ஒப்பந்தமுறை விவசாயத்தில் கிடைக்கும் லாபம்!

 











விவசாயத்தோடு கைகோக்கும் தொழில்நுட்பம்!


2013ஆம் ஆண்டு ஹரியாணாவின் குர்கானில் பார்த்து வந்த தகவல் தொழில்நுட்ப பணியை விட்டு விலகினார் சச்சின் காலே. அவரது குடும்பத்தினர் அடுத்து என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டனர்.  அப்போது சச்சினுக்கு, அவரின் தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது. நீ ஏன் பிறருக்காக உழைக்கவேண்டும். உனக்காக உழைக்கலாமே என்ற வாசகத்தை நினைவில் கொண்டு, ”விவசாயம் செய்யப்போகிறேன்” என்றார். 

 விரைவிலேயே தனது சத்தீஸ்கர் மாநிலத்திற்கு திரும்பினார். சச்சினின் குடும்பத்திற்கு சொந்தமாக  24 ஏக்கர் நிலம் இருந்தது. விவசாயம் செய்த முதல் ஆண்டில் நஷ்டம் ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட தவறுகளை விரைவில் சரிசெய்துகொண்டார். பருவகாலங்களில் நெற்பயிர்,  பிற காலங்களில் காய்கறிகளையும் பயிரிட்டு வென்றார். தனது விவசாய முறைகளைப் பற்றி விவசாயிகளுக்கு கூற  2014ஆம் ஆண்டு இன்னோவேட்டிவ் அக்ரிலைஃப் சொல்யூஷன்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார். 

சச்சின் காலே, ஒப்பந்த முறை விவசாயத்தை பற்றி ஆய்வு செய்து, அதைப்பற்றி விவசாயிகளுக்கு பிரசாரம் செய்து வருகிறார். சச்சினின் செயல்பாட்டால், தற்போது விவசாயிகளின் நிலங்களில் ஆண்டு முழுவதும் பல்வேறு வகை பயிர்கள், காய்கறிகள் விளைந்து வருகின்றன. இன்று இன்னோவேட்டிவ் அக்ரிலைஃப் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் வருமானம் 2 கோடி ரூபாயை எட்டியுள்ளது. 200 ஏக்கர்களுக்கும் அதிகமான விளைநிலங்கள், 137 விவசாயிகளோடு கைகோத்து செயல்பட்டு வருகிறார் சச்சின் காலே. “ எங்களது நிறுவனம், விவசாயிகளின் நிலத்தை வாங்குவதில்லை. அவர்கள் விளைவிக்கும் பொருட்களை மட்டுமே வாங்கி விற்கிறோம். கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட பங்கையும் அவர்களுக்கு வழங்கி வருகிறோம்” என்றார் சச்சின் காலே. 


https://www.thebetterindia.com/94285/sachin-kale-innovative-agrilife-solutions-engineer-turned-farmer/


கருத்துகள்