டிவி ஆதிக்கம் என்ன செய்யும்?
ஏன்?எதற்கு?எப்படி?
டிவி நம்மை எப்படி அடிமைப்படுத்துகிறது?
டிவியில் வரும் தொடர்கள் நம்மை அடிமைப்படுத்த உளவியல் முறையை கையாள்கின்றன. சாதாரணமாக ஒருவர் வெளியுலகை எதற்கு நாடுகிறார், பல்வேறு உறவுகளுடன் பேசுவதற்குத்தானே. டிவியின் தொடர்களில் ஏராளமான கேரக்டர்களை புகுத்தி நிஜ உலகை மறக்கவைப்பதுதான் டிவி சேனல்களின் வெற்றி. சோபாவில் அமர்ந்தாலே உலகின் அத்தனை குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் உங்களுடன் பேசினால் நிஜ உலகத்தின் தேவை என்ன? டிவி முன் கட்டுண்டு கிடந்தால் நிஜ உலகின் அத்தனை விஷயங்களும் உங்களின் கைவிட்டு போய்விடும்.