இடுகைகள்

ஸ்டாலின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி நிறைவு - ஆஹா, அடச்சே விஷயங்கள் இதுதான்!

படம்
  மு.க. ஸ்டாலின் - ஓராண்டு ஆட்சி - எப்படி ஆஹா 68, 375 கோடி ரூபாய் முதலீட்டைப் பெறுவதற்காக 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து படிப்பதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு உறுதியாகியுள்ளது.  2500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை அரசு மீட்டுள்ளது.  பெண்களுக்கு இலவச பயணப் பேருந்து  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், செயல்பாடு பால் விலையைக் குறைத்தது அடச்சே!  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.  மாநில அரசின் பல்வேறு தீர்மானங்கள் அனுமதியளிக்கப்படாமல் ராஜ் பவனில் நிலுவையில் உள்ளது.  சொத்து வரி உயர்வு அரசு செயல்பாட்டில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் ஈடுபடுவது... மின்வெட்டு அதிகரித்து வருவது.. திமுக அரசு பத்தாண்டுகள் தமிழகத்தை ஆள வேண்டும் என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து உழைத்து வருகிறது. முக ஸ்டாலின், முதல்முறையாக முதல்வர் அரியணை ஏறியிருக்கிறார். இதற்காக அவர் தொடக்கத்தில் இருந்து கடுமையாக உழைத்தாலும் அவரின் தந்தை கருணாநிதியின் ஒளிக்கு கீழே இருந்ததால் நிழலில் ஸ்டாலினின்

உக்ரேன் பற்றி முழுமையாக அறிய உதவும் நூல்களின் வரிசை!

படம்
  உக்ரைன் பற்றித்தான் பேச்சு. பலரும் பெருந்தொற்று காலத்தில் போனை எப்படி நோண்டிக்கொண்டே பதற்றத்துடன் இருந்தார்களோ இப்போதும் அதேயளவு பழக்கம் அதிகரித்து வருகிறது என ஊடகங்கள் சர்வே எடுத்து சொல்லி வருகின்றன. போர் காட்சிகள், அழுகை, மரண ஓலம் என அனைத்தும் உடனுக்குடன் காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஷ்ய இலக்கியத்தை நிறையப் பேர் படித்திருப்பார்கள். அதன் வழியாக ரஷ்ய நிலப்பரப்பு பற்றி அறிந்தவர்கள் பலர். ஆனால் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, தனியாக சுதந்திர நாடுகளான பல நாடுகளைப் பற்றி நமக்கு தெரிந்தது குறைவு. இப்போது நாம் பார்க்கப்போகும் நூல்கள் உக்ரைன் பற்றியதுதான்.  தி கேட்ஸ் ஆப் யூரோப் எ ஹிஸ்டரி ஆப் உக்ரைன் செர்கி புளோகி ஹார்வர்ட் உக்ரேனியன் ஆராய்ச்சி கழக தலைவர் புளோகி. இவர் உக்ரைன் நாடு சுதந்திர நாடாகவும் தனி அடையாளத்திற்காகவும் கி.மு.45,000 ஆண்டுகளாக முயன்று வந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். இந்த ஆதாரங்களும் சம்பவங்களும் கடந்தகாலத்தை நினைவுபடுத்துவதோடு நிகழ்காலத்தைப் பற்றியும் யோசிக்க வைக்கிறது.  கிரே பீஸ்  ஆண்ட்ரேய் குர்க

சிங்காரச்சென்னைத் திட்டம் 2.0 - சந்தோஷம் கிடைக்குமா?

