அகராதிகளை எப்படி தயாரிக்கிறார்கள்?







அகராதி –- பிட்ஸ்!

புழக்கத்திலுள்ள ஒரு வார்த்தையை பல்வேறு சான்றுகளை பார்த்து பின்னரே அகராதியில் தயாரிப்புக்குழு சேர்க்கும். லெக்சிகோகிராபர் அதனை மக்கள் எந்த காலத்தில் என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறார் என்ற நோக்கில் ஆராய்வர். பின் அகராதியின் முதன்மை ஆசிரியர் குறிப்பிட்ட வார்த்தையை சேர்ப்பதை தீர்மானிப்பார்.

16-17 ஆம் நூற்றாண்டுகளில் அகராதிகளில் எளிதான வார்த்தைகளை சலித்துதான் கண்டுபிடிக்கவேண்டும். அந்தளவு புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை அகராதிக்குழு பயன்படுத்தியிருக்கும். மொழியியலாளர் ராபர்ட் காவ்ட்ரே லத்தீன், ஹீப்ரு உள்ளிட்ட மொழிகளிலிருந்து எடுத்த வார்த்தைகளை தொகுத்து A Table Alphabeticall என்ற அகராதியாக 1604 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

அமெரிக்க உச்சரிப்புடன் வெப்ஸ்டர் அகராதியை 1828 ஆம் ஆண்டு உருவாக்கிய நோவா வெப்ஸ்டர், இதற்கான சமஸ்கிருதம் உள்ளிட்ட 26 மொழிகளை கற்றார். 1843 ஆம் ஆண்டு வெப்ஸ்டர் இறந்தபின், ஜார்ஜ்- சார்லஸ் மரியம் என்ற சகோதரர்கள் அகராதி பதிப்பிக்கும் உரிமையை வாங்கி மரியம் – வெப்ஸ்டர் அகராதியை உருவாக்கினர். 1884 ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி வெளியிடப்பட்டது.