தள்ளாடும் ஒபாமாகேர்! - ட்ரம்ப் அதிரடி


















டெக்சாஸைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஒபாமா கேர் காப்பீட்டு திட்டத்தை சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பளித்து தலைப்புச்செய்தியில் இடம்பிடித்துள்ளார். ரீட் ஓ கானர் அந்த காப்பீட்டுத்திட்டத்தை அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளார். காப்பீட்டுத்திட்டத்தில் இணைய வேண்டும் அல்லது வரி கட்டவேண்டும் என்பது ஒபாமா கேரின் சாராம்ச திட்டம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியரசு கட்சி ஆளுநர்கள், உறுப்பினர்கள் தற்போது அதனை சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி முடக்கியுள்ளனர்.

பதினேழு மில்லியன் மக்களின் உடல்நலனை உறுதிசெய்த ஒபாமாகேர் திட்டம் இனி கிடையாது. ஏறத்தாழ 2017 ஆம் ஆண்டு குடியரசு கட்சி தலைவர்களே ஆதரித்த சட்டம்தான் இது. ஒபாமா கேர் சட்டமானபோது மக்களிடம் அதற்கிருந்த ஆதரவு இன்று 53 சதவிகிதமாக ஆதரித்துள்ளது. தற்போது இதற்கான விளம்பரம், செயல்பாடு ஆகியவற்றை முடக்குவதற்கான முயற்சிகளை அதிபர் ட்ரம்ப் செனட் சபை உறுப்பினர்கள் மூலம் வெற்றிகரமாக தொடங்கிவிட்டார்.

"பல்லாயிரம் அமெரிக்க குடும்பங்களை வருத்திய ஒபாமாகேர் அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்றம் கூறியது வரவேற்கத்தக்கது" என ட்விட்டரில் மகிழ்ந்திருக்கிறார் அதிபர் ட்ரம்ப். அமெரிக்கர்களின் ஆரோக்கிய திட்டத்தில் சமரசமில்லை. நாங்கள் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராடுவோம் என்று கூறியிருக்கிறார் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் எக்ஸேவியர் பெசிரா.







பிரபலமான இடுகைகள்