அமெரிக்க நிதியுதவி!






Image result for pakistan


பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடையாது! 

பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு நிதியாக அளிக்க திட்டமிட்ட 1.66 பில்லியன் டாலர்களை அளிக்க முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

“பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை பேச்சில் மட்டுமே காட்டுகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை அளிக்காததால் அமெரிக்கா, பாக்.கிற்கு அளிக்க ஒதுக்கிய நிதியை ஒதுக்கி வைத்துள்ளது” என்கிறார் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த கலோனல் ராப் மேனிங்.
2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அடைக்கலமாயிருந்த ஒசாமா பின்லேடனை பாக். அரசுக்கு தகவல் கூறாமலேயே நாட்டில் நுழைந்த அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது. பல்வேறு பயங்கரவாதிகளுக்கு அடைக்கல தேசமாக உள்ள பாகிஸ்தான், இந்தியாவையும் அச்சுறுத்திவருகிறது உலகறிந்த செய்தி.  

“பாகிஸ்தானின் உள்நாட்டு அரசுக்கு,  மத அடிப்படைவாத இயக்கங்களால் ஆபத்து வரும்போது தடுக்க துடிப்பவர்கள், லஷ்கர் இ தொய்பா, தாலிபன் தீவிரவாதிகளை ஒடுக்க ஏன் யோசிக்கிறார்கள்?” என்கிறார் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலைச் சேர்ந்த டேவிட் செட்னி. பாக்.அரசு அமைதிக்கு இசைந்தால் இந்தியா- பாக் அமைதி பொருளாதார பயன்களை தரும் என்பதோடு ஆப்கானிஸ்தானும் தீவிரவாதத்தின் பிடியிலிருந்து விடுபடும் என்பது அமெரிக்காவின் கணக்கு.   



பிரபலமான இடுகைகள்