருவாக்க அரசு யோசித்து வருகிறது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனம் தொடங்கவிருக்கும் இப்பணிக்கான செலவு ரூ. 2 ஆயிரம் கோடி. நாட்டில் மக்களை விட சிலைகள் அதிகமாயிருச்சு!

ஆன்லைன் ஷாப்பிங்கில் காமெடி!

படம்
ஸ்பீக்கருக்கு பதில் லட்டு!  வீட்டிலேயே ஸ்மார்ட்போனில் பொருட்களை ஆர்டர் செய்து சொகுசாக வீட்டு வாசலுக்கு சென்று வாங்கும் ஆன்லைன் பர்சேஸ் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பில்லியன் டாலர் விற்பனையிலும் பொருட்கள் மாறும் காமெடி அரங்கேறுவதுதான் சிச்சுவேஷன் காமெடி. தீபாவளிக்கு ஸ்பீக்கர் வாங்கி கொண்டாட நினைத்த வாடிகையாளர் ஒருவர், அமேஸானில் ஆர்ப்பாட்டமாக தேடி சலித்து புகழ்பெற்ற பிராண்டை ஆர்டர் செய்தார். ரூ.7 ஆயிரம் செலுத்தி ஸ்பீக்கர் வாங்கிவிட்டோம் என்ற கெத்தில் டெலிவரி முகவரி கொடுத்தவருக்கு சில நாட்கள் கழித்து ரூ. 20 மதிப்புள்ள லட்டுகள் மட்டுமே கிடைத்தன. “எனக்கு நடந்த அநீதியைப் பாருங்களேன்” என டென்ஷனான வாடிக்கையாளர் அதை சமூகவலைதளத்தில் படம்பிடித்து போட அமேஸானுக்கு பெரும் தர்மசங்கடமாக, மன்னிப்பு கேட்டு தவறான பார்சலை மாற்றிக்கொடுப்பதாக கோரியுள்ளது. ஆன்லைன் டெலிவரிகளில் போலிகளும் புயலாய் உள்ளே புக, வாடிக்கையாளர்களின் போலீஸ் புகார்களும், பணத்தை திரும்ப தரும் இக்கட்டும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஏற்படத்தொடங்கியுள்ளது.

குடும்ப கஷ்டத்தை தீர்க்க வங்கி கொள்ளை!

பொம்மைத் துப்பாக்கி திருடர்!  ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக் ஊழியர் வங்கியில் துப்பாக்கி முனையில் கேஷியரை மிரட்டி இரண்டரை லட்சம் கொள்ளையடித்தார். ரிசல்ட்? காமெடிதான். மணிகொண்டா பகுதியிலுள்ள தனியார் வங்கியில் மாலை 3.30 க்கு பர்தா அணிந்து வந்த டேவிட் பிரவீன், நேராக கேஷியர் சிவசங்கர் கேபினுக்கு சென்றார். பொம்மைத்துப்பாக்கியை நீட்டி ஜஸ்ட் 2.5 லட்ச ரூபாயை அசால்டாக கேட்டார். கொடுக்க மறுத்த சிவசங்கரை   கன்னத்தில் குத்தி பணத்தை எடுத்துக்கொண்டு ஓடியவரை வங்கி ஊழியர்கள், மக்கள் விடாப்பிடியாக துரத்தினர். உடனே டம்பி வெடிகுண்டை வெடிச்சு உங்களுக்கு இப்பவே அட்வான்சாக தீபாவளி கொண்டிடுறேன் என மிரட்டிய பிரவீன் வேகமாக ஓடி காரில் ஏறி தப்ப முயன்றார். ஆனால் மக்கள்கூட்டம் அவரது மிரட்டலை காதிலேயே வாங்காமல் அங்கேயே போட்டு புரட்டி எடுத்து போலீசில் ஒப்படைத்தது. ஐ.டியில் புதிய வேலைக்கு மாறிய பிரவீனுக்கு, சம்பளம் போடாமல் கம்பெனி இழுத்தடித்தது. ஸ்கூல்பீஸ், வீட்டுச்செலவு என பிரச்னைகள் வெடிக்க பிளாஸ்டிக் பிஸ்டல், டம்மி பாமுடன் பிரவீன் வங்கியை கொள்ளையடிக்க கிளம்பிய வீரதீர கதையை ஹைதரபாத் போலீஸ் பா

அமெரிக்கா செல்வது கஷ்டம்!

