ஜஸ்டிஸ் லீக் குழுவின் போர்: என்னவானது நிலைமை?



Image result for justice league war animation



ஜஸ்டிஸ் லீக் வார்(2014)

டிசி காமிக்ஸ் மார்வெல்லுக்கு சளைத்ததல்ல. என்ன அடிக்கடி சற்றே கண் அயர்ந்து விடுகிறார்கள். அதற்குள் மார்வெல் எக்கச்சக்க சீரிஸ்களை வெளியிட்டு விடுகிறது. இந்த சீரிஸ் அப்படி அல்ல; வேற்று கிரகத்திலிருந்து வரும் ஏலியன்களை புரட்டி எடுக்கும் பகுதி. 

ஜாக் ஸ்னைடர் எடுத்த ஜஸ்டிஸ் லீக் படத்தை இந்த அனிமேஷன் பார்த்த வேகத்தோடு பார்த்தீர்கள் என்றால் , பொங்கல் தின்று லியோ காபி குடித்த கதைதான். தூக்கம் கண்ணைக் கட்டும். நல்ல தூக்கம் வாய்ப்பது பெரிய விஷயம் அல்லவா? 

அனிமேஷனில் அனைத்திலும் முன்னாடி நிற்பது பேட்மேன்தான். அனைவரையும் ஒருங்கிணைத்து, க்ரீன் லாந்தர்னின் குறும்புகளை, ஷாஷாமின் டீன் ஏஜ் துறுதுறுப்பை கட்டுப்படுத்தி என வேலைகள் அதிகம். இதில் மெட்டல் மனிதர் சைபோர்க் அபாரமாக அறிமுகமாகி கலக்குகிறார். அனிமேஷனைப் பார்த்துவிட்டு உடனடியாக ஜஸ்டிஸ் லீக் படத்தை பார்க்கச்சென்றால், விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. 

அனிமேஷன் படம் என்றாலும் படத்தில் ஃபிரேம்கள் நகரும் வேகமிருக்கிறதே அபாரம். நீங்கள் அதைப்பார்க்காமல் வொண்டர் உமனின் காலாடையை பார்த்தால் பேட்மேன் உங்களை மன்னிக்க மாட்டார். 

உலகமெங்கும் ஏலியன் உயிரிகளை உருவாக்கி பூமியை ஆக்கிரமிக்க நினைக்கிறார் வில்லன். விடுவார்களா? நீதிக்குழு. கும், மடார், கஜக், மஜக் என அடித்து, அடி உதைகளை வாங்கி ஏலியன் வில்லனாக மாற்றப்பட்ட சூப்பர்மேனுக்கு வைத்தியம் பார்த்து இந்த சீரிஸில் அத்தனை சூப்பர் ஹீரோக்களும் ஓவர் டைம் வேலை பார்த்திருக்கிறார்கள். 

க்ரீன் லாந்தர்ன்தான் காமெடி நாயகன். வரும் காட்சிகளில் எல்லாம் ஏதாவது ஒரு காமெடி செய்து காரியத்தை குலைத்து போடுவது இவரின் வேலை. ஃபிளாஷுக்கு கை கொடுத்துவிட்டு டக்கென இளவரசி டயானாவுக்கு(வொண்டர் வுமன்) நகர்வதும். அதை தடுக்க சூப்பர்மேன் வருவதும் ஆசம். 

இறுதியில் வில்லனால் கை நொறுக்கப்பட நொந்துபோய் புத்தூர் கட்டு கட்டாமல் சண்டைக்களத்திலேயே இருந்து சாதித்து அதிபர் கையால் அவார்டும் வாங்குகிறார். அதாவது அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நீதிக்குழுவும்தான். 

வொண்டர் வுமனுக்கும், ஸ்டீவுக்கும் உள்ள காதல், அவர் கட்டிடங்களை உடைத்துவிட்டதாக மக்களின் போராட்டம், சூப்பர்மேன் - பேட்மேன் சண்டை, ஒன்றாக சேர்ந்து darkseid யை தாக்கி வீழ்த்த போராடும் காட்சிகள் என அனிமேஷன் பிரியர்களுக்கு செம வேட்டை. எக்காரணம் கொண்டும் ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக்கை பார்த்துவிடாதீர்கள். அனிமேஷன் வேறு, திரைப்படம் வேறு. 

-கோமாளிமேடை டீம்