மனிதர்களும் இயற்கையில் ஒரு பகுதி என்பதை மறந்துவிடக்கூடாது

 

 

 

 

Republican Carbon Tax Bills Keep Getting Better | R Street

 

 

 

மார்க் கார்னே Mark carney


former central banker


மார்க் கார்னே என்றால் என்ன? இந்தப் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஏதோ பெரிய வங்கியை நடத்துகிற அல்லது தலைவராக இருக்க வாயப்புள்ள ஒருவரைத்தானே?


உண்மைதான். 2008ஆம் ஆண்டில் கனடாவின் பேங்க் ஆப் கனடா வங்கிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2011-2018 காலகட்டத்தில் குளோபல் ஃபினான்சியல் ஸ்டேபிளிட்டி போர்டின் தலைவராக செயல்பட்டார். 2013ஆம் ஆண்டு பேங்க் ஆப் இங்கிலாந்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1694ஆம் ஆண்டு தொடங்கி பிரிட்டிஷ்கார ர்களை மட்டுமே ஆளுநராக நியமித்த மரபை உடைத்தவர் மார்க் கார்னி தான். 2020ஆம் ஆண்டு தனது பதவியை விட்டு விலகியவர் கனடாவில் உள்ள ப்ரூக்ஃபீல்டு அசெஸ்மென்ட் என்ற தனியார் நிறுவனத்தில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். வால்யூஸ் - பில்டிங் எ பெட்டர் வேர்ல்ட் ஃபார் ஆல் என்ற நூலை எழுதியுள்ளார்.




 

 நீங்கள் எழுதியுள்ள நூலுக்கான அர்த்தம் என்ன?

நான் பேங்க் ஆஃப் கனடாவில் வேலை செய்தபோது பொருளாதார சீர்குலைவு சூழ்நிலையைப் பார்த்திருக்கிறேன். பேங்க் ஆஃப் இங்கிலாந்திலும் ஆளுநராக பணியாற்றியுள்ளேன். அப்போது பெருந்தொற்று காலம் என்பதால், பல்வேறு சவால்களை சமாளிக்க நேரிட்டது. இப்போது சூழல் சார்ந்த சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. சமூகத்திற்கு மதிப்புகள் முக்கியமானவை. சந்தை மற்றும் சமூகத்திற்கு இடையிலான மதிப்புகளை நாம் உணரவேண்டிய நேரம். நூலில் நான் எழுதியிருப்பது பொருளாதாரம் மற்றும் தத்துவம் சார்ந்த மதிப்புகளைத்தான். எப்படி பல்வேறு விஷயங்கள் காலத்தைப் பொறுத்து மாறுகின்றன. பெருந்தொற்று காலத்தில் நாம் பல்வேறு சவால்களை சமாளித்து அதற்கு என்ன மதிப்பு அளித்தோம் என்பதும் முக்கியமானது.

மதிப்பு தொடர்பான நமது கோணம் என்பது மாறியுள்ளதா?

சந்தையைப் பொறுத்தவரை அதற்கு விலைதான் முக்கியமானது. அதைநோக்கிய பார்வையை கொண்டுள்ளது. இப்போது அமேஸான் என்ற நிறுவனம் உள்ளது. அதன் விலையாக நாம் குறிப்பிட்ட தொகையை கூறலாம். மதிப்பு என்பது அதிலிருந்து வேறுபட்டது. நம்பிக்கை, செயல்பாடு பற்றியது. அண்மையில் நாம் அனுபவித்த பெருந்தொற்று காலம் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு அதிக மதிப்பளிக்கவேண்டும், அதனை ஊக்கப்படுத்தவேண்டும் என்ற படிப்பினையை வழங்கியிருக்கிறது.

மேற்குலக நாடுகளில் முதலாளித்துவ கொள்கை சந்தையை தடுமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறதல்லவா?

புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோரது பங்களிப்பு கிடைத்தால் இப்போதுள்ள பொருளாதார பிரச்னைகளை சமாளித்துவிட முடியும். இப்போது நேர்ந்துள்ள முதலாளித்துள பிரச்னைகள் என்பது அதன் ஆபத்துகளை மட்டும் பார்ப்பதால் ஏற்படுவதாக நினைக்கிறேன்.  சந்தை பற்றிய பல்வேறு முன்முடிவுகள் எடுக்கப்படுவதால் அதன் நிலை சீர்குலைவதாக நான் நினைக்கிறேன். சந்தை மதிப்பு, சமூக மதிப்பு என இரண்டுமே சமநிலையில் இருப்பது அவசியம்.

கொரோனா காலத்தில் சந்தை மதிப்பு, சமூக மதிப்பு என இரண்டும் சந்திப்பது முக்கியமானதா என்பதை விளக்குங்களேன்.

பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலானோர் தங்களது சேமிப்புத்தொகையைக் கூட தேவைக்கான பொருட்களை வாங்கவும் மருத்துவத்திற்கும் செலவு செய்தனர்.அப்போதைக்கு பெரும்பாலான முதலீடுகள் மருத்துவப் பாதுகாப்பிற்கெனவே செலவிடப்பட்டது. இப்போது சூழல் சார்ந்த சிக்கல்கள் எழத் தொடங்கியுள்ளன. நாம் அதனை சமாளிப்பதற்கான திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும். கார்பன் வெளியீட்டை பூஜ்ஜியமாக்கும் செயல்பாடுகளைச் செய்யவேண்டும். இதுதான் சமூகத்தையும் சந்தையையும் ஒரே மாதிரியான தன்மையில் செலுத்தும்.

இங்கிலாந்தில் தாஸ்குப்தாவின் தலைமையிலான பல்லுயிர்த்தன்மை பொருளாதாரம் பற்றி அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், எப்படி அரசு பல்வேறு இயற்கையை மேம்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தோற்றுப்போனது என்று கூறப்பட்டுள்ளது. இதைப்பற்றி தங்கள் கருத்து?

அதிக செலவின்றி எப்படி கார்பன் வெளியீட்டை குறைப்பது என்பதைப் பற்றி நிறையப் பேர் கேள்வி கேட்கிறார்கள். பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டால், ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  நான் ஒரு தொழிற்சாலையைக் கட்டுகிறேன் என்றால், அதனால் பறவைகள் பாதிக்கப்படலாம். அப்போது பறவைக்கான விலை என்ன, அதனை எப்படி ஈடுசெய்யப்போகிறோம். மனிதர்களும் இயற்கையில் ஒரு பகுதி என்பதை மறந்துவிடக்கூடாது என்பதை தாஸ்குப்தா அறிக்கை விளக்கி கூறியிருக்கிறது.

நீங்கள் கூறுவதை எப்படி சாத்தியப்படுத்துவது?

சந்தை வளர்ந்துள்ளது. எனவே, அதில் கிடைக்கும் பணம் மூலம் இயற்கையை செழுமையாக்க குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கலாம்.நிறுவனங்கள் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதோடு, காடுகளை வளர்ப்பது பற்றியும் முயற்சி செய்யலாம். ஆனால் தாஸ்குப்தா கூறியது போல இதற்கென தனி கணக்கு அமைப்பு ஒன்றைத் தொடங்கி பராமரிக்க வேண்டும். அப்போதுதான் இயற்கை மேம்பாட்டுத்திட்டங்களை எளிதாக கண்காணிக்க முடியும். இயற்கை என்பது தொழில்துறைக்கு முக்கியமான முதலீடு. எனவே அதனை குறுகிய கால முதலீடாக பார்ப்பது தவறானது.

புதிய தொழில்நுட்பங்கள் தேவை என்று நூலில் கூறியிருந்தீர்கள். அதைப்பற்றி விளக்குங்கள்.

புதிய பொறியியல் நுட்பங்கள் நமக்கு தேவைப்படுகின்றன. இன்று இயற்கையில் ஏற்படும் பல்வேறு சேதங்களுக்கு மூன்றில் இருபங்கை தொழில்துறை பொருளாதார ரீதியாக கொடுத்துவிட முடியும். பசுமை ஹைட்ரஜன் போன்றவற்றை  நாம் சரக்கு வண்டிகளுக்கு பயன்படுத்தலாம். வெப்பநிலை 2 சதவீதம் உயராமல் இருக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். இதில் பொருளாதார உதவிகள் முக்கியமானவை. தகவல்தொடர்பு, பொருளாதார கருவிகள், விலையை தீர்மானிப்பதற்கான மென்பொருட்கள் தேவைப்படுகின்றன.

அண்மையில் இங்கிலாந்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று மூடப்படாமல் மேம்படுத்தப்படுவதைப் பற்றி அறிந்தேன். இதைப்பற்றி தங்கள் கருத்து?

முந்தைய அரசியல்வாதிகளை விட இன்றைய அரசியல்வாதிகள் பரவாயில்லை என்று கொள்கை அளவில் கூறலாம். இங்கிலாந்தில் பசுமையை காப்பதற்கான உறுதியான கொள்கைகள் இன்னும் உருவாகவில்லை என்பது உண்மை. ஆனால் நாடு அந்த வழியில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. பெட்ரோல் டீசல் வாங்குபவர்களிடம் சூழல் பற்றியவ விழிப்புணர்வு செய்வது முக்கியம். அப்போது அவர்களாகவே மின் வாகனங்களை வாங்குவார்கள்.

பிரான்சில் எரிபொருள் விலையுயர்விற்கு போராட்டம் நடைபெற்றதை அறிவீர்கள். அங்கு கார்பன் வரியும் அமலில் உள்ளது. இதுதொடர்பாக ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கார்பன் வரி என்பதை ஒரேவிதமாக தீர்மானித்து நடைமுறைப்படுத்தவேண்டும். இல்லையெனில் அந்த திட்டம் வெற்றியடை வாய்ப்பு குறைவு. எரிபொருளை வாகனங்களுக்களும் வீட்டை வெப்பப்படுத்தவும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால்  எரிபொருள் விலை உயர்ந்தால், அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.


pixabay


















கருத்துகள்