படம்
இனி அமெரிக்கா செல்வது கஷ்டம்! – அமெரிக்காவில் H1B விசா விதிகளை அதிபர் ட்ரம்ப் மேலும் இறுக்கியுள்ளார். அமெரிக்காவின் திடீர் கெடுபிடியால் இந்தியர்களின் அயல்நாட்டு கல்வி மற்றும் வேலைக்கான ஸ்பாட்களாக கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகள் மாறியுள்ளன.   அமெரிக்கர்களின் வாக்குகளைப் பெற அமெரிக்க பொருட்களை வாங்குவோம், வேலைக்கு அமெரிக்கர்களை அமர்த்துவோம் என தேர்தல் பேரணிகளில் இனவெறுப்புடன் முழங்கி வருகிறார் அதிபர் ட்ரம்ப். “அகதிகளின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் ஒரேநாடு, அமெரிக்காதான்” என மெக்சிகோ எல்லையில் அமெரிக்காவில் நுழைய காத்திருக்கும் அகதிகளை எதிர்த்து ஆக்ரோஷமாக பேசியுள்ளார் ட்ரம்ப். அமெரிக்க சட்டத்தின் 14 பிரிவில் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை தரும் பிரிவை ட்ரம்ப் மாற்றுவதற்கு முயற்சிப்பாளர் என்ற அச்சம் தற்போது மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்துவதற்கு பல்வேறு கெடுபிடிகளை அமெரிக்கா விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.    

நோயாளிகளுக்கு இலவச உணவுதரும் முஸ்லீம்!

படம்
தெலங்கானா மகாத்மா!  தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலுள்ள தபிபுரா காந்தி அரசு பொதுமருத்துவமனை நோயாளிகளுக்கு தினசரி இலவச உணவு வழங்கிவருகிறார் அசார் மக்சூஸி. சிறுவயதில் குடும்பத்தை காப்பாற்றி வந்த தந்தை இறந்துபோக, பசியும் பட்டினியுமாக கிடந்த வாழ்க்கை அசாருக்கு பிறரின் பசி, தாகம் போக்க தூண்டியுள்ளது ஆச்சர்யமான கதை. “குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்கு செல்லும்போது பெரும்பாலான இரவுகளில் வெறும் வயிற்றுடன்தான் தூங்குவேன்” என இறந்தகாலத்தை கண்ணீர்மல்க பேசுபவர், சாலையில் உணவுக்கு கையேந்திய ஆதரவற்ற பெண்ணுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்த தினத்திலிருந்து வாழ்க்கை மாறியிருக்கிறது. தபிபுராவில் முதல் மூன்றாண்டுகள் சொந்தப்பணத்தில் ஏழைகளுக்கு உணவு வாங்கிக்கொடுத்தவர், ஏழாண்டுகளாக இச்சேவையை் தொடர பல்வேறு நல் இதயங்களிடமிருந்து வந்த நன்கொடைகள் உதவியுள்ளன. “பெங்களூரு, ராய்ச்சூர், தந்தூர், ஜார்க்கண்ட், அசாம் ஆகிய இடங்களிலும் ஆயிரத்து இருநூறு பேர்களுக்கு இலவச உணவை அளிக்க முயற்சித்து வருகிறேன். ஏழைகளின் கண்களில் பசி நெருப்பு தீர்ந்து அமைதி படருவதை காண்பதே இறைவனைக் கண்ட திருப்தி” என நெகி

குழந்தைகளை கொல்லும் அதிகாரப்போர்!

படம்
பசியால் இறக்கும் குழந்தைகள்! ஏமனின் ஹஜ்ஜா நகரில் குழந்தைகள் எலும்பும் தோலுமாக பெற்றோர்களின் கண்முன்னே பசியால் துடித்து இறந்து வருகின்றனர். காரணம், சவுதி அரேபியாவின் இரக்கமற்ற போர்வெறிதான். உள்நாட்டு சந்தையில் உள்ள காய்கறிகளை, ரொட்டிகூட வாங்கமுடியாத வறுமையில் ஏமன் நாட்டினர் தவித்து வருகின்றனர். அலி அல் ஹஜாலியின் கண்முன்னே அவரது மூன்றுவயதுமகன் இறந்ததும் அப்படித்தான். ஹூதி புரட்சியாளர்கள் வடக்கு ஏமனைக் கட்டுபாட்டில் வைத்துள்ளனர்.  அவர்களை எதிர்த்து நடக்கும் போரில் வீசப்படும் ஏவுகணையால் பலநூறு மக்கள் பலியாகிவருகின்றனர். உணவுக்கு அரசை நம்பியுள்ள எட்டு மில்லியன் ஏமன் நாட்டு மக்களின் எண்ணிக்கை விரைவில் 14 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 4 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர். 2 மில்லியன் டாலர்களை ஏமன் மத்திய வங்கிக்கு அரபு அமீரகத்துடன் இணைந்து அளித்துள்ளதாக சவுதி கூறினாலும் சன்னி- ஷியா இனவெறுப்புக்கு ஏதுமறியாத மக்கள் பலியாகவேண்டுமா என்ற கேள்விக்கு சவுதி அரேபியா என்ன பதில் சொல்லப்போகிறத

இந்திய ராணுவத்தை திட்டமிட்டு கொல்லும் ஸ்நைப்பர் டீம்!

