தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி நிறைவு - ஆஹா, அடச்சே விஷயங்கள் இதுதான்!

 

மு.க. ஸ்டாலின் - ஓராண்டு ஆட்சி - எப்படி
ஆஹா


68, 375 கோடி ரூபாய் முதலீட்டைப் பெறுவதற்காக 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.


பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து படிப்பதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு உறுதியாகியுள்ளது. 


2500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை அரசு மீட்டுள்ளது. 


பெண்களுக்கு இலவச பயணப் பேருந்து  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 


நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், செயல்பாடு


பால் விலையைக் குறைத்தது


அடச்சே! பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 

மாநில அரசின் பல்வேறு தீர்மானங்கள் அனுமதியளிக்கப்படாமல் ராஜ் பவனில் நிலுவையில் உள்ளது. 

சொத்து வரி உயர்வு

அரசு செயல்பாட்டில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் ஈடுபடுவது...

மின்வெட்டு அதிகரித்து வருவது..


திமுக அரசு பத்தாண்டுகள் தமிழகத்தை ஆள வேண்டும் என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து உழைத்து வருகிறது. முக ஸ்டாலின், முதல்முறையாக முதல்வர் அரியணை ஏறியிருக்கிறார். இதற்காக அவர் தொடக்கத்தில் இருந்து கடுமையாக உழைத்தாலும் அவரின் தந்தை கருணாநிதியின் ஒளிக்கு கீழே இருந்ததால் நிழலில் ஸ்டாலினின் உழைப்பு யாருக்குமே தெரியவில்லை. 

காலியாக உள்ள கருவூலகத்தை வைத்து பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை சாதிக்க நினைப்பது அசாதாரணமான சூழல். இதற்கிடையில் எதிர்கட்சியாக வளர்ந்து வரும் பாஜக வையும் அவர் சமாளித்து வருகிறார். 

உங்களில் ஒருவன் என பல்வேறு அரசு அலுவலகங்களை திடீரென விசிட் செய்வது முதல்வரை மக்களிடையே புகழ்பெறச் செய்துள்ளது. கடந்த ஓராண்டில் சிறுகுறு தொழில், இலங்கை மக்களுக்கான நலன், வெள்ள பாதிப்பு, பொருளாதார நலன் என முப்பது கமிட்டிகளை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். 

இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48, நான் முதல்வன், முதல்வரின் முகவரி என நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. அதிமுக 60 எம்எல்ஏக்களை வைத்திருந்தாலும் அவர்கள் மீது வழக்கு போடப்படும் பயத்தில் அடக்கி வாசிக்கின்றனர். ஆனால் பாஜக தொடர்ச்சியாக திமுக தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்களின் முன் வைத்து செயல்பட்டு வருகிறது. 

லாக் அப் மரணங்கள் அதிகரிப்பு, பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் கூடுவது, மின்வெட்டு ஆகியவை திமுகவிற்கு பெரும் சவாலாக மாறி வருகின்றன. இந்துக்களுக்கு எதிரான கட்சி என தமிழக பாஜக திமுகவை கூறினாலும், திமுக அறநிலைத்துறை மூலம் அனைத்து சாதி அர்ச்சகர்களை கோவில்களுக்கு நியமிப்பது,  ஒரு முறை கூட பூஜை நடத்த முடியாத கோவில்களுக்கு நிதி என 170 கோடியை ஒதுக்கியுள்ளது. 


டைம்ஸ் ஆப் இந்தியா

ஜூலி மாரியப்பன்

வி மயில்வாகனன்


Money controlகருத்துகள்

பிரபலமான இடுகைகள்