இடுகைகள்

ஆதிதிராவிடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதிதிராவிடர்களுக்கு நிதி செலவிடாத அமைச்சர்கள்!

படம்
கருப்பு இந்தியா! பிக்சாபே ஆண்டுதோறும் ஆதிதிராவிடர்களுக்கு இரண்டு முதல் இருபது சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு உண்டு. ஆனால் இதனை மக்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன இந்திய அரசிலுள்ள 41 அமைச்சகங்களில் கிராம மேம்பாட்டுத்துறை மட்டுமே இதில் பாஸ் மார்க் வாங்கியுள்ளது. அமைச்சகங்கள் ஆதிதிராவிடர்களுக்கென அளிக்கப்பட்ட நிதியை பொது திட்டங்களுக்கு செலவழிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. 50-60 சதவீத அமைச்சகங்கள் இம்முறையில்தான் செயற்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர்களுக்கும் பட்டியலினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை சமக்ரா சிக்ஷா எனும் உணவுத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்தியுள்ளன. கேள்விகளை எழுப்பினால் உடனே இந்த நிதி திட்டமிட்டு எஸ்சி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டுமென அரசு வலியுறுத்தவில்லை. எனவே நிதி குறைவாக உள்ள திட்டங்களுக்கு இந்த நிதியை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்கின்றனர். இதே காரணத்தை பிற சாதிகளுக்கு அரசு அதிகாரிகள் செய்வார்களா? கேள்வி எழுப்பியபின்னும் திமிரோடு இப்படி பேச முடியுமா? என நாமே நினைத்து மனதில் சொல்லிப் பார்க்கவேண்டும். 2019 -2020 க