பாதுகாப்பு படைகளுக்கு புதிய எதிரி!  காஷ்மீரிலுள்ள இந்தியப்படைகளை ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி பெற்ற ஸ்நைப்பர்கள் தீவிரமாக பலிவாங்க தொடங்கியுள்ளனர். கடந்த செப்டம்பரில் மூன்று இந்திய வீரர்கள் பலியாக ஸ்நைப்பர்களின் துல்லிய தாக்குதல்களே காரணம் என ராணுவம் கூறியுள்ளது. புல்வாமாவிலுள்ள நேவா, ட்ரால், நவ்காம் ஆகிய இடங்களில் ஊடுருவியுள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கு காஷ்மீரில் தீவிரவாத ஆதரவாளர்கள் உதவியுள்ளனர் என்கிறது உளவுத்துறை அறிக்கை. டெலஸ்கோப் வசதிகொண்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பாக்.தீவிரவாதிகள் தாக்குதல்களுக்கு பயன்படுத்தியுள்ளனர்.  ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய இத்துப்பாக்கி ரகத்தில் 600 மீட்டர் தூரத்தில் ஒரு நிமிடத்திற்கு 700-950 ரவுண்டுகள் சுடலாம். எம்4 கார்பைனை பாகிஸ்தானின் சிறப்பு ராணுவப்படை பயன்படுத்தி வருகிறது. இந்திய வீரர்களின் புல்லட் ப்ரூப் உடைகளை துளைக்கும் சக்தி கொண்ட தோட்டாக்களை தீவிரவாதிகளுக்கு சீனா வழங்குகிறது என சந்தேகமும் இந்தியாவுக்கு எழுந்துள்ளது. ஐ.நா சபையில் ஜெய்ஷ் –இ- முகமது இயக்கத்தையும் தடை செய்து அதன் தலைவரான மௌலானா மசூத

விலங்குகளை வேட்டையாட சீனா பச்சைக்கொடி!

படம்
மருத்துவத்திற்கு தடை நீக்கம்! – மருத்துவத்தில் காண்டாமிருகம் மற்றும் புலிகளின் கொம்புகள், எலும்புகளை பயன்படுத்த விதித்திருந்த தடையை சீன அரசு அண்மையில் விலக்கிக்கொண்டுள்ளது. “25 ஆண்டுகளாக எலும்புகள் மற்றும் கொம்புகளை மருத்துவத்திற்கு பயன்படுத்த இருந்த தடை விலக்கிகொள்ளப்படுகிறது. இப்பொருட்களை பயன்படுத்தும்போது அரசிடம் அனுமதி பெறுவது அவசியம்” என சீன அரசின் கேபினட் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதற்கு சூழலியல் ஆர்வலர்களிடையே கடுமையான கண்டனங்கள் கிளம்பியுள்ளன. கடந்தாண்டு உள்நாட்டில் தந்தங்களுக்கான சந்தையை சீன அரசு ரத்து செய்வதாக அறிவித்து விலங்கு நேசர்களிடையே எக்கச்சக்க பாராட்டுக்களை பெற்றது. ஆனால் சீன அரசின் தற்போதைய தடம் மாறிய அறிவிப்பு பாதுகாக்கப்படும் காண்டாமிருகங்கள், புலிகளை அழித்துவிடும் என அச்சம் சூழலியல் வட்டாரங்களில் பரவிவருகிறது. “சீனா 25 ஆண்டுகளாக விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்டது உலகளவிலான சூழலியல் பிரச்னையாக விரைவில் மாறும்” என எச்சரிக்கிறார் உலக கானுயிர் அமைப்பைச்(WWF) சேர்ந்த மார்க்கரேட் கின்னார்ட்.

புது சிபிஐ பாஸ் எப்படி?

படம்
புது சிபிஐ பாஸ் இவர்தான்!  சிபிஐயின் இயக்குநர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவருக்கும் இடையே மோதல் வெடிக்க இடைக்கால தலைவராகியிருக்கிறார் ஆர்எஸ்எஸ்சுக்கு நெருக்கமான ஐபிஎஸ் அதிகாரி எம். நாகேஸ்வர ராவ். இந்தியா பவுண்டேஷன் நிறுவனரும், பாஜக தலைவருமான ராம் மாதவுடன் நெருக்கமான நட்பை தொடரும் நாகேஸ்வர ராவ், இந்து கோவில்களை மாநில ஆதிக்கத்திலிருந்து மீட்கும் போராளி. மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு எதிரான தடை நடவடிக்கைகளை ஆதரித்தவர் விவேகானந்தா இன்டர்நேஷனல் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் நிகழ்வுகளில் முக்கிய விருந்தினர்.   தெலங்கானாவின் வாராங்கலில் பிறந்தவர் நாகேஸ்வர ராவ். ஹைதரபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டம் பெற்று, மெட்ராஸ் ஐஐடியில் ஆய்வு படிப்பில் இணைந்தார். ஐபிஎஸ்(1986) தேர்வாகி 2016 ஆம் ஆண்டு சிபிஐயில் கூடுதல் இயக்குநராக பணிக்கு புரிந்தவர். ஒடிஷாவில் ரயில்வே போலீசில் கூடுதல் தலைவராக பணிபுரிந்த நாகேஸ்வர ராவ், மாநிலத்தில் முதல்முறையாக டிஎன்ஏ ஆதாரங்களின் மூலம் கொலை வழக்கை துப்பு துலக்கி புகழ்பெற்ற சாதனையாளர்.