மதுரக்குரல் கேளாயோ? - கடித கருவூலம்











தாராபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் அவர்களுக்காக எழுதிய கடிதம் இது. சில கடிதங்கள் காணோம். மழையில் நனைந்து வெயிலில் காய்ந்தாலும் மன உணர்வுகளை வெளிப்படுத்த தவறவில்லை. இதோ உங்களுக்காக!




9.1.2013

பிரிய முருகுவிற்கு, வணக்கம்.

எதிர்வெளியீட்டகம் வெளியிட்ட நூல்களின் பட்டியல் சந்தோஷம் தந்தது. விலை சற்று அதிகமாக இருக்குமோ? ஷண்முக சுந்தரத்தின் ‘சட்டி சுட்டது’ என்ற நாவலைப்படித்தேன். கொங்கு மொழி வழக்குகள் கொண்ட சுவாரசியமான நூல். சாமிநாதக்கவுண்டர் தன் மகன்கள் மாரப்பன், பழனியப்பன் நடவடிக்கைகளால் தன் மகளுடன் தனியாக வாழத்தொடங்குவது முதல் பகுதி. இறுதியில் மகளுக்கு திருமணம் உறுதியாவதோடு நாவல் நிறைகிறது. பேச்சுவழக்கு, உரைநடை தடுமாற்றங்கள் வாசிக்கும்போது பெரிய பிரச்னையாக தெரியவில்லை.

‘அப்பாவின ்காதலி’ பாறப்புரத்து எழுதிய நூலை படித்தேன். 9 அத்தியாயங்கள்தான் நாவல். மணிக்குட்டனின் தந்தை கோணக்குறுப்பு நாயர் பற்றிய நினைவுகள்தான் கதை. தந்தையின் தொடர்பிலிருந்து கவுரியம்மாளை கடைவீதியில் பார்த்து பேசுவது தொடங்கி கதை விரிகிறது. உங்களுடன்தான் இப்படி கதைகளை பற்றி பேசமுடிகிறது. சந்தா கட்டிய சண்டே இந்தியன் இன்னும் கைவந்து சேரவில்லை. காலச்சுவடு வந்து விட்டது; புத்தாண்டு சிறப்பிதழாக. காலச்சுவடில் வெளியான சல்மாவின் ‘இருள்’, ஆப்பிரிக்க எழுத்தாளர்களின் தனிமைச்சிறை ஆகிய கதைகள் நிறைய விஷயங்களை மனதுடன் பேசுகிறது.

நன்றி! சந்திப்போம்.



பிரபலமான இடுகைகள்