ராமச்சந்திர குஹா - அற்புத எழுத்தாளர்







21.3.16

இனிய தோழர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நீங்கள் கொடுத்த லெட்டர்ஹெட் பணி எனக்கு திருப்தியில்லை. திருப்பூர் நந்து இப்பணிகளில் ஜெகஜாலர்கள். ஆனால் என்னவோ என்னிடம் நீங்கள் இப்பணிகளை ஒப்படைக்கிறீர்கள். நான் படித்த படிப்பு மறந்து வெகுகாலமாகிறது. ஆங்கிலமா அல்லது தமிழா என தெளிவாக கூறி வடிவமையுங்கள். அதுவே சிறப்பு.

இந்திய வரலாறு காந்திக்கு பிறகு – ராமச்சந்திர குஹா படித்தேன். நேர்த்தியான மொழிபெயர்ப்பில் நேரு குறித்த விஷயங்கள் அருமை. அவரது செயல்பாடுகளை சார்பு நோக்கமற்று எடை போட்டு பார்த்து எழுதியிருக்கிறார் குஹா. ராம் அத்வானி என்ற நூல் கடைக்காரரை பற்றி அறிந்திருக்கிறீர்களா? காந்தி ஆசிரமத்தில் புத்தக கடை நடத்தியவராம். ஏதாவது பதிவு செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.

டெக்கனில் ஆர்எஸ்எஸ் பேன்ட் மாற்றியதை பற்றி கட்டுரை வெளிவந்துள்ளது. உடை மாறினாலும் குணம் மாறாது என கூறியது அக்மார்க் வரி.  டாக்டர் ஹெட்கேவர் தொடங்கிய இந்து அமைப்பு எப்படி காந்தி, நேரு மீதான வெறுப்பை உமிழ்ந்து 90 ஆண்டுகளாக தொடர்கிறது என்பதை குமார் கேட்கர் எழுதிய கட்டுரை விளக்கியது.
நன்றி!

பிரபலமான இடுகைகள்