சமர்த்து திருடர்!







சமர்த்து திருடர்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள ஹோட்டலில் மர்மக்குரல் கேட்கிறது என புகார். பாய்ந்து சென்ற போலீசார் சீன உணவகத்தின் புகைபோக்கியில் மாட்டி இருநாட்களாக உதவிகேட்டு தவித்த திருடரை குமட்டில் குத்தி மீட்டனர். “ஹோட்டலிலுள்ள செம்பு வயர்களை திருடி விற்க சென்று மாட்டியிருக்கலாம். சிகிச்சை முடிந்ததும் திருடரை தீர விசாரிப்போம்” என்கிறது அலமெடா நகர காவல்துறை.

ஓசி பயணம்!

வாஷிங்டன் டி.சியின் பென்னிங்டன் சாலையில் காரில் சென்ற ரஸ்தா தாஜ் அதிர்ந்துபோனார். மெட்ரோ பஸ்ஸின் பின்புறம் இளைஞர் ஒருவர் தொங்கியபடி அபாய சவாரி செய்துகொண்டிருந்தார். உடனே அதனை க்ளிக்கி இணையத்தில் பகிர்ந்தார். “இதுபோன்ற பயணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல; இளைஞர் உயிர்பிழைத்துள்ளது ஆச்சரியமான விஷயம்” என பஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ரிஸ்க் எடுத்த இளைஞர் இதுபோல ஏராளமான சர்க்கஸ் சாதனைகளை முன்பே செய்தவராம்.

சாப்பாட்டில் முத்து!

அமெரிக்காவின் நியூஜெர்சியில் ரிக் அன்டோஸ், உணவகத்தில் நண்பர் சகிதமாக சிப்பி உணவை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென வாயில் கடக் என சப்தமெழ, சாப்பாட்டில் கல்லா? என டவுட்டில் கல்லை எடுத்துப் பார்த்தவர் உடனே சந்தோஷமானார். கையில் இருந்தது சொக்க வெள்ளை நிற முத்து. “இதுபோல ஒரு சம்பவம் எங்கள் ஹோட்டல் வரலாற்றில் நடந்ததில்லை” என மேலாளர் சொல்ல ரூ. 2 லட்சத்து 85 ஆயிரத்து 280 மதிப்பிலான முத்து கிடைத்ததே பரவசத்தில் இருக்கிறார் ரிக் அன்டோஸ்.

சாக்லெட் சாலை!

ஜெர்மனியில் வெஸ்டொனன் பகுதியில் சாக்லெட் தொழிற்சாலையின் முன் பெரும் கூட்டம். தொழிற்சாலையிலிருந்து பெருகி வழிந்த சாக்லெட் சுனாமிதான் காரணம். ஏறத்தாழ 33 ச.அடியில் சாக்லெட் கேக் போல தேங்கி நின்றது. சாக்லெட் டேங்க் நிரம்பியதை கவனிக்காத தவறுதான் காரணம் என தொழிற்சாலை நிர்வாகம் தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளது.  

பிரபலமான இடுகைகள்