மாமூத் யானைகளின் காலத்தில் பிரமிடு!

 












மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்திலிருந்தே வாழ்கின்றன!


உண்மை. 2019ஆம் ஆண்டு கரன்ட் பயாலஜி இதழில் வெளியான ஆய்வுத்தகவல், மூட்டைப்பூச்சிகள் டைனோசர் காலத்தில் வாழ்ந்துள்ளன என்பதை உறுதிபடுத்தியுள்ளது. மனிதர்களோடு பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் உயிரி இது. ”ஆய்வுத்தகவல்படி பார்த்தால், மூட்டைப்பூச்சி நாம் நினைத்ததை விட வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார் ஆய்வாளர் மைக் சிவ ஜோதி. 

வலது கைக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களால், இடதுகைக்காரர்கள் அதிகம் இறக்கின்றனர்!


உண்மை. உலகத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் வலதுகை பழக்கம் கொண்டவர்கள். இதனால், பெரும்பாலான கருவிகள் வலதுகைக் காரர்களுக்கு பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்படுகின்றன.  இதனை இடதுகை பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்த கடினமாக இருக்கும். கையாள்வதில்  நேரும் விபத்துகளில், ஆண்டுக்கு தோராயமாக 2,500 பேர் பலியாகின்றனர் என தி மிரர் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுவரை பூமியில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள இடிமின்னல்களின் எண்ணிக்கை 2000! 


உண்மையல்ல. சில வானிலை மையங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்திய இடிமின்னல்களை குறிப்பிட்ட வகையில் வரிசைப்படுத்தி இப்படிக் கூறலாம். ஆனால் இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது. அமெரிக்காவில் ஆண்டுக்கு தோராயமாக 1 லட்சம் இடி மின்னல்கள் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

பிரமிடுகள் கட்டப்படும்போது மாமூத் யானைகள் உயிருடன் இருந்தன!


ஐஸ் ஏஜ் காலத்தில் வாழ்ந்ததாக கருதும் மாமூத் யானைகள், மனிதர்கள் பூமியில் உருவாகும்  முன்பே அழிந்துவிட்டதாக பலரும் நினைக்கிறார்கள். கிசா பிரமிடு கட்டப்பட்ட காலம் கி.மு. 2560 - 2560. இக்காலத்தில் மாமூத் யானை ஒன்று, ரஷ்யாவுக்கு உரிமையான ரேங்கல் தீவில் வாழ்ந்து மறைந்ததாக பிபிசி  நிறுவனம் தகவல் கூறியுள்ளது. இந்த யானை மறைந்து  4  ஆயிரம் ஆண்டுகள்  இருக்கும் வரலாற்று அறிஞர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். 

காரில் 60 கி.மீ. வேகத்தில் செல்லும்போது தும்மல் வந்தால் அடுத்த 50 அடி தூரத்தை  கண்களால் பார்க்க முடியாது. 


உண்மை. 2014ஆம் ஆண்டில் ஹல்போர்ட்ஸ் ஆட்டோமையம் எடுத்த ஆய்வில் வெளியான தகவல் இது.  விடாப்பிடியாக தும்மல் வரும்போது, இயல்பாகவே கண்கள் சில நொடிகள் மூடும். இதுவே காரில் செல்லும்போது , அதுவும் 60 கி.மீ. வேகம் எனும்போது நினைத்துப்பாருங்கள். 50 அடி தூரத்திற்கு உங்கள் கண்களை மூடியிருந்து திறப்பீர்கள். அதற்குள் விபத்து எளிதாக நேர்ந்துவிடுமே? இந்த வகையில் இங்கிலாந்தில் இப்படி தும்மிக்கொண்டே வண்டி ஓட்டுபவர்களால் வாரத்திற்கு 2,500 விபத்துகள் ஏற்படுவதாக தி டெய்லி மெயில் நாளிதழ்  தெரிவித்துள்ளது. 

 தகவல்

https://www.yahoo.com/lifestyle/50-weird-facts-everything-181406932.html

ஜிஃபர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்