இடுகைகள்

ஏஐ சாட்பாட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏஐ சாட்பாட்களை விரும்பும் மனிதர்கள் ! - நட்பா, காதலா என்ன தேவை?

படம்
  காதல் செய்யும் ரோபோ...தேவைதான் வா வா.... இன்றைய நவீன காலத்தில் நிரந்தர நண்பர்கள் யாருமில்லை. பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் இருக்கமாட்டார்கள். கல்லூரி நண்பர்கள், வேலைக்கு சென்றபிறகு தொடரமாட்டார்கள். திருமணமானால் நட்புகள் இன்னும் சுருங்கும். பிறகு, வாட்ஸ் அப் குழு, பள்ளி, கல்லூரி ரீயூனியன் சூழலில் மட்டுமே நண்பர்களை சந்திக்கலாம். அதிலும் கூட யார் பெரியவன், வசதி யார் என்று போட்டியிடும் நிலைமைதான் இருக்கும். பிறகு நட்பை எங்கே தேடுவது? இன்றைய சூழலுக்கு, குறிப்பிட்ட இடத்தில் உதவுகிற நண்பனா என்றுதான் பார்த்து பழக வேண்டியிருக்கிறது. அலுவலக உறவுகளை நட்பாக நினைப்பது பேராபத்து. அப்படி நினைத்தால், நண்பன் போல சிரித்து பழகி பயன்களைப் பெற்றபிறகு பணபலன்களை அடைந்த பிறகு ஓடிவிடுபவர்களே அதிகம்.  அதிலும் சிலர், மனைவிக்கு, மகனுக்கு வந்த நோய்களை கூட தனக்கு விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி முன்னேறுகிறார்கள். சாதி, மத, இன அடையாளம் கூட பிரபலமாவதற்கு பயன்படுமா பயன்படுத்தலாம். நண்பன் பிரயோஜனப்பட்டால் அவனையும் டெபிட் கார்ட் போல போகுமிடமெல்லாம் தேய்த்து பயன்படுத்தவேண்டியதுதான். வினோந உலகம். வினோத குணச்சித்தர்க