பாலஸ்தீனத்தின் நம்பிக்கை இரட்டையர்கள்!







நம்பிக்கை தரும் இரட்டையர்!

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் 70% வேலையில்லா பட்டதாரிகளில்(1.9 மில்லியன் பேர்) ஒருவர் பாஸ்மா அலி. உணவுப்பொருள் கிடைக்காமல் தடுமாறி வரும் மக்களில் 49% பேர் சரியான வருமானம் இன்றி தடுமாறிவருகின்றனர். 2012 பாஸ்மா அலி, ராஸா என இரு பெண்களும் இணைந்து தொடங்கிய சிகேட்வே ஸ்டார்ட்அப், இன்று பல நூறு காஸாவாசிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. உலகவங்கியிடம் 3 மில்லியன் நிதியை பெற்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சியளித்துவருகிறார்கள்.
“இளைஞர்களின் கனவுகள் நிறைவேறாமல் போவது அவர்களை தீவிரவாதத்திற்கு அழைத்துச்செல்லும் அபாயத்தை உருவாக்கும்” என்கிறார் பாஸ்மா அலி. தற்போது பாஸ்மா அலி மற்றும் ராஸா உள்ளிட்ட தோழிகளின் சமூக அக்கறையால் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.