மதங்களுக்கு விழிப்புணர்வு நோக்கம் கிடையாது!









முத்தாரம் Mini

வாழ்கைக்கு அர்த்தம் தருவதே பல்வேறு மதங்களில் நாம் வாசிக்கும் கதைகள்தான் என்கிறீர்கள். ஆனால் இவை வரலாற்று உண்மைகளையே மறுக்குமளவு அதிகரித்துள்ளதே?

நாம் வாழ்வதற்காக கதைகளை கூறுகிறோம் என்பார் ஜோன் டிடியன். உலகில் நமது இடத்தைப் பற்றி இக்கதைகளே உணர்த்துகின்றன. மதம், அரசியல் வேறுவேறு என பிரித்து வரலாற்று உண்மைகளை சொல்லும் கதைகளை நாம் புரிந்துகொண்டது 18 ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான். தேவாலயங்கள் வரலாற்று புறக்கணித்து கூறிய கதைகள் அதிகாரத்திற்கு மக்கள் பணிந்திருக்கவேண்டும் என்ற லட்சியத்தை மையமாக கொண்டவை. மக்களுக்கு அறிவு புகட்டும் நோக்கம் அவற்றுக்கு கிடையாது.












மதம் குறித்த பல்வேறு அடுக்குகளான கதைகளை எப்படி பார்க்கிறீர்கள்.

இந்தியாவின் பல்வேறு மதங்களை ஐரோப்பியர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பது இதன் காரணமாகத்தான். அசோகர், அக்பர், அம்பேத்கர் என இந்திய மனிதர்களின் வாழ்வில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறுமதங்கள் இருந்தாலும் மக்கள் பிரிந்துசெல்லாமல் ஒன்றாக வாழும் ஜனநாயக நாடாக இந்தியா எனக்கு பெரும் ஆச்சரியம் தருகிறது.

-நீல் மாக்கிரிகோர், ஆங்கில எழுத்தாளர்.