காகிதத்தில் கலைப்பொருட்களை செய்து அசத்தும் கிருஷ்ணா!

 பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர், கிருஷ்ணா. இவர் செய்தித்தாள், பழைய காகிதங்கள் என எதையும் விட்டு வைக்காமல் அதில் கலைப்பொருட்களை செய்வதில் தேர்ந்தவர். தனது கலைப்பொருட்களை பல்வேறு அரசியல் பிரபலங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். அண்மையில் டெல்லிக்குச் சென்ற தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், கிருஷ்ணாவின் காகித கலைபொருட்களை வாங்கிக்கொண்டுதான் சென்றார். இதற்காக அவர் விமானநிலையத்தில் பொறுமையாக காத்திருந்தார் என்பதுதான் முக்கியமானது. 

கிருஷ்ணா புதிய தூரிகை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் கிராம பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரது குரு அன்பழகன் மூலம் காகிதத்தில் சிற்பங்களை செய்யத் தொடங்கியுள்ளார். பிறகு அதனை பல்வேறு அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தர தொடங்கினார். காகிதத்தில் சிற்பங்களை செய்து அதற்கு வண்ணம் தீட்டி சோதிக்கத் தொடங்கினார். இப்போது அதில் உலோக வண்ணங்களை தீட்டி வருகிறார். 

பார்க்க எளிதாக இருந்தாலும் செய்வது கடினமானதுதான். குறிப்பிட்ட சிலை மாடலை பார்த்து, காகிதத்தை வளைத்து சிற்பங்களை செய்கிறார். இதில், சிலை அமைப்பை கச்சிதமாக செயத மூங்கில் குச்சிகளையும் பசையையும் பயன்படுத்துகிறார். பிறகு, அனைத்து வேலைகளும் முடிந்தபிறகு தங்கநிற வண்ணத்தை பூசுகிறார். நீர் உள்ளிட்ட எந்த திரவப்பொருளும் படாமல் பாதுகாத்தால் 10ஆண்டுகள் தாங்கும் என்கிறார் கிருஷ்ணா. புதுச்சேரில் உள்ள இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றுகிறார். தமிழிசை சௌந்தர்ராஜன் பெற்றுச்சென்ற சிற்பங்களை, பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோருக்கு பரிசாக வழங்கியது பின்னர் தான் கிருஷ்ணாவுக்கு தெரிய வந்துள்ளது. இதன்மூலம் காகித சிற்பக்கலைக்கு புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது. 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 
கருத்துகள்

பிரபலமான இடுகைகள்