ப்ரெய்லி போன்!









ப்ரெய்லி போன்!

துபாய் கிராட் ஷோவில் அறிமுகமான ப்ரெய்லி போன் அனைவரையும் கவர்ந்துள்ளது. தனது தாத்தா பார்வையிழப்பால் பொருட்களை கையாள தடுமாற, அவரது பேரன் ஆயுஷ்மான் தல்வார் அதற்கென ப்ரெய்லி போனை உருவாக்கியுள்ளார். போனின் கேஸ் போல உள்ள இதில் பின்புறம் பிரெய்லி எழுத்துக்கள் இருக்கும். “இந்தியாவில் 40 பேர்களிடமும், நெதர்லாந்தில் நூறுபேரிடமும் சோதித்துள்ளோம்” என புன்னகை பூக்கிறார் தல்வார். இந்த டிசைன் திருவிழாவில் நாற்பது நாடுகளிலிருந்து பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளை தரும் கருவிகளின் ஐடியாக்களை 200 க்கும் மேலான மாணவர்கள் காட்சிபடுத்தியிருந்தனர்.





சுமை பிரச்னையில்லை!

அடுத்ததாக ரயிலில் சுமைகளை தூக்கும் போர்ட்டர்களின் முதுகெலும்பு பாதிக்கப்படுவதை தடுக்க ரிஷப் சிங் என்ற மாணவர் சகாயக் கருவியை உருவாக்கியிருந்தார். இக்கருவி சுமையை தலை, மூளைக்கு சமமாக பிரித்துதருகிறது.




பிரபலமான இடுகைகள்