படம்
                சிங்காரச்சென்னை வேண்டுமா ? சந்தோஷச் சென்னை வேண்டுமா ? சென்னை மாநகரம் தனது 382 ஆம் ஆண்டு பிறந்த தினத்தைத் கொண்டாடுகிறது . இதை இங்கு வாழும் பலரும் நம்புவதற்கு கடினமாகவே இருக்கிறது . நூற்றாண்டுகளுக்கு முரர் கிழக்கிந்திய கம்பெனி , மெட்ராஸ் எனு்ம் இந்த துண்டு நிலப்பகுதியை வணிகத்திற்காக வாங்கியது . அதில்தான் இன்று கலை , கலாசாரம் , வணிகம் என அனைத்தும் வளர்ந்துள்ளது . நவீன காலத்தில் சென்னையை மேம்படுத்த பலரும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் . பெரும்பாலும் திமுக அரசு என்று உறுதியாக சொல்லலாம் . இந்த கட்சிக்கு சென்னை என்பது தொப்புள்கொடி உறவு என்று கூறலாம் . முன்னர் ராபின்சன் பூங்கா இப்போது அறிஞர் அண்ணா பூங்காவில்தான் சி . என் . அண்ணாதுரை திமுகவைத் தொடங்கினார் . கட்சி பெயரை குடந்தை நீலமேகம் அறிவித்தார் . 1949 ஆம்ஆண்டு செப்டம்பர் 17 அன்று கட்சி தொடங்கப்பட்டது . சென்னையை அழகுபடுத்தும் திட்டமாக சிங்காரச்சென்னை என்பது 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது தொடங்கப்பட்டது . இப்போது ஆட்சித்தலைவராக உள்ள ஸ்டாலின் தனது பழைய திட்டத்திற்கு

திமுக மூன்று மாதங்களில் சாதித்த வாக்குறுதிகள், சரிந்துபோன செயல்பாடுகள்!

படம்
  திமுக ஆட்சிக்கு வருவது உறுதியானவுடன் முதல்வரான ஸ்டாலின் கோவிட் பணிகளை மேம்படுத்தும் வேலைகளை தொடங்கிவிட்டார். ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வந்த ஒதுக்கி வைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை புதிய பொறுப்புகளுக்கு நியமிப்பது தொடங்கி பொருளாதார கௌன்சில் வரையில் நிறைய பணிகளை திமுக அரசு செய்துள்ளது.  சாதித்தது எதில், சரிந்தது எதில் என்று பார்ப்போம்.  நீட் தேர்வுக்கு எதிரான  போராட்டத்தில் பெரிய முன்னேற்றமில்லை. குடியரசுத்தலைவருக்கு இதுபற்றி கவனத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சிகள் பலிக்கவில்லை.  குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேறவில்லை.  அரசின் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினார்கள். இன்றுவரை நிறைவேற்றவில்லை.  சிறு, நடுத்தர விவசாயிகளின் விவசாயக்கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவிலை.  உயர்கல்வி பயில மாணவர்கள் வாங்கிய கடனும் தள்ளுபடி ஆகவில்லை.  மாதம்தோறும் மின்சாரத்தை அளவிடும் பணி தொடங்கப்படவில்லை.  சமூக பாதுகாப்பு நிதியாக முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற

தலைவராக அதிகரிக்கும் வரவேற்பு! - ஸ்டாலினோடு துணை நிற்கலாமா?

படம்
                      அதிமுகவும் , திமுகவும் ஜெயலலிதா , 2016 ஆம் ஆண்டு மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்றார் . இதன்மூலம் 32 ஆண்டுகளாக இருந்த சாதனையை தகர்த்தார் . ஒரே கட்சி இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியதுதான் அது . எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கி தோல்வியை சந்திக்காத முதல்வராக இருந்தார் . அவர் 1987 இல் இறந்துபோனார் . அதற்குப்பிறகுதான் 1989 இல் திமுக வெற்றி பெறமுடிந்தது . 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது . ஆனாலும் கூட தமிழக முதல் அமைச்சராக வாய்ப்பளிக்கும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவின் தலைவரான ஸ்டாலினுக்கு அக்னி பரிட்சைதான் . கட்சிக்காக கலைஞர் காலத்திலிருந்து களப்பணி ஆற்றிவரும் அவருக்கு முதல்வர் பதவி கிடைப்பது என்பது உழைப்பிற்கான பரிசாக அமையக்கூடும் . தற்போதைய முதல்வரான பழனிசாமியைப் பொறுத்தவரை முதல்வர் பதவி என்பது அதிர்ஷ்டவசமாக கிடைத்தது . ஆனால் கட்சி எம்எல்ஏக்களை கட்டிக்காப்பாற்றியதில் அவரது சாமர்த்தியம் உள்ளது . தவிக்கும் மதவாத சக்திகள் பாஜக கட்சி உள்ளே நுழைய முடியாமல் தவிக்கும் மாநிலங்களில் தமிழ்நா